COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, April 5, 2020

மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க
தமிழக அரசு சிறப்பு சட்டமன்றம் கூட்ட வேண்டும்


கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றம் கூட்டக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு மாத கால பிரச்சார இயக்கத்தை துவங்கியது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை நடத்தப்படவுள்ள இந்த பிரச்சார இயக்கம் மே 1 அன்று சட்டமன்றம் அருகில் பெருந்திரள் கூட்டத்தில் நிறைவுறும்.
சிஎஎ, என்ஆர்சி, என்பிஆர் வேண்டாம் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, சிறப்பு சட்டமன்றம் கோரும் இயக்கமும் துவங்கியது.
மார்ச் 1 அன்று சென்னையில் தோழர்கள் குப்பாபாய், பொன்ராஜ் தலைமையில் அகர்வால் பவன் தொழிலாளர்கள் உட்பட 50 பேர் சென்னை அயனாவரம் கேகே நகர் மார்கட் பகுதியில் பிரச்சாரம் செய்தனர். சுமார் 3,000 பேரை சந்தித்த தோழர்கள் ரூ.4,000 வரை நிதி திரட்டினர். கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் அவர்களுடன் கலந்து கொண்டார்.
அம்பத்தூரில் மார்ச் 8 அன்று சென்னை மாநகராட்சி 85 வார்டு மங்களபுரத்தில், தோழர் ஜி.முனுசாமி தலைமையில் தோழர்கள் கே.வேணுகோபால், கே.ராஜேந்திரன், எம்.சுகுமார், எஸ்.தனலட்சுமி, எ.பாஸ்கர், ஆர்.கோடீஸ்வரன், மாதவன் மற்றும் வெல்மேக் தொழிலாளர் தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். இதே தோழர்கள் மார்ச் 14 அன்று மண்ணூர்பேட்டை மேனாம்பேடு சாலையிலும், மார்ச் 21 அன்று மண்ணூர்பேட்டை மசூதி தெருவிலும்  வீடுவீடாகவும் கடைகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு ரூ.6,880 நிதி திரட்டினார்கள்.
அம்பத்தூர் 81வது வார்டு கேகே சாலையில் மார்ச் 16 மாலை 5 மணி முதல் 7மணி வரை தோழர்கள் ஆர்.மோகன், ஜி.முனுசாமி, கே.ராஜேந்திரன், எஸ்பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மார்ச் 18 அன்று ஞானமூர்த்தி நகரிலும், மார்ச் 20 அன்று இந்தியன் வங்கி குடியிருப்பிலும் பிரச்சாரம் செய்தனர். அம்பத்தூர் பகுதி தொழிலாளர் தோழர்கள் இவர்களுடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 1 அன்று காலை நாமக்கல் மாவட்டம்  பள்ளிபாளையத்தில் எல்டியுசி  பொதுச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் விசைத்தறி தொழிலாளர் பணியிடம் அமைந்துள்ள பள்ளிபாளையம், ஆவத்திபாளையம் பகுதிகளில் வீடுவீடாக பிரச்சாரம் செய்தனர். தோழர்கள் மாரியப்பன், புகழேந்தி, ராஜா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மார்ச் 4 அன்று குமாரபாளையத்திலும் மார்ச் 5 அன்று ஈரோடு, பவானி பகுதியிலும் எல்டியுசி பொதுச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் வீடுவீடாகவும் கடை வீதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் தண்டபாணி, சரவணன், கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கணேசன், மற்றும் விசைத்தறித் தொழிலாளர் தோழர்கள் கலந்து கொண்டனர். இது வரை ரூ.10,000 போராட்ட நிதி திரட்டப்பட்டுள்ளது.
மார்ச் 1 அன்று செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வீடுவீடாகச் சென்று மக்களுக்கான இளைஞர் அமைப்பின் தோழர்கள் தோழர் மோகன்ராஜ் தலைமையில் பிரச்சாரம் செய்தனர். இதேபோல் கண்டிகை கிராமத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மார்ச் 11 அன்று திருபெரும்புதூர் சுபத்திரா அவென்யூவிலும் காஞ்சிபுரத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.15,463 நிதி திரட்டினார்கள். மார்ச் 13 அன்று திருபெரும்புதூரிலும் சான்ட்ரோ சிட்டி பகுதியிலும் தோழர்கள் ராஜகுரு, ராஜேஷ், மதர்சன் தோழர்கள், மக்களுக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர், ரூ.4,090 நிதி திரட்டினர்.
மார்ச் 1 அன்று கோவை பெரியநாயக்கன்பாளையத்தில், தோழர்கள் சக்திவேல், ராஜா, ராமச்சந்திரன் மற்றும் எல்டியுசி பிரிக்கால் தோழர்களுடன் தோழர் குருசாமி தலைமையில்  பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்ச் 4 அன்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் நல்லூரில் மார்ச் 1 அன்று நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரம் நிறைவுற்ற இடத்தில் கோரிக்கைகளை விளக்கி தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தோழர்கள் எஸ்.ஜானகிராமன், ராமன், அன்புராஜ், சாந்தி, மலைராஜா, ரகமதுல்லா, வாசு உட்பட சுமார் 60 தோழர்கள் கலந்துகொண்டனர். மார்ச் 3, 6, 9 தேதிகளில் செங்குன்றம், நெற்குன்றம், எருமைவெட்டிபாளையம் பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தொகுப்பு: சேகர்

Search