ஒரு குடும்பத்திற்கு மாதம் 50 கிலோ தரமான அரிசி வேண்டும்
எம்.மோகனா. நான் வண்டலூரில் வசிக்கிறேன். எனது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். பதினேழு, பதினைந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நூறு நாள் வேலைக்கான அட்டை வைத்திருக்கிறேன். நூறு நாள் வேலை மற்றும் இரண்டு இடங்களில் வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். ரேசன் அரிசி வாங்கித்தான் சமைத்து சாப்பிடுகிறோம். ரேசன் அரிசி தரமானதாக இல்லை, கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நூறுநாள் வேலையும் இல்லை, வீட்டு வேலையும் இல்லை ஆகையால், சம்பளம் இல்லை வாழ வழியில்லை. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயும் ரேசன் அரிசியும் உயிர் வாழ பத்தாது. அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. கபமஇ ஹெல்ப்லைன் மூலமாக் உணவுப் பொருட்கள் வழங்கினார்கள். சில தனிநபர்கள் உணவுப்பொருட்கள் கொடுத்தனர் அதை வைத்துதான் சாப்பிடுகிறோம். காய்கறி வாங்குவதற்கும் உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து வாங்குவதற்கும் பால் வாங்குவதற்கும் பணம் இல்லை. கடன் வாங்கி வாழ வேண்டிய சூழல் உள்ளது.
அரசு, ஒரு குடும்பத்திற்கு மாதம் 50 கிலோ தரமான அரிசி வழங்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை குறிப்புணர்ந்து உதவ வேண்டும்.