தோழர் ஆர்.மோகனின் நாட்குறிப்பு
மாநில அமைப்புக் குழு உறுப்பினர்
19.03.2020: ஆன்லோட் கியர் தோழர்கள் ஓய்வறையில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் தோழர் குமாரசாமி பேசும்போது, கொரோனா ஆபத்து பற்றி எடுத்துச் சொல்லி, மக்கள் பாதிப்பு சந்திக்கும் நேரத்தில் மக்களுக்காக நாம் செயல்பட்டாக வேண்டும் என்று முன்னரே வலியுறுத்தினார்.
அதே நாளில் அம்பத்தூர் அமைப்புக்குழு கூட்டம் நடந்தது. மார்ச் ஏப்ரல் மே வரை வேலைகள் பற்றி பேசி திட்டமிடல் நடந்தது. கொரோனா பாதுகாப்புக்கு தமிழக அரசே சோப்பு, கிருமி நாசினி, ரூ.15,000 நிவாரணம் கோரி சுவரொட்டி வெளியிட முடிவானது.
அன்று இரவே அம்பத்தூரில் சுவரொட்டி வெளியிடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் சுவரொட்டி அனுப்பப்பட்டது. 22.03.2020 ஒரு நாள் ஊரடங்கு, மேலும் ஒரு தாக்குதலாக 23.03.2020ல் 21 நாள் தடை வந்துவிட்டது. தமிழக மக்கள் பிரச்சனைகள் மீது விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கோரும் இயக்கம் தொடர்பான திட்டமிட்ட வேலைகள் 20, 21 தேதிகளில் நடந்தன. பிறகு முடக்கப்பட்டோம்.
மார்ச் 24 முதல் இன்று வரை ஊரடங்கு உள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியும் நம் தோழர்களும் மக்கள் துயர்துடைக்கும் நிவாரண இயக்கத்தை நடத்தினோம்.
24.03.2020:அலைபேசியில் மாநில அமைப்புக்குழு தோழர்கள் பாரதி, பழனிவேல், முனுசாமி, எஎஸ்கே, வித்யாசாகர் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. தோழர்கள் பசுபதி, வேணுகோபால், பாலசுப்பிரமணி ஆகியோருடனும் ஊரடங்கு வேலை, வருமானம் இழப்பு பற்றி அலைபேசியில் பேசினோம்.
25.03.2020: புயல் மழை வெள்ளம் போன்ற காலங்களில் செய்தது போல்துன்பப்படும் மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிளைச் சங்கங்களின் தலைவர்களுடன் ஆடியோ கான்பரன்ஸ் கால் பேசினோம்.
26.03.2020: பழைய அலுவலகம் சென்று தோழர் புகழ்வேந்தனுடன் ஊரடங்கு, வேலை, வருமானம் இழப்பு பற்றி பேசினேன். மறுநாளும் ஆலை சங்கங்கள் தலைவர்களுடன் தொலைபேசியிலேயே பேசினோம். ஏதாவது மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதில் உறுதி இருந்தது.
27.03.2020: அம்பத்தூரில் உள்ள தோழர்களை சந்தித்து பேசிட முயன்ற போது தோழர்கள் அனைவரும் முடங்கி உள்ளதால் தங்களுக்கே நிலைமை மோசம் என்ன செய்வது என திணறினார்கள். அன்று மாலை எல்லோருக்கும் வாட்ஆப் மூலம், உதவி செய்வோர், உதவி தேவைப்படுவோர் அணுகலாம் என்ற வாசகங்களுடனும் அலைபேசி எண்களுடனும் தகவல் போனது. பகிரப்பட்டது.
28.03.2020: உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் நிவாரணம் கோரி மின்னஞ்சலில் முதலமைச்சருக்கு மனு அனுப்பினோம்.
மார்ச் 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 1: தொழிலாளர், சங்க நிர்வாகிகள் பலரையும் சந்தித்து உதவி தேவைப்படுவோர் பட்டியலை ஆலை மற்றும் பகுதி வாரியாக தயாரித்தோம். மார்ச் 22 வரை வேலைக்கு போய் 31ல் சம்பளம் வாங்கிய சில தோழர்களுடன் பேசி நிவாரண பொருளோ நிதியோ தந்து உதவ மாநில அமைப்பு குழு தோழர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். ஏப்ரல் 22 மாநாடு மற்றும் மே 1 பேரணி தள்ளி வைக்கப்பட்டதையும் அறிவித்து, தோழர்கள் நிவாரண உதவி திரட்டினர்.
ஏப்ரல் 1 தோழர் செல்வி அரிசி வாங்க பணம் அனுப்பிவிட்டார். அடுத்தடுத்து தோழர் கள் நிதி, மளிகை பொருள் என, குறிப்பாக தோழர்கள் எஎஸ்கே, பாரதி, பழனிவேல் ஆகி யோர் மூலம் இரண்டு வாரத்தில் 14.04.2020க்குள் ரூ.80.000 வரை திரட்டப்பட்டது. நிதி வரும் என்பதை பொருத்தும், பகுதிவாரியான பட்டியல், தேவைகள், ஸ்டோரேஜ், பேக்கிங் இடம் என எல்லா நிலைமைகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப அரிசி 60 மூட்டை (1500 கிலோ) வாங்கி வைத்து மற்ற பொருட்களை சிறுக சிறுக வாங்கி தேவை, நிதி கையிருப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிவாரண நடவடிக்கைகள் துவங்கினோம்.
02.04.2020: அம்பத்தூர் ஓவிஏ நகர், எம்ஒய்எல் நிறுவனத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5 பேர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ரூ.200க்கு மளிகை பொருட்கள் விநியோகித்தோம்.
03.04.2020: காமராஜபுரம், அயப்பாக்கம் சாலை, சத்யபுரம் பகுதிகளிலுள்ள பீகார், அசாம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 15 பேர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் விநியோகித்தோம்.
06.04.2020: தோழர் ஜோசப் (ஜெய் இஞசினியரிங் கிளை டிஎல்யூ தலைவர்) சொன்னபடி ஜிகே ஆலையில் தங்கி அங்கேயே ஒப்பந்த வேலையில் உள்ள ஒடிஷாவின் 25 தொழிலாளர்களுக்கு 150 கிலோ அரிசியும் மளிகை பொருட்களும் தரப்பட்டன.
07.04.2020: அம்பத்தூர் ஆசிரியர் காலனி, கலைவாணர் தெருவில் உள்ள எம்விஎல் தொழிலாளர்கள் (பீகார்) 10 பேருக்கு தலா 5 கிலோ என 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
08.04.2020: மங்களபுரம் பகுதியில் தோழர் முனுசாமி தகவல் தந்த அடிப்படையில் 4 அறைகளில் வேலை உணவு இன்றி முடங்கி இருந்த பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் 20 பேருக்கு தலா 5 கிலோ அரிசி என 100 கிலோ வழங்கப்பட்டது.
11.04.2020: அம்பத்தூர் ராமாபுரம் பகுதில் 13 புலம் பெயர்ந்த தொழிலாலர் குடும்பங்களுக்கும் உணவில்லை என வெல்மேக் கிளை டிஎல்யூ தலைவர் தோழர் மஸ்தான் தகவல் தந்தார். அங்கு சென்று 65 கிலோ அரிசி விநியோகிக்கப்பட்டது. காமராஜபுரம் ஸ்டெல்லா மற்றும் பாக்யலட்சுமி ஆகியோர், 25 குடும்பங்களுக்கு வேலை வருமானம் இல்லை என்றனர். அங்கு 27 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி என 140 கிலோ வழங்கப்பட்டது..
13.04.2020: ஒரகடம் எஸ்.வி நகர் உழைப்போர் உரிமை இயக்க ஆட்டோ சங்கம் பகுதி கிளை தோழர்கள் மூலம் வேலையின்றி பாதிக்கப்பட்ட 21 குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி என 105 கிலோ வழங்கப்பட்டது.
14.04.2020: அன்று காலை அம்பத்தூர் டன்லப் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தோழர்கள் பாரதி, பழனிவேல், வேணுகோபால், பசுபதி ஆகியோர் மாலை அனிவித்து உறுதியேற்று பின், அருகில் உள்ள காமராஜபுரம் இளைஞர்கள், பெண் தோழர்கள் 30 பேர் நடத்திய உறுதியேற்பு கூட்டம் பங்கேற்றோம். பிறகு கிருஷ்ணாபுரம் தோழர் தேவகி வீட்டில் உறுதிமொழி ஏற்பில் பங்கேற்றோம்.
நிவாரணப் பணிகளில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் சங்கரும், கல்யாணபுரம் அம்பேத்கர் பொதுநல அமைப்பின் பாலாஜி மற்றும் பகுதி இளைஞர்கள் மூலம் ரூ.45,000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட் கள் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. தோழர் பாரதியும் நானும் கலந்துகொண்டோம்.
பல தடைகள் இருந்த போதும், கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற் சங்க மய்ய தோழர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். ஜனநாயக வழக்கறிஞர் கள் சங்கம் அவர்களோடு இணைந்து செயலாற்றியுள்ளது. இதே நாள் மங்களபுரம் பகுதியில் தோழர் முனுசாமி உறுதியேற்பு கூட்டம் நடத்தினார். நமது பல தோழர்களும் வீடுகளி லேயே உறுதிமொழி ஏற்றனர்.
15.04.2020: 85ஆவது வார்டு அம்பத்தூர் எஸ்டேட்டில் உழைப்போர் உரிமை இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள சுமைதூக்குவோர் சங்க தோழர்கள் 15 பேர் வேலையில்லாமல் சிரமத்தில் உள்ளனர் என தோழர் முனுசாமி தகவல் தந்தார். அவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
18.04.2020: அம்பத்தூர் 81ஆவது வார்டு இந்திரா நகர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
19.04.2020: 86ஆவது வார்டு, அயப்பாக்கம் ரோடு, ஏரிக்கரை, கேகே நகர் மற்றும் டிஜிஎ நகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பகுதி மக்களின் 35 குடும்பங்கள் வேலையின்றி முடங்கிவிட்டதாக தோழர்கள் வீரப்பன், பசுபதி, வேல்முருகன் தகவல் தந்தனர். நாம் அங்கே போய் தலா 5 கிலோ அரிசி என 175 கிலோ வழங்கினோம்.
22.04.2020: அம்பத்துôர் அம்மா ஓட்டலில் வேலை செய்பவர்கள், மலேரியா ஒழிப்புப் ஒப்பந்தப் பணியாளர்கள், ஆசிரியர் காலனியில் குடியிருக்கிறார்கள், அவர்களுக்கு வேலையில்லை என்று தோழர் ரோஸ்லின் தகவல் தந்தார். அந்த 15 குடுபத்தினருக்கு தலா 5 கிலோ என 75 கிலோ அரிசி தரப்பட்டது.
என்னுடன் தோழர்கள் பாரதி, பழனிவேல், வேணுகோபால், பசுபதி, முனுசாமி ஆகியோர் கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும், தோழர்கள் பாலசுப்பிரமணியன், ரமாதேவி, முத்துகுமார், ஜெயகுமார், ராஜேந்திரன், செந்தில்குமார், சுகுமார், பழனி, சுரேஷ், ரமேஷ்உமாபதி, விஜய் சங்கர், தேவகி, புகழ்வேந்தன், ஜ÷லிக், நிவேதா, விக்னேஸ்வரன், வருணபாரதி, பாக்கியலட்சுமி, ஸ்டெல்லா, நாகராஜ், ஏ.ஜீவா, வீரப்பன், வேல்முருகன், கண்ணபிரான், லில்லி, ஜோசப், மஸ்தான், விகாஸ், ஹீரா பாஸ்வான் ஆகியோர் தங்களின் சூழ்நிலைக்கு ஏற்பவும் கலந்து கொண்டனர்.
நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.
மோகன் ஒரு அற்புதமான தோழர். முப்பதாண்டுகளுக்கு மேலாக அவரை நான் அறிவேன். ஒரு மனிதன் குண்டுமணி அளவு கூட உற்சாகம் குறையாமல் இத்தனை ஆண்டுகள் இடையறாது இயக்கப்பணி ஆற்ற முடியும் என்பதற்கு உயிருள்ள உதாரணம். அரிதிலும் அரிதான தோழர்
- உமாமகேஸ்வரன் -