கொள்ளை நோய்களும் கொரோனாவும்
பாதிப்பும் அணுகுமுறையும்
எஸ்.குமாரசாமி
ஏப்ரல் 3, 2020 மதியம் 3 மணி
கொரோனா உயிரிழப்பு விவரங்கள்
அய்க்கிய அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் 02.04.2020 வரையிலான கொரோனா உயிரிழப்பு கணக்கு ஒன்று தந்தது. அதன்படி 181 நாடுகளில் 9,81,221 பேர் நோய் தொற்றுக்குள்ளாகி, 2,08,630 பேர் மீண்டுள்ளனர். 50,230க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஆசிய நாடுகளில் சீனாவும், ஈரானும்தான் பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. இந்தியா வில் மாநிலங்கள் வாரியாகத் தரப்பட்ட விவரங்கள் அடிப்படையில் தொற்று உள்ளவர்கள் 2,331 பேர். குணமடைந்தவர்கள் 174 பேர். உயிரிழந்தவர்கள் 73 பேர்.
நோய் ஆபத்தின் தீவிரம் சில நாடுகளில் மேலும் அதிகமாகி பிறகே வடியும் என சொல்லப்படுகிறது.
உலகத்தில் இருநூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள், கதவுகளுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். கொரோனா முதலும் முடிவுமான கொள்ளை நோயல்ல. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ, இது வரை கண்டறியப்படவில்லை. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா எல்லாம் தாண்டி, கொரோனா நம்மை வாட்டி வதைக்கிறது.
கொள்ளை நோய்கள்
கொள்ளை நோய்கள் பற்றி ஒரு சிறு அறிமுகம் என கிறிஸ்டியன் டபிள்யு. மெக்மில்லன் எழுதிய நூலும், ஹோமோ டயஸ் என யுவால் நோவா ஹராரி எழுதிய நூலும் கொள்ளை நோய்கள் பற்றிய தகவல்களுக்கு ஆதாரமாய் அமைந்தன.
பிளேக்
பிளேக் மனிதகுலத்தை நடுநடுங்க வைத்த கொள்ளை நோய். கருப்பு மரணம் என்றழைக்கப்பட்ட பிளேக் 541ஆம் ஆண்டு எகிப்தின் பெலூசியம் துறைமுகத்தை தாக்கியது. பிளேக் ஆறாவது, ஏழாவது, எட்டாவது நூற்றாண்டுகளில் அய்ரோப்பாவை ஆட்டிப் படைத்தது. பிளேக்கின் இரண்டாவது பெரிய தாக்குதல் அய்ரோப்பா மீது 1347 முதல் 1353 வரை நடந்தது. இதற்குள் அய்ரோப்பாவின் மக்கள் தொகையில் பாதி பேர் உயிரிழந்துவிட்டனர். பிரான்சின் மார்சேல்ஸ் நகரத்தில் 5ல் 4 பேர் உயிரிழந்தனர்.
விவசாய உபரி, கடல் வழி வர்த்தகம், கண் டங்களுக்கிடையில் வர்த்தகம், நகரங்கள் உருவாக்கம், அடர்த்தியான மக்கள் சேர்க்கை காலத்தில் எலிகள் வழியாக நோய் பரவியது. பிளேக் நோய்க்கு பிறகே, அய்ரோப்பாவின் கழிவகற்றும் சாக்கடைகள் நவீனமயமாகத் துவங்கின. பிளேக் நிச்சயமாய் ஏழைகளை ஆகக் கூடுதலாய்த் தாக்கியது.
இன்று இந்துத்துவ ஆட்சியாளர் காலத்தில், மற்றமை கொரோனாவாக இசுலாமிய வைரசாக வாட்ஸ்அப் மூலம் சாமான்ய மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படுகிறது. அன்று, மற்றமையாக, தீய சக்திகளாக, பிளேக்கை வர வைத்தவர்களாக, 1000 யூத குடியிருப்புக்கள் அழித்தொழிக்கப்பட்டன.
பிளேக் ஆசியாவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் 19ஆம், 20ஆம் நூற்றாண்டு வந்தது. 1897 ஜ÷ன் மாதம் பிரிட்டிஷார் கொள்ளை நோய்கள் சட்டம் 1897 கொண்டு வந்தனர். குடும்பங்கள் பெண்கள் கூட கட்டாயமாய்த் தனிமைப்படுத்தப்பட்டனர். பிளேக் ஆணையர் டபிள்யு.சி.ராண்ட், அவர் பாதுகாப்புக்கு இருந்த ராணுவ அதிகாரி அயர்ஸட் ஆகிய இருவரை, இந்திய கலாச்சாரத்தை இழிவு செய்ததற்காக, புனேவில் சபேகர் சகோதரர்கள் கொன்றார்கள். (அந்நிய எதிர்ப்பு தேசபக்தியும், மத நம்பிக்கையும் கலந்து இருந்தது, வரலாற்றின் நிகழ்வே ஆகும்).
கோடி கோடியாய் கொள்ளை நோய் கொன்று குவித்ததால், வேலைக்கு ஆள் கிடைக்காமல் போனது. நிலவாடகையை குறைக்க நேர்ந்தது. கூலி உயர்ந்தது. சம்பள உயர்வுக்கு வரம்பு, கட்டாயமாய் வேலை செய்ய வைக்க, வேலை செய்ய மறுப்பவர்களைத் தண்டிக்க, 1349ல் தொழிலாளர் அவசர சட்டமும், 1351ல் தொழிலாளர் சட்டமும் இங்கிலாந்தில் கொண்டு வரப்பட்டன.
அம்மை
கடல் கடந்து காலனி பிடிக்க ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் புறப்பட்டன. புராதன மூலதன திரட்சிக்கு, காலனி பிடித்தல் அடித்தளம் அமைத்தது. மூலதனம் பிறக்கும் போதே, உச்சி முதல் உள்ளங்கால் வரை ரத்தமும் சகதியும் கொண்டிருந்தது என்றார் மார்க்ஸ்.
காலனியக் கொள்ளையை, காலனிமயமாக்கத்தை, ஸ்பெயினே துவக்கி வைத்தது. அமெரிக்க கண்டத்திற்கு, ஸ்பெயினிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து மெக்சிகோ என, ஸ்பெயினின் கடற்படை, துப்பாக்கிகளோடு, குதிரைகளோடு, படைகளோடு, மார்ச் 1520ல் நுழைந்தது. கொள்ளையர்கள், அம்மை என்ற கொள்ளை நோயையும் கொண்டு போனார்கள். மார்ச் 1520ல் 2.2 கோடியாக இருந்த மெக்சிகோவின் மக்கள் தொகை டிசம்பர் 1520ல் 1.4 கோடியானது. 1580ல் 20 லட்சத்திற்கும் குறைவானது. அஸ்டெக் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி அம்மை நோயால் மடிந்தார். சாம்ராஜ்ஜியமும் சரிந்தது.
1967ல் 1.5 கோடி பேரை தொற்றி, 20 லட்சம் உயிர்ப்பலி வாங்கிய அம்மை நோய், தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு, முடிந்து போன நோய் என உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
மலேரியா
காடழித்து சதுப்பு நிலங்களை மீட்டு, தோட்டப் பயிர்கள் வைக்கும்போது, விவசாய நிலங்களை விரிவுபடுத்தியபோது, கிணறு வெட்டப் புறப்பட்ட பூதம் போல் மலேரியாவும் புறப்பட்டது. கொத்து கொத்தாய் பலி வாங்கிய கொள்ளை நோய், மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கட்டுக்குள் வந்துள்ளது.
காச நோய்
தொழில்மயமாதலோடு சேர்ந்து தோன்றிய நோய், பாட்டாளிகளையும், அவர்கள் குடும்பத்தினரையும், அய்ரோப்பாவில், ஆசியாவில், அய்க்கிய அமெரிக்காவில் லட்சலட்சமாய் கொன்று தின்றது. அமெரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடியினரும் நோய்க்கு இரையானார்கள்.
காலரா
வயிற்றுப் போக்கால் உயிர் போக வைத்த நோய். சில நாட்களுக்கு கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சக்கரை, கொஞ்சம் நல்ல தண்ணீர் கொடுத்து, லட்சலட்சமாய் மனிதர்களை இந்த நோயிலிருந்து காப்பாற்ற முடிந்தது. ஆனால் காலராவும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த கொள்ளை நோய். கோடி கோடி பேரைக் கொன்றது. ஏழ்மையும், சுத்தமான குடிநீர் இல்லாமையும், நோய்க்கான காரணங்கள்.
இன்ஃபுளுயென்சா
1918 - 1919ல் 50 கோடி பேரை தாக்கிய நோய், 5 கோடி பேரை கொன்றது. 10 கோடி பேர் வரையிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை இருக்க கூடும் என்றும் சொல்கிறார்கள். இந்தியாவில் உடனிருந்து கவனித்த பெண்களை நோய் அதிகம் பலிவாங்கியதால், அடுத்த சில ஆண்டுகள் பிறப்பு விகிதமே வெகுவாகக் குறைந்ததாம்.
எச்அய்வி எய்ட்ஸ்
நோய் எதிர்ப்பை பறிக்கும் நோய். ஒருவருக்கு வந்தால், மரணம் நிச்சயம் என்று இருந்த நோய். ஒவ்வொரு அரை மணி நேரமும் ஒருவரைப் பலி வாங்கிய நோய். தாயிலிருந்து குழந்தைக்குப் பரவும் நோய். எந்த கண்டத்தையும் விட்டுவைக்காத நோய்.
ஒருவழியாய் மருந்து கண்டறிந்துள்ளார்கள். நெவராஃபைன். ஆண்டுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடியே 12 லட்சம் வரை சிகிச்சைக்கு தேவைப்படும். ஆன்ட்டி ரிட்ரோ வைரல் தெரபி 2000ல் சில ஆயிரம் பேருக்கு தரப்பட்டது. இப்போது 20 லட்சம் பேருக்கு தரப்படுகிறது.
மருந்து கண்டுபிடிக்க முடியும் என்றால், அதைக் குறைந்த விலையில் கொடுத்தாக வேண்டும் என்ற அரசியல் மருந்தும் வேண்டும் என்ற கோரிக்கை, இந்த நோயை ஒட்டி முன் எடுக்கப்பட்டது.
நோய்களின் மரண விகிதம் எனச் சொல்கிறார்கள். இஅநஉ ஊஅபஅகஐபவ தஅபஉ. சார்ஸ் நோயின், மரண விகிதம் 9.4%. அம்மையில் 30%. எபோலாவில் 50%. கோவிட்டில் இது 2.3%தான். ஒட்டுமொத்த பின்புலத்தைச் சொல்லவே, இந்த விவரங்கள் தரப்படுகின்றன. மற்றபடி ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.
மேலை நாடுகள் பெரிய விலை தருகின்றன
இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் நவதாராளவாதம் சிக்கன நடவடிக்கைகளை முன்தள்ளியது. கடந்த காலத்தை தவறாக துணைக்கழைத்து, நிகழ்காலத்துக்கு ஆசை காட்டி, வருங்காலத்துக்கு வேட்டு வைக்கும் நவதாராளவாதம், முதியவர்கள், ஓய்வூதியர்கள், நலிந்தவர்கள் நலப்பயன்களையும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொது சுகாதாரத்தையும் பலி வாங்கியது. அய்ரோப்பாவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90% பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் 50% பேர் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
வயதானவர்கள், நலிந்தவர்கள், வித்தியாசமானவர்கள் சுமைதானே, அவர்களால் என்ன பயன், சூப்பர் மனிதர்கள் நிலைத்து நிற்க, மற்றவர்கள் மடிந்தாலென்ன என்ற யூஜெனிக்ஸ், நவதாராளவாதத்தின் பிரிக்க முடியாத ஓர் இழை.
ட்ரம்ப். முரடர். மூடர். ஆனால் கொச்சையான சாமர்த்தியசாலி. வெள்ளையர் ஆதரவை தக்க வைக்கும் வித்தை தெரிந்தவர். அதனால், காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் எல்லாம், வெள்ளை அமெரிக்கர் வேலை வாய்ப்பை பறிக்க வந்த கட்டுக்கதைகள் என்றார். இப்போது மார்ச் 20 தேதி வாக்கிலும் கோரோனா தீவிரம் உணராமல், சீன வைரஸ் என்று விஷம் கக்கும் விசயத்தில் மட்டும் கவனமாக இருந்தார். ஏப்ரல் 12, ஈஸ்டர் பண்டிகை வாக்கில், பொருளாதாரம் மீண்டும் பாய்ச்சலில் செல்ல, அனைத்து தடைகளும் நீங்கும் என்று சொன்னவர், இப்போது பிரச்சனையின் தீவிரத்துக்கு ஏற்ப செயல்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார். சீனத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை விட, 2001, செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கையை விட, அய்க்கிய அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கூடுதல். 10 லட்சம், 20 லட்சம் வரை அதிகபட்ச மரணம் நேரலாம் என்று துவக்கத்தில் பேசப்பட்டு, 1 லட்சம், 2 லட்சம் வரை மரணம் என தப்பிக்கலாம் என்ற பின்னர் குறைந்தபட்ச கணக்கும் வந்துள்ள பின்னணியில், ஊரடங்கு நிலைமைகள் இனியும் சிறிது காலம் தொடரும் என்கிறார். மீட்பு, உந்துதல் திட்டம் ஒன்றையும் முன் வைத்துள்ளார்.
மீட்பு, உந்துதல் திட்டங்கள்
மணிக்கு 10 டாலர் சம்பளம், 99 சதத்தினருக்கான சமூகம் என்ற கோரிக்கைகள் அய்க்கிய அமெரிக்க சமூகத்தில் வேர் கொண்டுள்ளன. மக்கள் சமூகத்துக்கு அரசு பொறுப்பேற்பது, ஏற்றத்தாழ்வுகள் போக்குவது ஆகியவை அரசியல் நிகழ்ச்சிநிரலில் நுழைந்துவிட்டன. மதம் எப்படி தலைகீழ் உலக பிரக்ஞையாக இருக்கிறதோ, அதுபோல், ட்ரம்ப், மோடி பாணி மீட்பர் பிம்பங்களும் வளர்ச்சி மாதிரிகளும் முன்னகர்த்தப்படுவது, 21ஆம் நூற்றாண்டின் புதிய சகஜ நிலையாகும்.
ஜனநாயக கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு போட்டியிட்ட ஒருவர், அனைவருக்கும் மாதம் 1000 டாலர் உத்தரவாதமான ஊதியம் என்றார். இப்போது ட்ரம்ப் 2.2 ட்ரில்லியன் டாலர் மீட்புத் திட்டம் அறிவித்துள்ளார்.
பெரும்தொழில்கள் 580 பில்லியன் டாலர், சிறு தொழில்கள், வர்த்தகத்துக்கு கடன் மானியம் 377 பில்லியன் டாலர், குடிமக்களுக்கு நேரடி பட்டுவாடா 290 பில்லியன் டாலர், தொழில் வர்த்தக வரிவெட்டு 280 பில்லியன் டாலர், விரிவுபடுத்தப்பட்ட வேலையில்லா கால உதவி 260 பில்லியன் டாலர், மருத்துவமனைகள், சுகாதாரம் 180 பில்லியன் டாலர், மாநி லங்கள், உள்ளூர் நிர்வாகங்களுக்கு 150 பில்லியன் டாலர், பொது போக்குவரத்துக்கு 72 பில்லியன் டாலர், சமூகப் பாதுகாப்பு, உணவு, வீட்டு வசதி ஆகியவற்றுக்கு 42 பில்லியன் டாலர், மத்திய நெருக்கடி பேரிடர் உதவிக்கு 45 பில்லியன் டாலர், கூடுதல் கல்வி செலவு 32 பில்லியன் டாலர், தனிநபர் வரிக்குறைப்பு 19 பில்லியன் டாலர், இதர 25 பில்லியன் டாலர் என 2,282 பில்லியன் டாலர், அதாவது 2.282 ட்ரில்லியன் டாலர் மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டாலர் ரூ.75. ஒரு பில்லியன் டாலர் ரூ.7,500 கோடி. மீட்புத் திட்டத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 71 லட்சத்து, 15 ஆயிரம் கோடி கோடிகள்.
செப்டம்பர் வரை கல்விக் கடன் செலுத்த வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது, அடுத்த நான்கு மாதங்களுக்கு வீட்டு வாடகை தர வேண்டாம் என்ற இயக்கம் உருவாகி வருகிறது.
வயது வந்த ஒருவருக்கு 1200 டாலர் (ரூ.90,000) பட்டுவாடா செய்யப்படும். வாரம் 200 டாலர் முதல் 500 டாலர் வரை, மாநிலங்கள் வேலையில்லா காலப்படி வழங்கும் போது, மத்திய அரசு வாரம் 600 டாலர் என நான்கு மாதங்களுக்கு வேலையில்லா காலப் படி தரவுள்ளது.
32 கோடியே 66 லட்சம் மக்கள் உள்ள நாட்டில், ட்ரம்ப், மக்களுக்கு நேரடியாக 600 பில்லியன் டாலர், ரூ.45,00,000 கோடி ஒதுக்கி உள்ளார்.
2019ல் அய்க்கிய அமெரிக்காவின் ராணுவ செலவு 0.646 ட்ரில்லியன் டாலர். அதன் ஓராண்டு மத்திய வருவாய் 3.46 ட்ரில்லியன் டாலர். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 21 ட்ரில்லியன் டாலர். மீட்புத் திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% ஆகும்.
இந்த மீட்புத் திட்டம் நிச்சயம் கவனிக்கத் தக்கதே. பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியின் தீவிரத்தை, மீட்புத் திட்டத்தின் அளவும், மீட்புத் திட்டத்தின் வகையினங்களும் உணர்த்துகின்றன.
தாய்லாந்து 17 பில்லியன் டாலர் (ரூ.1,27,500 கோடி) மீட்புத் திட்டம் அறிவித்துள்ளது. இதில் ரூ.30,000 கோடி மக்கள் கைகளுக்கு நேரடியாகச் சென்று சேரும். மலேசியா 57 பில்லியன் டாலர் (ரூ.4,27,500 கோடி) மீட்புத் திட்டம் அறிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 17% ஆகும். தனிநபர் தற்சமயம் பெறும் வருமானத்தை கணக்கில் கொண்டு, மாதம் ரூ.8,625 முதல் ரூ.13,725 வரை நிவாரணமும் குடும்பத்துக்கு மாதம் ரூ.17,250 முதல் ரூ.27,350 வரை நிவாரணமும் அறிவித்துள்ளது. கட்டணமில்லா இணைய சேவையையும் அளித்துள்ளது.
இந்தியா ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் அறிவித்துள்ளது.
22 லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு.
80 கோடி வறியவர்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு.
20 கோடி பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.500 என ரூ.30,000 கோடி.
8.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 என ரூ.17,400 கோடி.
மாநில கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் உள்ள ரூ.31,000 கோடி.
மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்திய அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதவே போதாது என்பது எளிதில் விளங்கும்.
இந்திய நிலைமைகள்
20.07.2018 நிலவரப்படி, இந்தியாவில் 29,899 மருத்துவமனைகளும், 7,39,024 படுக்கைகளும் உள்ளன. 10,000 பேருக்கு 6 மருத்துவர்கள், 9 படுக்கைகள், 13 செவிலியர்கள் உள்ளனர். 45,000 வென்டிலேட்டர்களும் 70,000 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ளன.
ஜப்பானில் சராசரி வயது 49. அய்ரோப்பாவிலும், அய்க்கிய அமெரிக்காவிலும் சராசரி வயது 45. சீனத்தில் 37. இந்தியாவில் சராசரி வயது 28. 2020ல் 133 கோடியே 20 லட்சம் என்ற இந்திய மக்கள் தொகையில் 16 வயதுக்குள் இருப்பவர்கள் 37.3 கோடி பேர். 17 முதல் 64 வயது வரை இருப்பவர்கள் 88.2 கோடி பேர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7.6 கோடி பேர்.
முதுமை, மற்ற நோய்கள் ஆகியவற்றுடன் கொரோனாவும் சேரும்போது உயிரை பறித்து விடுகிறது. நிறைய சோதனைகள், அக்கறையுடன், மனித நேயத்துடன் விலகி நிற்க வாய்ப்பு உருவாக்குவது, வென்டிலேட்டர்கள், படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவை இந்தியாவில் பிரச்சனையை மட்டுப்படுத்த உதவும்.
வருமானமா, நோய்த் தொற்றா என்று எரிகிற நெருப்புக்கும் கொதிக்கிற எண்ணெய்க்கும் நடுவில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அரசுகளின் அணுகுமுறை இந்த நெருக்கடியை கணக்கில் கொள்வதாக இருக்க வேண்டும்.
தவிர்க்கப்பட வேண்டிய அணுகுமுறை
சொந்த மாநிலம் திரும்ப விரும்புபவர்கள் நலன் காக்கக் கோரும் வழக்கில், ஊரடங்கு/வீடடங்கு உத்தரவு மூன்று மாதங்கள் நீடிக்கும் என்ற பொய்ச் செய்தியால்தான் (ஊஹந்ங் சங்ஜ்ள்) மக்கள் கூட்டம் கூட்டமாய் ஊர் திரும்பப் பார்த்தார்கள் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. எந்த அச்சு, மின்னணு ஊடகமும் அப்படிச் சொல்லவில்லை. மத்திய அரசு, தனது அறிக்கையில் அவ்வாறு சொல்லவில்லை. மூன்று மாதங்கள் ஊரடங்கு/வீடடங்கு என்று நம்பி மக்கள் புறப்பட்டுவிட்டார்கள் என்று ஏதாவது சமூக ஊடக பொய்ச் செய்தியில் இருந்து, உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்திருந்தால், அது மிகவும் பிரச்சனைக்குரியதாகும்.
இந்த நெருக்கடி, அதிகாரக் குவிப்புக்கும், மதவாதம் பரப்பப்படுவதற்கும், ஒடுக்குமுறை சர்வாதிகாரத்துக்கும் தோதான வாய்ப்பாக அணுகப்படக் கூடாது.
இறுதியாக,
அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு வளர்ந்தாலும், மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதியே. இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் போது, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா தோன்றுகின்றன. இது உடனடி விளைவு. இதுவே ஆட்டம் காட்டுகிறது. கால நிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தாமல், லாப மய்ய வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலாளித்துவ சமூகம் நகர்ந்தால், பேராபத்து கள் காத்துக் கிடக்கின்றன.
கட்டற்ற தனியார்மயம் நம்மை நிலை குலைந்து போகச் செய்துள்ளது. தரமான கல்வி, மருத்துவம், உள்கட்டுமானம் ஆகியவை அரசுகளின் முன்னுரிமைகளாக மாற வேண்டும். அவற்றுக்கான ஒதுக்கீடு பொருத்தமான அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும்.
கொரோனா எச்சரிக்கை மணி. அபாயச் சங்கு.