COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

இந்த நிவாரண தொகை போதுமா?

கஸ்தூரி. திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் ஊராட்சியில இருக்குறேன். விவசாய கூலி வேல செய்யறேன். எங்க வீட்ல 5 பேர் இருக்கோம். ஆயிரம் ரூபாயும் ரேஷனும் தந்துட்டா போதுமா?
மோடி நம்மள வூட்ல அடங்குன்னு சொல்லிட்டு, வேலை வருமானம் பத்தி வாய தொறக்க மாட்டார். கை கழுவு மூஞ்ச கழுவு சோப்பு போடுன்னு சொல்றாரு... எங்க ஊருல வந்து ஒரு மணி நேரம் வாழ சொல்லி கூப்புடனும்...
மோடி எடப்பாடி முதல்ல அவங்க கைய கழுவிட்டு மொத்தமா இந்த அரசியல விட்டு வீட்டுக்கு போக சொல்லி அனுப்பனும். இது நடந்தாலே ஜனங்களுக்கு எல்லா பிரச்சினைக்கும் தீர்வு வந்துடும். இங்கயே இந்த கதின்னா மத்த ஊருல... நினைக்கவே கதி கலங்குது. 1,000 ரூபா, அரிசி, பருப்பு, சக்கர, எண்ண.. இதை வெச்சு ஒரு மாசம் எப்படி ஓட்டுறது? எங்க வீட்ல 5 பேர். இந்த நிவாரண தொகை போதுமா? அரசாங்கம் ஒரு மாசத்துக்கு ரூ15,000 தரணும். இத தரலைன்ன நம்ம ரோட்டுக்கு போகலாம். கோட்டைக்கும் போகலாம், போராடலாம்.....

Search