கொரோனா நெருக்கடியும் முதலாளித்துவமும்
ஆர்.வித்யாசாகர்
உலகில் பெரும்பான்மையான நாடுகளில் முதலாளித்துவ எந்திரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் சரக்கு வர்த்தக சங்கிலி தொடர் அறுபட்டிருக்கிறது. முதலாளித்துவம், சோசலிச சவாலை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பினும், அதன் இரண்டாவது நூற்றாண்டில் கொரோனா நெருக்கடியால் அமைப்புரீதியாக ஒரு பெரும் அடிப்படை சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கோவிட் 19 நெருக்கடி, 2008 -2009 ஆண்டைப் போல வெறும் ஒரு பொருளாதார வீழ்ச்சி நெருக்கடியோ அல்லது பெரும் பொருளாதார மந்த நிலையோ (புசநயவ னுநிசநளளழைn) மட்டுமல்ல. மக்கள் வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய அளவிற்கு ஒரு பெரிய நெருக்கடியை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கடந்த நூறு ஆண்டுகளில், இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலக பொருளாதார நெருக்கடியோடு மட்டும்தான் ஒப்பிட முடியும். கொரோனா தொற்றால் இரண்டாம உலகப்போருக்கு பிறகு உலகில் மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை துவங்கியபின் கடந்த 75 ஆண்டுகளில் இது போன்றதொரு மனித நெருக்கடியை இதுவரை சந்தித்ததில்லை என்று ஐ .நா. பொதுச் செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிடுக்கின்றனர். 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் பெரும் அளவில் இழப்பை சந்தித்திருக்கின்றன. உலக வல்லரசான ஐக்கிய அமெரிக்காவில் இந்த நோய் தீ போல் பரவி 188 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று மார் தட்டிய இங்கிலாந்திலும் இதே நிலைதான். இந்த நெருக்கடியின் ஆழம் கொரோனா எவ்வளவு காலத்திற்கு நீட்சி அடையும் என்பதை பொறுத்து அமையும்.
மிகவும் வளர்ச்சி அடைந்ததாகக் கூறப்படும், சுதந்திர சந்தையே வளர்ச்சிக்கு மூலம் என்று சொல்லும் முதலாளித்துவ நாடுகளே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள். இந்த நாடுகளில் தொடர்ந்து பெருமுதலாளிகள் கொழுப்பதற்க்காக கொண்டு வரப்பட்ட கொள்கைகள், நெருக்கடி காலங்களில் ஏற்படும் சிக்கல் களை சமாளிக்க முடியாத அளவிற்கு அந்த நாடுகளின் அரசாங்கங்களை தொடர்ந்து பலவீனமடைய செய்துள்ளன. இந்த நாடுகளில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு வேகமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொது சுகாதார சேவைகளை மேம்படுத்தவில்லை, சமூக விலக லுக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கும் ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டன. இன்னும் கூட முழுமையாக கொரோனா விளைவுகளை எதிர்கொள்ளும் அளவிற்கு அரசாங்கங்களின் திறன் இலை. ஜெர்மனியின் n~ஸ்ஸே மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் n~பர் கொரேனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
கச்சா எண்ணெய் விலையில் ஒரு ஸ்திரத்தன்மையை கொண்டுவர, பெட்ரோலிய உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற ர~;யாவின் கோரிக்கையை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு நிராகரித்ததால் சவூதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து உலக சந்தையில் பெரிய அளவிற்கு எண்ணெய் விலையில் வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. (இந்தியாவில் விலை குறையவில்லை என்பது வேறு வி~யம்). உலகில் நிதிமூலதன சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து முடங்கிப் போயிருக்கிறது. பல பத்தாண்டுகளாக நவதாராளவாத கொள்கைகளால் கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதார சிக்கன நடவடிக்கைகள், பொது மருத்துவ துறையில் அரசின் கட்டமைப்புகளை மிகக் குறைந்த அளவிற்கு சுருக்கிவிட்டது. சொந்த நாட்டு மக்களின் உயிரையும் வாழ்வாதரங்களையும் பாதுகாக்க அந்தந்த அரசுகளுக்கு போதுமான திறமை, மருத்துவம் உட்பட உள்கட்டுமான வசதிகள் இல்லாதது, முதலாளித்துவ அமைப்பின் காரணமாக அரசாங்கங்களின் திறமைகள் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. மார்ச் 22-23 தேதிகளில் அய்க்கிய அமெரிக்காவில் நடந்த ஒரு மாதிரி ஆய்வில் விடை அளித்தவர்களில் 57 சதம் பேர் அய்க்கிய அமெரிக்காவின் அரசியல் அமைப்பு முறை பெரும்பணக்காரர்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது என்று கூறியிருக்கின்றனர். டோரோதி ராபர்ட்ஸ் என்ற ஒரு சட்ட பேராசிரியர், நிற வேறுபாடுடைய மக்கள், ஏழை மக்கள், குறைந்த வருமானம் பெறுவோர், மாற்று திறனாளிகள், வீடற்றோர்;, சிறைபட்டிருப்போர், எந்தவிதமான ஆவணங்களும் இல்லாதோர் ஆகியவர்களைத்தான் கொரோனா வைரஸ், மிக அதிகமான ஆபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக குறிப்பிடுகிறார்.
உலகமயமாதல் தற்போது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படும்போது பல நாடுகள் தனியாகவே போராடிக் கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் தலைமையில் நடந்து கொண்டிருந்தாலும், உலகளாவிய நோய்ப் பேரிடரின் விளைவுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் முதலாளித்துவத்திடம் இல்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் என்பது இது போன்ற சூழலில் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அய்க்கிய அமெரிக்காவிற்கு மட்டும் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஜெர்மானிய நிறுவனமான க்யூர்வாக் உருவாக்கியிருக்கும் தடுப்பூசி மருந்தின் மீதான முழு உரிமையையும் வாங்க முன் வந்திருக்கும் டிரம்ப் இந்தப் போக்கினையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் ஜெர்மானிய அரசாங்கம் அந்த உரிமையை வழங்க மறுத்துவிட்டது. மற்ற நாடுகளுக்கு சென்று உதவுவதில் சோசலிச கியூபா முன்னணியில் இருக்கிறது. நெருக்கடிக்கு முதலில் உட்பட்ட சீனமும் இத்தாலிக்கும் பிற நாடுகளுக்கும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறது.
நியூஸ்கிளிக் இணைய ஊடகத்தில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறியிருப்பதைப்போல் கொரோனா ஆபத்தால் பல்வேறு முதலாளித்துவ நாடுகளில், முதலாளித்துவ பொருளாதார விதிகள் மீறப்படுகிறன்றன. பொது மருத்துவ சேவையையும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியையும் சமூகமயமாக்கி வருகிறது. கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்பெயின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தனியார் மருத்துவமனைகளை நாட்டுடைமையாக்கி இருக்கிறது. கொரோனா தாக்கத்தை சந்திக்கும் வகையில் அதற்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் என டிரம்ப் சொல்;கிறார்.
பிரான்ஸ் நாட்டு தலைவர் நவதாராளவாத தனியார்மயமாக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்புவதுடன், கொள்கைகளை மாற்ற வேண்டும் என்கிறார். சமூக வாழ்க்கையை முழுவதுமாக சந்தை பொருளாதாரத்தின் ஆதிக்கத்திற்கு அடிபணியச் செய்வது சரியா என்ற விவாதம் ஜெர்மனியில் எழுந்திருக்கிறது. பொருள் உற்பத்தியில் அரசு கட்டுப்பாடு என்பதும், உற்பத்தி சமூக மயமாக்கப்படுவதன் தேவையை நோக்கியும் நகர்வது பல ஐரோப்பிய நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா நெருக்கடி கையாளப்படும் விதத்தை பற்றி பல விமர்சனபூர்வமான கட்டுரைகள் வந்துவிட்டன. எந்த முன்னறிவிப்புமின்றி சமூக விலகலை அறிவித்தது, உழைக்கும் மக்களை, குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோரை சொல்லொணா இன்னல்களில் தள்ளியுள்ளது. இங்கும் பாசிச அரசியலின் உண்மை முகம், தனியார்மயமாக்கலின் விளைவுகள் போன்றவற்றை மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர். பசு மூத்திரம் போன்ற மூட நம்பிக்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு மருத்துவம், மருத்துவர்கள் போன்ற விஞ்ஞானபூர்வமான நம்பிக்கைகள் முன்னுக்கு வருகின்றன. அரசின் தலையீடு என்ற சமூக அவசியத்தின் நிர்ப்பந்தம் தனியார்மயமாக்கல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரான கேள்விகளை மக்கள் சிந்திக்க துவங்கியுள்ளனர். ஒருவேளை இந்தியாவிலும் நெருக்கடி முற்றினால், இந்தியாவும் தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பிற நாடுகளைப் போல் சமூகமயாமாக்கும் பாதைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தற்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய நெருக்கடி, தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும், உலக மயமாதலும், தனியார்மயமாதலும், மொத்தத்தில் முதலாளித்துவ அமைப்பின் பலவீனங்களை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. பல நெருக்கடிகள் வருங்காலங்களிலும் வரலாம் போகலாம். ஆனால் இத்தகு நெருக்கடிகளை தற்போதைய அமைப்பு முறையால் சந்திக்க முடியாது என்பது தெளிவு. தற்போது உள்ளது போன்ற சமூக விலகல் கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவற்றை புத்தாயிரமாண்டிற்குப் பிறகு பிறந்த தற்போதைய இளைஞர்கள் முதல் முறையாக சந்திக்கின்றனர். கொரோனா நெருக்கடி முடிந்தவுடன் அரசியல் அமைப்போ முதலாளித்துவமோ முற்றாக மாறி ஒரு சோசலிச அமைப்பு உருவாகிவிடும் என்பதற்கான சாத்திய கூறுகள் அற்ற நிலையில், இந்த முதலாளித்துவ அமைப்பின் கையாலாகாத்தன்மையை, சமூக உற்பத்தி, மக்கள் ஜனநாயக ஆட்சி போன்ற கோட்பாடுகளை பரந்துபட்ட மக்களிடமும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் ஆதாரபூர்வமாக கொண்டு சேர்ப்பதற்கு இது ஒரு நல்ல தருணம்.