ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் செங்குன்றம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த பத்து குடும்பங்களுக்கு நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தோழர்கள் தலா 5 கிலோ அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினர். சங்கத் தலைவர் தோழர் சுரேஷ், சிறப்புத் தலைவர் தோழர் ரஹமத்துல்லா, பொருளாளர் தோழர் மனோசம்பத், துணைத்தலைவர் தோழர் லட்சுமி, துணைச் செயலாளர் தோழர் வசந்தி உள்ளிட்டோர் இந்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.