COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

தோழர் கே.ராஜேஷின் நாட்குறிப்பு

மாநில அமைப்புக் குழு உறுப்பினர்

மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை, மதத்தின் பெயரால் பிளவுபடுத்த மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி அதன் வெகுஜன அமைப்புகள், 26.02.2020 முதல் CAA NRC NPR வேண்டாம் என தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பட்டினிப் போராட்டம் நடத்தின. பட்டினி போராட்டம் 12 நாட்கள் நடைபெற்றது.
பட்டினி போராட்டத்தின் 5ஆவது நாள் கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கோரி 01.03.2020 முதல் 30.04.2020 வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், மே 1 அணிதிரட்டலுக்கான வேலைகள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.20,000 வரை நிதி திரட்டப்பட்டது. இந்த சூழலில், உழைப்போர் உரிமை இயக்கத்தில் இணைந்துள்ள மேக்னா தொழிலாளர்களின் போராட்டம், நான்கு பேர் தற்காலிக பணிநீக்கத்தால் 20.03.2020 அன்று தொடங்கி 23.03.2020 அன்று தொழிலாளர் துணை ஆணையர் முன் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது.
22.03.2020 அன்று, மே தின அணிதிரட்டல் திட்டமிடலுக்காக மக்களுக்கான இளைஞர் திட்டமிட்ட கூட்டம், 22.03.2020 அன்று ஒருநாள் ஊரடங்கு என அறிவித்ததால் நடைபெறவில்லை. அன்று எல்டியுசி தோழர்கள், கொரோனா தடுப்பு ஊரடங்கு பற்றியும், வரும் நாட்களில் ஊரடங்கு தொடருமா என்பது பற்றியும் விவாதித்தனர். ஊரடங்கு தொடர்ந்தால் மக்கள் பெரும் துன்பத்தை சந்திக்க நேரிடும், ஒரு பக்கம் அரசை நிர்ப்பந்திப்பது மறு பக்கம் மக்களுக்காக நேசகரம் நீட்டுவது நடக்க வேண்டும் என தோழர் எஸ்கே வலியுறுத்தினார். 
அதன் அடிப்படையில் எல்டியுசி ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த கூட்டம் நடக்கும் போதே, மத்திய அரசு, தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும் என அறிவித்தது. 
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பு குழுவில் உள்ள நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடது தொழிற்சங்க மய்யம் மற்றும் மக்களுக்கான இளைஞர்கள் அரங்குகளில் வேலை செய்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் எல்டியுசி ஹெல்ப்லைன் குழுவில் தோழர் எஸ்.ராஜகுரு அவர்களுடன் இணைந்து, ஒருங்கிணைத்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
24.03.2020: ஒரகடம் அருகில் மாத்தூரில் உள்ள இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தோழர் யுவராஜ் (பின்ஸ்டார்) மூலம் உதவி கேட்டு தொடர்பு கொண்டனர். 13 பேர் ஒரே அறையில் வசிக்கும் அவர்கள் ஒரு வேளை உணவிற்கு ரூ.500 வரை செலவாகிறது, ஒப்பந்ததார் உதவவில்லை என்றனர். அவர்களுக்கு நமது குழு சார்பாக 35 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
ஒரகடம் அருகில் மேட்டுபாளையம் கிராமத்தில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 40 பேர் உதவி கேட்டு தொடர்பு கொண்டனர். அவர்களுக்காக 75 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
30.03.2020: பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளி மூலம் படப்பை அருகில் உள்ள வட்டம்பாக்கம் கிராமத்தில் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு உதவி கேட்டு மார்ச் 30 அன்று தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி என ரூ.6,100 மதிப்புள்ள பொருட்களுடன் சென்று அவர்களை சந்தித்தோம். அவர்களின் வாழ்க்கை, கொரோனா காலத்தில் மட்டுமல்ல. எல்லா நாட்களிலும் வறுமை நிறைந்ததாகவே உள்ளது.
02.04.2020: இருங்காட்டுகோட்டை அருகில் காட்ராம்பாக்கம் கிராமத்தில் அசாம் தொழிலாளர்கள் 80 பேர் உணவுப் பொருள் இல்லாமல் இருப்பதாக, தொழிலாளர் கூடம் தோழர்கள் மூலம் தெரிய வந்தது. 02.04.2020 அன்று நமது குழு சார்பாக 100 கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல அலுவலக கட்டிட உரிமையாளர் திரு.குப்புசாமி வாகனம் ஏற்பாடு செய்து உதவினார். காட்ராம்பாக்கம் பகுதியை கட்சியின் ஆலோசனை குழு தோழர் எஸ்.குமாரசாமி பார்வையிட்டார். அங்கு வசிக்கும் பிற மாநில தொழிலாளர்கள் சுமார் 2,000 தொழிலாளர்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை. பெரும் பான்மையினருக்கு கழிப்பிட வசதி கிடையாது. இந்த செய்தியை நாம் சமுக வலைதளங்களில் பகிர்ந்தோம். அதன் பின்னர், மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியை ஆய்வு செய்தது. மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள அப்பகுதியில் தொடர்பு எண்கள் வைக்கப்பட்டு அரசு கவனம் செலுத்தும் பகுதியாக மாறியுள்ளது.
02.04.2020: திருபெரும்புதூர் எல்டியுசி அலுவலக கட்டிட உரிமையாளரிடம், அலுவலகம் உள்ள சிவன்தாங்கல் பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காண உதவுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் 02.04.2020 அன்று ஆதரவற்ற, நலிவடைந்த 20 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
07.04.2020: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி (சஈகஊ) தோழர்கள் நம் குழுவை தொடர்பு கொண்டு காட்ராம்பாக்கத்தில் உள்ள அசாம் மற்றும் ஒடிசா தொழிலாளர்களுக்கு உதவுமாறு கேட்டு அவர்களின் தொடர்பு எண்னை அனுப்பிவைத்தனர். அசாம் தொழிலாளர்களை தோழர் எஸ்.ராஜகுரு தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள், தங்களுக்கு கபமஇயில் இருந்து தேவையான அளவு உணவு பொருட்கள் வழங்கிச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தனர். ஒடிசா தொழிலாளர்களுக்கு 20 கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவை நமது குழு சார்பாக வழங்ப்பட்டது.
07.04.2020: த்ல்மய்ஞ்மந்;எஒ}ன்; ஷ்க்;ஜ்ல்ஹந்; ஞ்க்ஷ்;மப்;க்ஷ இன்ட்ப்;ழ்ல்ஹல்க்; ஸ்ரீண்ர்ஞ்;சஞ்ட்ன்; ஸ்ரீன்ல்ண்ந் ,ஹச்;ச் ,ண்க்ஷ்ஞ்;எ ச்ல்ண்ள் சத்ட்ர்ன்;ச்ள்; ஞ்ன்ங்;த்ட்ந்க்; (ச்ல்ண்ள்த்; த்ண்ஹ்ற்ன்;)> ஞ்ல்ன்ச்ட்~; (ச்ல்ண்ள்ழ்; ய்ழ்ஹஹ்ட்ள்ன்;)> ச்ல்ண்ள் ங்ல்ன்;ற்ட்ச்ல்ச்ள்; சத்ட்ர்ன்;ச்ள்; த்ல்ஹட்ச்ன்ட்ளக்;> ளட்க்ச்ல்ன்ட்ந்க்;> சச்ட்த்க்ஷ்;ப்ன்ட்ந்க்;> ய்ழ்ங்;த்ட்ந்ண்ன்> ய்ஞ்ட்க்;ஈஹ்ல்வ்;ச்ந்;> ழ்ட்ஓசற்ஹ்; ஙச்ல்சஹட்ன்; ற்ட்ர்;ற்ட் த்ட்ன்ந்; ஞ்ட்த்ல்ச்;ச்ஞ்;ஞ்ப்;ப் 50 ஊகந்;ஞ்வ்;ச்நச்;ஊ த்ஹ்ட் 10 ச்ல்சஹ்ட் ற்டத்ந்; 500 ச்ல்சஹ்ட் ம்ன்ல்ழ்ல் ற்ர்வ்;ச்ல்க்ன்;.
கபமஇ ஏஉகட கஐசஉ பற்றி சமூக வலைதளங்களில் பார்த்து சென்னை திருவல்லிகேணியில் இருந்து நம்மை தொடர்பு கொண்டனர். அவர்கள் பற்றி அறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி காய்கறி  மளிகை பொருட்கள் ஜிம்கானா கிளப் தோழர் அசோக் முலம் கொண்டு சேர்க்கப்பட்டன.
10.04.2020: திருபெரும்புதூர் செல்லபெருமாள் நகர் பகுதியில் 25 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண, பொருட்களை கொண்டு செல்ல எல்டியுசி அலுவலக கட்டிட உரிமையாளர் உதவினார்.
17.04.2020: ஹ÷ண்டாய் நிறுவனத்தில் பணியாற்றும் அன்பு உள்ளம் குழு தோழர்கள் நமது கபமஇ ஏஉகட கஐசஉ  குழுவிடம் ரூ.10,000 வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திருபெரும்புதூர் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டது.
திருபெரும்புதூர் அலுவலகத்திற்கு அருகில் குடியிருக்கும் இருளர் இன மக்களுக்கு தலா பத்து கிலோ வீதம் பத்து குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது
ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தினசரி நாளிதழ்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. நிவாரணப் பொருட்களை தடையின்றி கொண்டு செல்ல அனுமதி கேட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
17.04.2020 வரை சுமார் ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளோம். ரூ.62,000 வரை நிதி திரட்டியுள்ளோம்.
இந்த வேலைகளில் தோழர்கள் சண்முகம் லியோ (மேக்னா), பழனி (மதர்சன்), அசோக் (ஜிம்கானா), யுவராஜ், சத்திரியன் (பின்ஸ்டார்) மற்றும் சில தோழர்கள் ஈடுபட்டனர்.
22.04.2020: டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று திருபெரும்புதூர் எல்டியுசி அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Search