COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின உறுதிமொழியேற்பு

ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை மாவட்ட அளவிலான அணிதிரட்ட லுடன் அனுசரிக்க கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தது.
ஊரடங்கால் வேலை வருமா னம் இழந்த புலம் பெயந்த தொழிலாளர்களை, நலிவடைந்த மக்களை தோழர்கள் தேடிப் போய் நேசக்கரம் நீட்டிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், துடிப்போடும் உணர்வெழுச்சி யோடும் அம்பேத்கர் பிறந்த தின உறுதியேற்பு நிகழ்ச்சியையும் பொருளுள்ள விதத்தில் நடத்தினார்கள்.
திருபெரும்புதூர் எல்டியுசி அலுவலகத்தில் மாநில ஆலோசனைக் குழுவின் தோழர் எஸ்.குமாரசாமி மற்றும் மாநில அமைப்புக் குழு தோழர் கே.ராஜேஷ் ஆகியோர் அம்பேத்கர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
ஆலோசனை குழு உறுப்பினர்கள், தோழர்கள் எ.எஸ்.குமார், வித்யாசாகர் ஆகியோர் தோழர் எ.எஸ்.குமார் வீட்டில் அவரது குடும்பத்தினருடனும், தோழர் உமாமகேஸ்வரன் அவரது வீட்டிலும் உறுதிமொழி ஏற்றனர்.
மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் பழனிவேல் தனது வீட்டில் குடும்பத்தினருடன் அம்பேத்கர் படம் முன் உறுதியேற்றார்.
எல்டியூசி தலைவர்களில் ஒருவரான தோழர் கதிரேசன் தனது காஞ்சிபுரம் வீட்டில், பகுதியில் உள்ளவர்களுடன் அம்பேத்கர் படத்துடன் உறுதிமொழி ஏற்றார். தோழர் ஜேம்ஸ் குடும்பத்தினருடன் வீட்டில் உறுதிமொழி ஏற்றார்.
கட்சி மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், க.ராமன், வி.சீதா, டி.சாந்தி, ஆகியோர் அவரவர் வீடுகளில் உறுதிமொழி ஏற்றனர்.
சென்னையில் கட்சி மாநில தலைமையகத்தில் தோழர்கள் ஜி.ராதாகிருஷ்ணன், குப்பாபாய் ஆகியோர் அம்பேத்கர் படம் முன் உறுதி மொழி ஏற்றார்கள். காஞ்சி காமகோடி மருத்துவமனை, ஜிம்கானா கிளப், மதராஸ் கிளப், போட் கிளப், அகர்வால் பவன் ஆகிய சங்கங்களின் முன்னோடிகள் உறுதியேற்பு கூட்டங்களை நடத்தினார்கள். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜனநாயக வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் தோழர்கள் அம்பேத்கர் படத்தின் முன் நின்று உறுதிமொழி எடுத்தனர். 
அம்பத்தூரில் டன்லப் ஆலை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி மாநில அமைப்புக் குழு தோழர்கள் கே.பாரதி, கே.பழனிவேல், ஆர்.மோகன் மாவட்ட எல்டியூசி தோழர்கள் கே.வேணுகோபால், ஆர்.பசுபதி ஆகியோர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தார்கள்.
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எம்.சங்கர் கல்யாணபுரத்தில் அம்பேத்கர் பொது நல அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் தோழர்கள் ஆர்.மோகன், கே.பாரதி கலந்துகொண்டு உறுதி மொழி ஏற்றனர். ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர் புகழ்வேந்தன் வரதராஜபுரத்தில் உள்ள தனது வீட்டில் தோழர்கள் கோபாலன், லட்சுமி மற்றும் பகுதி தோழர்களுடன் உறுதிமொழி ஏற்றனர். தோழர் தேவகி தனது கிருஷ்ணாபுரம் பகுதி  வீட்டில் தோழர்கள் மோகன் மற்றும் பழனிவேல் ஆகியோருடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றார்.
காமராஜபுரத்தில் கட்சி மாநில அமைப்புக் குழு தோழர்கள் கே.பாரதி, கே.பழனிவேல், ஆர்.மோகன், மாவட்ட எல்டியூசி தோழர்கள் கே.வேணுகோபால், ஆர்.பசுபதி ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். ஊரடங்கால் வேலை வருமானம் இழந்த 60 தொழிலாளர்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு தனிமனித இடைவெளி கடைபிடித்து உறுதியேற்றனர். நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
மங்களபுரத்தில் தோழர் ஜி.முனுசாமி தலைமையில் தோழர்கள் லில்லி, கோவிந்தன், ராஜேந்திரன், எம்.சுகுமார், எஸ்.தனலட்சுமி, ஆர்.கோட்டீஸ்வரன், உட்பட பல தோழர்கள் உறுதிமொழியேற்றனர்.
அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை ஆன்லோட் கியர்ஸ், சாய்மீரா, ஜெய் இஞ்சினியரிங் சங்க தோழர்கள் உறுதிமொழியேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 14 அன்று காலை குமாரபாளையத்தில் எல்டியுசி  பொதுச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையில் விசைத்தறி தொழிலாளர் சங்க அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறகு பள்ளிபாளையம் - ஆவத்திபாளையத்தில் தோழர் செல்வம் வீட்டில் அம்பேத்கர் படத்துடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக மார்ச் மாத கம்யூனிஸ்ட் இதழ் மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இரண்டு நிகழ்ச்சியிலும் 30 தோழர்கள் கலந்து கொண்டு தனித்தனியாக நின்று உறுதிமொழியேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் மக்களுக்கான இளைஞர் அமைப்பின் தோழர்கள் தோழர் மோகன்ராஜ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறகு கீரப்பாக்கத்திலும் உறுதியேற்கப்பட்டது. வண்டலூரில் கம்யூனிஸட் கட்சி மாநில அமைப்புக்குழு தோழர் கோபால் இல்லத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில் விசிக, மதிமுக குடியிருப்போர் சங்க, அரிமா சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் தோழர் ராஜ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
கோவை மாவட்டம் கம்யூனிஸ்ட் கடசி அலுவலகத்தில் மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் ஜெயபிரகாஷ் நாரயணன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. பெரிநாயக்கன்பாளையத்திலும், சாமிச்செட்டி பாளையத்திலும், நாயக்கனூர், திருமலைநாயக்கன்பாளையம் என அய்ந்து மய்யங்களில் 28 தோழர்கள் உறுதியேற்றனர்.
 திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், நெற்குன்றம், நல்லூர், எருமைவெட்டிபாளையம், அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் 61 பேர் உறுதிமொழி ஏற்றனர்.
எல்டியூசி ஜம்போ பேக் கிளை சங்கத்தில் 3 தோழர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Search