COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

செஞ்ச வேலைக்கே கூலி தரல....
நிவாரணம் எங்க வரப் போவுது...?


நான் எஸ்.ஜெய்சாந்தி. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நெற்குன்றம் ஊராட்சில இருக்குறேன்.
விவசாய கூலி வேலைதான் பாக்குறேன். ஊரடங்கால விவசாயத்துல கூலி வேலை பாக்கறவங்க வாழ்க்க ரொம்ப பாதிப்பு. எங்க வீட்ல நான், என் வீட்டுகாரு, 2 பிள்ளங்க விவசாயக் கூலி வேலை செய்து வாழ்க்க நடத்துறோம். கஷ்டப்பட்டா மூணு வேளை சாப்பாடு... இப்ப வேல இல்ல. இரண்டு வேள, ஒரு வேள நிம்மதியா சாப்பிட முடியல...
100 நாள் வேலை ஏற்கனவே முடிஞ்சுடிச்சி. செஞ்ச வேலைக்கே சம்பளம் பாக்கி இருக்கு. இப்ப 2 நாள் கூலி எக்ஸ்ட்ரா வாங்கிக்கலாம் சொல்றாங்க.  அது எப்ப வரும்? செஞ்ச வேலைக்கே கூலி தரல.... நிவாரணம் எங்க வரப் போவுது...? 1,000 ரூபா, 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சக்கர, 1 லிட்டர் எண்ணெய் இத வச்சு ஒரு மாசம் வாழ்க்க நடத்த முடியுமா? இந்த 1000 ரூபாய் பால் வாங்கக் கூட பத்தாது. மாசம் 15,000, 18,000 உதவி தந்தாதான் நாங்க வாழ்க்க நடத்த முடியும்.

Search