COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

உணவின் அளவு தரம் எல்லாம் குறைந்துவிட்டது

குச்சிப் பை தைக்கும் தொழிலாளியின் துயரம்

ஓ.சிவகாமி. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவைச் சேர்ந்தவர்.
ஊரடங்கு உத்தரவுக்கு முன் வாரம் ரூ.1,500, மாதம் ரூ.6,000 வரை சம்பாதித்து வந்தேன். தற்போது ஒரு மாத காலமாக இந்த வருவாய் இழந்துள்ளேன்.
இந்த ஒரு மாதமாக குடும்பம் நடத்த நான் பட்ட வேதனை மிகமிக அதிகம்.
காலை மாலை இரண்டு வேளை பால் வாங்கி வீட்டில் டீ வைப்போம். இப்போது  வர டீ வைத்து குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடையில் அரிசி பருப்பு மிளகாய் எண்ணெய் சீரகம் கடுகு போன்ற பொருள்களை வாங்கி சமைத்து வந்தோம். ஒரு மாத காலமாக ரேசன் கடையில் அரிசி வாங்கி சாப்பிட வேண்டியுள்ளது.
எனது கணவர் வெளியே உள்ள டீக்கடையில் 4 முதல் 6 டீ வரை குடிப்பார். தற்போது அதுவும் குடிக்க முடியாமல் நின்று விட்டது. எனது கணவர் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட முடியாமல் நின்று விட்டது. வாரத்தில் ஒருமுறை சிக்கன் மட்டன் போன்றவற்றை எடுத்து சமைப்போம். அதுவும் நின்று விட்டது.
குழந்தைகளுக்கு வருக்கி, பன், பிஸ்கட் போன்ற பொருட்களை வாங்குவோம். அதுவும் தற்போது வாங்குவதில்லை. இந்த மாத வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட முடியவில்லை. நான் அணிந்திருந்த கம்மலை அடகு வைத்துள்ளேன். உணவின் அளவு தரம் எல்லாம் குறைந்துவிட்டது. இதிலிருந்து மீள வேண்டும் என்றால் அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ10,000 முதல் 15,000 வரை நிவாரணம் வழங்க வேண்டும்.
பவானி தாலுகாவில் எங்களைப் போல் ஏராளமான குடும்பங்கள் உள்ளன.

Search