COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

தொற்று நோய் எதிர் தப்பெண்ணம்

கவனி, விடுபடு
நான் எந்தவித அடையாளப்படுத்தலையும்
ஏற்க மறுக்கிறேன்.
இதை ஏற்றுக்கொள்கிற மாதிரி நான் ஏதும் செய்யவில்லை
பின் ஏன் என்னுடைய மேசையின்மீது
நீ இந்த வெறுப்பை  பரிமாறுகிறாய்
நான் உங்கள் நம்பிக்கையையோ அல்லது மதத்தையோ
பரிகாசம் செய்யவுமில்லை.
உங்கள் கீழ்ப்படிதலைக் கேலி செய்யவுமில்லை
உங்கள் அறியாமையால்
உங்களுக்கு தெரியாத சில
எளிமையான கேள்விகளைக் கேட்கிறேன்.
சொல்லுங்கள், எங்கிருந்து துவங்குவது ?
முதலும் இறுதியுமாக நாம் இதைச் செய்வோம்.
நட்பு எனும் திரைச்சீலை விழட்டும்
நீங்கள் எதை மறைக்கிறீர்கள் என்று காட்டுங்கள் எனக்கு.
நீங்கள் மறைமுகமாக பொதுமைப்படுத்துவது
என்னுடைய பெயர் காரணமாகவா
நாம் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று எனக்குத் தெரியும்
இருப்பினும் ஒரு இந்தியனாக அதை அங்கீகரிக்கிறேன்.
இந்த கோமாளித்தனத்தைக் கடைபிடிக்கும்
உங்களைக் கண்டு நான் பரிதாபம்  கொள்கிறேன்.
நீங்கள்தான் இந்தத் தடையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்கள் வார்த்தைகள் மதவெறுப்பில் தோய்த்தெடுத்தவை
தூரத்திலிருந்தே என்னால் நுகர முடிகிறது.
உங்களின் போலி தேசபக்தி கொண்டு
எனது வாயை அடைக்கப் பார்க்காதீர்கள்
உங்களுக்குத் தெரியும் நீங்கள் யாரென்று
நீங்களும் ஒரு காலத்தில்,
பன்மைத்துவத்தை கடைப்பிடிக்க முயற்சித்தவர்கள்தானே.
சட்டத்தை மீறுபவர்களுடன் நான்
என்னை அடையாளப்படுத்திக்கொண்டதுமில்லை
நான் என்னுடைய கோழையை (எச்சில்)
யார் மீதும் துப்பியதுமில்லை. அல்லது யாரையும்
நிர்வாணப்படுத்தியதுமில்லை.
நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றேன்.
நாம் ஒரு விஷயத்தை நேரிடையாகவே ஒத்துக்கொள்வோம்.
நாம் ஒரு பெரும் தொற்றுநோய்க்கெதிராக
போராடிக் கொண்டிருக்கிறோம்.
எனவே, வெறுப்பைத் தள்ளி வைப்போம்.
நமக்குத் தேவை அத்தியாவசியமானவைகள்,
ஏமாற்றுத் தந்திரங்கள் அல்ல.

சரின் கான்
(டெல்லியைச் சார்ந்த ஒரு சுதந்திரமான எழுத்தாளர், கலைப்பட விமர்சகர்.
தமிழில் இல.உமாமகேஸ்வரன்)

Search