ஒன்னும் முடியலக்கா...
உயிர் வாழவே பிடிக்கல...
நாமக்கல் மாவட்ட விசைத்தறி கூலித் தொழிலாளர் உரையாடல்
(கொரானாவுக்கு முன்)
அந்த வீட்டு பெண்: அக்கா உங்க வீட்டுல என்ன குழம்பு? எனக்கு கொஞ்சம்...
இந்த வீட்டு பெண்: இந்தாங்கக்கா.
அந்த வீட்டு பெண்: கறிக்கொழம்பாக்கா...
இந்த வீட்டு பெண்: ஆமாக்கா. குழந்தைங்க கேட்டாங்க. அவங்க அப்பா உடனே ஓடிபோய் கறி எடுத்துட்டு வந்கூட்டார்.
அந்த வீட்டு பெண்: ஆமா உங்க வீட்டுக்காரர் வாரம் எவ்வளவுக்கு தறி ஓட்டுவார்.
இந்த வீட்டு பெண்: வாரம் 2,000 ரூபாய்க்கு ஓட்டுவார். நான் ஒரு 900 ரூபாய்க்கு நூல் போடுவேன். வீட்டு வாடகை, கேஸ், மளிகை சாமானுக்கு எல்லாம் சிக்கனமா குடும்பம் நடத்துவேன். பசங்க இரண்டு பேரும் தினம் காலையில பிஸ்கட் இல்லாம டீ குடிக்க மாட்டாங்க. தினம் சாப்பிட தீனி கேட்டுட்டே இருப்பாங்க. அது என்ன போலோவா கீலோவா தினம் இரண்டு வேளை வாங்கி தரனும். ஒரு நாள் வாங்கி தரலைன்னாலும் அவ்வளவுதான் வீடே இரண்டு ஆயிடும்.
(கொரானாவுக்கு பின். ஊரடங்கின் வந்து இருபதாவது நாள்)
அந்த வீட்டு பெண்: அக்கா கொஞ்சம் ரசம் இருந்தா தாங்கக்கா.
இந்த வீட்டு பெண்: ஏண்டி நீ இன்னைக்கு குழம்பு வைக்கலையா.
அந்த வீட்டு பெண்: இருவது நாளா எங்களுக்கு வேலை இல்ல. வீட்டுல ரேசன் அரிசி, பருப்பு மட்டும்தான் இருக்கு. ஆயிரம் ரூபாய் வந்துச்சு. அதுலதான் கேஸ் எடுத்தேன். 850 ரூபாய் அதுக்கே போயிடுச்சு. மிச்ச காசுல காய்கறி வாங்க போனேன். ஆனா 1/4 கிலோ 5 ரூபாய்க்கு கொடுத்தது இப்ப 25 ரூபாயினு விக்குறாங்க. நிலைமை தெரியாம குழந்தைங்க வேற தீனி கேட்டு அடம் பிடிக்குதுங்க. அடுத்த வேளை குழம்புக்கே வழியில்ல உங்களுக்கு தீனி கேட்குதான்னு குழந்தைகள அடிச்சு புட்டேன். பால் வாங்க வாரம் 100 ரூபாய் ஆகுதுன்னு வரடீதான் வைக்குறேன்.
இந்த வீட்டு பெண்: கேபிள்காரனுக்கு பணம் கட்டலன்னு அவன் கேபிள கட் பண்ணிட்டான். குளிக்க சோப்பு, பல் விளக்க பேஸ்டு கூட வாங்க முடியல.
அந்த வீட்டு பெண்: அக்கா எனக்கு ஒரு உதவி செய்றியா. இன்னும் எத்தன நாள் இந்த 144 நீடிக்கும்னு தெரியல. கவர்மண்டும் கையை தட்டு, விளக்கு ஏத்துன்னுதான் சொல்றாங்க. நிவாரணம்னு பணம் கொடுக்க மாதிரி தெரியல. இந்த 1000 ரூபாய்ல நாலு பேர் ஜீவனம் பன்ன முடியல. என் தாலிய களட்டி தறேன். அதை வித்து தரிங்களா.
இந்த வீட்டு பெண்: ஏண்டி தாலியை கூடவா விப்பாங்க.
அந்த வீட்டு பெண்: என்னக்கா பன்றது. உயிர் வாழ வேணுமே... விசைத்தறி தொழிலாளர்கள் நிலைமை இதுதான். கறிதான் எடுக்கல இரண்டு முட்டை வாங்கி குழந்தைங்களுக்கு குழம்பு வெச்சி கொடுக்கக் கூட முடியல. நேத்து என் பையனுக்கு கீழே விழுந்து அடிபட்டு ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. டூவீலர்ல கூட்டிட்டு போலாம்னா வண்டில பெட்ரோல் இல்ல. அவங்கப்பா சைக்கிள்ள ஒக்கார வெச்சி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாரு. ஒரு ஊசிய போட்டு 4 மாத்திரைய கொடுத்துட்டு 450 ரூபாய் கேட்டு இருக்கார் டாக்டர். என் வீட்டுக்காரர் கிட்டே 100 ரூபாய்தான் இருக்கு. மெடிக்கல் சாப்ல செல்போன கொடுத்து இதை வெச்சிக்குங்க நான் வீட்டுக்கு போயி பணம் எடுத்து வரேன்னு வந்துட்டார். ஒன்னும் முடியலக்கா... உயிர் வாழவே பிடிக்கல. எப்ப இந்த பிரச்சனை முடிந்து நாங்க வேலைக்குப் போயி வீட்டு சாமானம் வாங்கிப் போட்டு குழந்தைகளுக்கு வயிராற சோறு போடுவமோ.