ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க நடவடிக்கைகள்
பற்றிய ஒரு நாட்குறிப்பு
மோ.சங்கர்
மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தும் முன்னரே, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் 18.03.2020 அன்றே தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் ரூ.15000, முகக்கவசம், கை கழுவும் கிருமி நாசினி, வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது
. மாநில துணைத் தலைவர் தோழர் ரமேஷ் உமாபதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விவரம் மிக பரவலான ஊடக கவனம் பெற்றது. இந்தப் பின்னணியில் 23.03.2020 அன்று தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என நிவாரணம் அறிவித்தது.
இந்த வழக்கு 24.03.2020 விசாரணைக்கு வந்த போது, வழக்கு நடத்திய தோழர் பாரதி வழக்கை விரைந்து விசாரித்து, மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தினார். அரசு தரப்பில் வாதாடிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அறிவித்துள்ளதால், வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தினார். நீதிமன்றமும், வழக்கப்படி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
பிரச்சனை தாமதமானதால் தோழர் பாரதி ரூ.15,000 கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு 24.04.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அரசின் நிதிக்கொள்கையில் தலையிட முடியாது என்று காரணம் சொல் லப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த கோரிக்கையை ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் முகநூலில் யூட்யூபில் எடுத்து சென்றபோது, 97,460 பேர் அந்தச் செய்தியைப் பார்த்துள்ளனர். 6200 பேர் பகிர்ந்துள்ளனர். 1,100 லைக் தெரிவித்தனர். 317 பேர் கருத்து சொல்லியுள்ளனர்.
26.03.2020 அன்று மீண்டும் ரூ.15000 கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. வீடடற்றவர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வங்கிகள் மாதாந்திர கடன் வட்டி ஏப்ரல் மே மாதங்களில் வசூலிக்க வேண்டாம் என மாநில அரசு, மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வீட்டு வாடகைச் சுமையிலிருந்து 3 மாதங்கள் பாதுகாப்பு, மின்கட்டணம் 2 மாதங்கள் விலக்கு, காவல்துறை பொது மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும், மக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் தரப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
11.04.2020 மற்றும் 15.03.2020 தேதிய மனுக்கள் மூலம் மீண்டும் ரூ.15,000 கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கட்டுமான மற்றும் அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 வழங்கும்போது, அவர்கள் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே தரப்படும் என்ற நிபந்தனை உள்ளது. வாரிய உறுப்பினர்களான அமைப்புசாரா தொழிலாளர்கள் புதுப்பிக்கத் தவறினால் புதுப்பிக்க வலியுறுத்துவது, வாய்ப்பு தருவதுதான் சரியே தவிர, நலப்பயன்கள் தர மறுப்பது சரியல்ல என முறையிடப்பட்டது. மளிகைப் பொருள் ரூ.500 விலையில்லாமல் தருமாறும் கோரப்பட்டது.
அமைப்புசாரா, கட்டுமானத் தொழிலாளர் கோரிக்கைகள் மீது தொடர்பாக உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள் ளது. வழக்குகள் இணையம் மூலம் நடப்பதால் தாமதமாகிறது. சங்கத்தினருக்கு எப்போதும் உதவுகிற வழக்கறிஞர் திரு.கே.எம்.ரமேஷ் புதுப்பித்தல் நிபந்தனையை நீக்குமாறும் தொகையை உயர்த்துமாறும் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு 22.04.2020 அன்று விசாரிக்கப்பட்டது. அதனோடு சேர்த்து இந்த பிரச்சனையை நீதிமன்றம் கொண்டு செல்ல அமைப்பு தயாராகிறது.
ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர் நலன்சார் நடவடிக்கைகள்
தமிழ்நாடெங்கும் சுமார் 45,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில் ஏகப்பெரும்பான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிகரான வாழக்கையையே கொண்டுள்ளனர். எவ்வளவு வருடங்கள் பணியாற்றினாலும், கவுரவமான வருமானம் எட்டாக்கனியாகவே உள்ளது.பொதுவாகவே இவர்களுக்கு நிவாரணம் வலியுறுத்தும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கொரோனா காலத்தில் இவர்களின் துயரத்தை எடுத்துச் சொன்னது. மாநில அகில இந்திய பார் கவுன்சில்களிலும் ரூ.20000 நிவாரணம் கேட்டு 26.03.2020, 27.03.2020 தேதிகளில் மனு தந்தது. மூத்த வழக்கறிஞர்கள் விஜயகுமார் ரூ.10,000, பதர் சையத் ரூ.10,000, ரவீந்திரன் ரூ.10,000, ஆரூன் சையத் ரூ.1000, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகேஷ்வரன் ரூ.3,000 கண்ணன் ரூ.800, அருண் நடராஜன் ரூ.3,000, ஜ÷லிக் ரூ.3,500, சாய் அசோசியேட்ஸ் ரூ.5,000, நாகராஜ் அசோசியேட்ஸ் ரூ.5,000, கும்பகோணம் வழக்கறிஞர் மொராஜ் ரூ.1,000 என வழக்கறிஞர்களுக்கு உதவ சங்கம் சொன்ன கணக்கில் பணம் அனுப்பினர்.
சங்கமும் 26 வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.2,000 என ரூ.52,000 நிதி வழங்கியது.
07.04.2020 அன்று தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் கடுமையான நிபந்தனைகளுடன் ஒரு நிவாரணத் திட்டம் அறிவித்தது. கடுமையான நிபந்தனைகள் கைவிடப்பட வேண்டும் என, சங்கம் 07.04.2020ல் ஒரு மனு தந்தது. 15.04.2020 சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட, பதிவு செய்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வேறு சில வழக்கறிஞர் அமைப்புகளையும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உதவிக்கரம் நீட்ட உந்துதல் தந்துள்ளன.
மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்
தடைகள் பல இருந்தபோதும், கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மய்ய தோழர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் அவர்களோடு இணைந்து செயலாற்றியது. ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் தோழர் பாரதி தலைமை தாங்கும் மெட்ராஸ் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், மெட்ராஸ் போட் கிளப் தோழர்கள் ரூ.6,000, கோஆப்டெக்ஸ் ஊழியர் சங்கம் ரூ.14,116 நிதி தந்தனர். பேராசிரியர் முருகன் ரூ.10,000, ஜ÷லிக் ரூ.2,600, எப்போதும் கேட்டு உதவும், ஹோன்டுராஸ் நாட்டில் பணியாற்றும் தோழர் வினோத் ரூ.26,000 என நிதியளித்தனர்.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர்களில் ஒருவரான தோழர் மோகன்ராஜ், செங்கை மாவட்ட மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் தோழர்கள் கோகுல், ராஜசேகர், திலீப்குமார் ஆகியோர், 22.04.2020 அன்று கீரப்பாக்கத்திலும் தண்டரையிலும் வாழ்வாதாரம் இழந்த 10 குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் செய்தனர்.
தோழமை அமைப்புகளோடு சேர்ந்து காமராஜபுரம், கல்யாணபுரம், சிவானந்தா நகர், ஒரகடம், ஏரிக்கரை கேகே.நகர், ராமாபுரம், மங்களபுரம் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்ட மக்களுக்கும், அம்பத்தூர் தொழில்பேட்டை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர்களுக்கும், நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த வேலைகளில் தோழர்கள் பழனி, சுரேஷ் ரமேஷ் உமாபதி, விஜய், சங்கர், புகழ் வேந்தன் ஜ÷லிக், நிவேதா, விக்னேஸ்வரன், வருண்பாரதி இணைந்து பணியாற்றினர்.
13.04.2020 அன்று நிவாரணம் வழங்க தடை விதிக்கப்பட்ட அறிவிப்புக்கு எதிராக வழக்கு போட மனு தரப்பட்டது. 14.04.2020 அன்று கல்யாணபுரம், அம்பேத்கர் பொது நல மன்றத்துடன் இணைந்து 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி என ரூ.45,000 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜனநாயகம் காக்க, மக்கள் நலன் காக்க ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் தயாராகி வருகிறது.