கொரோனா காலத்து எல்டியுசி ஹெல்ப்லைன்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்தவுடனேயே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கம்யூனிஸ்ட் கட்சி, எல்டியுசி, மக்களுக்கான இளைஞர்கள் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க தோழர்கள் உதவி எண்களை அறிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கிய இந்த முயற்சி பிறகு, கோவை, செங்கல்பட்டு, அம்பத்தூர் என விரிந்தது. உணவுப் பொருட்கள் விநியோகிக்கச் சென்ற தோழர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளி இருப்பதையும் உறுதி செய்தனர்.
எல்டியுசி ஹெல்ப்லைன், காஞ்சிபுரம்: 9786255395, 9884436640
எல்டியுசி ஹெல்ப்லைன், கோவை: 9944063035, 9994812037
எல்டியுசி ஹெல்ப்லைன், அம்பத்தூர் 7358214170, 9841482152
எல்டியுசி ஹெல்ப்லைன், திருவள்;ர் 9444667973
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் ஹெல்ப்லைன்: 97102 63648
27.03.2020, காஞ்சிபுரம்
ஒரகடம் அருகில் மேட்டுபாளையம் கிராமத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 40 பேர் தங்களுக்கு அரிசி வேண்டும் என்று எல்டியுசி ஹெல்ப் லைனில் 25.03.2020 அன்று தொடர்பு கொண்டனர்.
அவர்களை திருபெரும்புதூரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தோம். அவர் திருபெரும்புதூர் வரமுற்பட்டபோது காவல்துறை கெடுபிடியால் அவர்களால் வர முடியவில்லை. எனவே 27.03.2020 அன்று, 75 கிலோ அரிசியுடன் எல்டியுசி ஹெல்ப் லைன் குழு நேரில் சென்றது. அரசியை கொடுத்து தனித்தனி அறைகளுக்கு பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தோம்.
கூட்டமாக பேச முடியாது என்பதால் அவர்களின் மற்ற பிரச்சனைகளை தெரிந்து கொள்ள முடியவில்லை. உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு தோழர்கள் திரும்பினர்.
30.03.2020, காஞ்சிபுரம்
குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகில் வட்டம்பாக்கம் கிராமத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்கள், 29.03.2020 அன்று பன்னாட்டு நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர் மூலம் தொடர்பு கொண்டனர்.
எல்டியுசி ஹெல்ப் லைன் குழுவைச் சார்ந்த தோழர் லியோ பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் தேவையை கேட்டறிந்தார். 30.03.2020 அன்று எல்டியுசி ஹெல்ப் லைன் குழு தோழர்கள் கே.ராஜேஷ் ;, லியோ, மணி, ரோசரியோ ஆகியோர் அரிசி. மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என 5 குடும்பங்களுக்கு ரூ.6,100 மதிப்புள்ள பொருட்களை விநியோகித்தனர்.
ஆதரவற்ற வயதான மூதாட்டி, கணவனை இழந்த பெண், கணவனைப் பிரிந்து வாழும் அவருடைய மகளும், மகளின் 2 வயது குழந்தை, கணவனை இழந்த பெண், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மகள், நிரந்தரமற்ற வேலைக்கு செல்லும் மகன், ஒரு கை, கால் செயலிழந்த முதியவர், மனைவி, மகள், மகன், அறுபது வயதான கணவன், மனைவி என ஐந்து குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் தரப்பட்டன.
அவர்களது வீடு வெயில் காலத்தில் மட்டுமே வாழக் கூடியதாக இருந்தது. தலைநகருக்கு அருகிலுள்ள இந்த கிராமத்தில் ஏராளமான குடிசை வீடுகளைப் பார்க்க முடிந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு இல்லாத நாட்களிலும் அவர்களது வாழ்க்கை வறுமை நிறைந்ததே.
01.04.2020, கோவை
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் காஞ்சிபுரம் மாவட்ட எல்டியுசி முயற்சிகள் பற்றிய செய்தியை முகநூல் வாயிலாக கேள்விப்பட்ட, பிரிக்கால் தொழிலாளர் போராட்ட காலத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டு (2009) கணக்கு முடித்துக் கொண்ட முன்னாள் பிரிக்கால் தொழிலாளி தோழர் மணி அலெக்ஸ், கோவை எல்டியுசி முன்னணிகளை தொடர்பு கொண்டார். தான் வசிக்கும் திருமலைநாயக்கன்பாளையத்தில் வடமாநில தொழிலாளர் குடும்பங்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருப்பதாக தெரிவித்தார். தோழர்கள் ரதிஸ்குமார், ஜேபி இருவரும் சென்று விசாரித்துவிட்டு அந்த குடும்பங்களுக்கான உடனடி அத்தியாவசிய பொருட்களான மளிகை சாமான்களை வாங்கி, கோவை எல்டியுசி சார்பாக கொடுத்து வந்தனர். அவர்களிடம் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிததனர்;.
01.04.2020, காஞ்சிபுரம்.
குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலத்தில் உள்ள அண்ணாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த, ஆதரவற்ற, வயதான மற்றும் வறுமையில் வாழ்கிற 5 குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் என உணவுப் பொருட்களை எல்டியுசி ஹெல்ப் லைன் குழுவின் தோழர்கள் கோபால், தோழர் ராஜகுரு, தோழர் சத்தியமூர்த்தி மற்றும் பகுதி இளைஞர்கள்; விநியோகித்தனர்.
02.04.2020, அம்பத்தூர்
அம்பத்தூர் 85ஆவது வார்டு, ஓவி அழகேசன் நகர் முருகன் திரையரங்கம் அருகில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு அம்பத்தூர் இடது தொழிற்சங்க மய்யம்; முயற்சியில் தோழர்கள் புகழ்வேந்தன், பாலசுப்பிரமணியன், மோகன் தலைமையில் தலா 5 கிலோ அரசி, மளிகை, காய்கறிகள் தரப்பட்டது.
02.04.2020, திருவள்ளூர்
எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் ஜேம்ஸ் அவர் குடியிருக்கும் பகுதியான சமத்துவபுரத்தில் (மணவாளன் நகர் அருகில்) கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி ஏற்பாடு செய்து வழங்கினார்.
02.04.2020, காஞ்சிபுரம்
இருங்காட்டுக்கோட்டை அருகில் காட்ராம்பாக்கம் ஊராட்சியில் 80க்கும் மேற்பட்ட அசாம் தொழிலாளர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உணவிற்கு சிரமப்படுவதாகவும், உதவுமாறும் தோழர் சந்திரிகா (தொழிலாளர் கூடம்) அவர்களை தொடர்பு கொண்டனர். 01.04.2020 அன்று எல்டியுசி ஹெல்ப்லைனில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுமாறு தோழர் சந்திரிகா கேட்டுக் கொண்டார்.
தோழர்கள் எஸ்.குமாரசாமி, தோழர் கே.ராஜே~; ஆகியோர் 100 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை நேரில் சென்று வழங்கினர்.
அந்தப் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் உதவி தேவைப்படுகிறது என்பதை பார்க்க முடிந்தது.
02.04.2020, காஞ்சிபுரம்
திருபெரும்புதூரில் எல்டியுசி அலுவலகம் இருக்கும் சிவன்தாங்கல் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர், கணவனை இழந்தோர், மாற்றுதிறனாளி போன்ற குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண எல்டியுசி அலுவலகக் கட்டிட உரிமையாளர் திரு.குப்புசாமி உதவினார். அவரது பங்களிப்பாக ரூ.1500 நிதி உதவி செய்தார். காட்ராம்பாக்கம் மற்றும் சிவன்தாங்கல் பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதற்கு வாகன ஏற்பாடு செய்து உடன் பயணித்தார்.
03.04.2020, அம்பத்தூர்
03.04.2020, அம்பத்தூர்: அம்பத்தூர் நகராட்சி 7ஆவது மண்டலம் 85, 86 வார்டுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 100 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அம்பத்தூர் அமைப்புக்குழு தோழர்கள் பழனிவேல், மோகன், வேணுகோபால், முனுசாமி, பசுபதி, பாலசுப்பிரமணியன், சுகுமார், புகழ்வேந்தன், ராஜேந்திரன், லட்சுமி, கோபால் ஆகியோர், பீகார், ஜார்காண்ட், அசாம், ஒடிசாவை சேர்ந்த 11 குடும்பங்களில் இருந்த இந்தத் தொழிலாளர்களை சந்தித்தனர்.
எல்டியுசி ஹெல்ப்லைன் மூலம் முயற்சிகளும் உதவிகளும் தொடர்கின்றன.
தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்கள், ஜூனியர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வழக்கறிஞர்கள், கிராமப்புற வழக்கறிஞரகள்; ஆகியோருக்கு நிதி உதவி கேட்டு மூத்த வழக்கறிஞர்களிடமும், நிதி அளிக்க வாய்ப்புடைய வழக்கறிஞர்களிடம் வேண்டு கோள் விடுத்த நிலையில், வழக்கறிஞர்கள் பலர் ஜனநாயக வழக்கறிஞர் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சங்கர் வங்கி கணக்கிற்கு ரூ.29300 அனுப்பினர்;. இந்த நிதியில் இருந்து தற்போது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் 14 பேருக்கு தலா ரூ.2000 அனுப்பி வைக்கப்பட்டது. முன்முயற்சிகள் தொடர்கின்றன.