பிரிக்கால் தொழிலாளர்கள்
நடத்துகிற வழக்குகள் பற்றிய சில குறிப்புகள்
எஸ்.குமாரசாமி
எழுச்சியுற்ற பிரிக்கால் தொழிலாளர் போராட்ட அலை கோவை எங்கும் பரவாமல் தடுக்க, அரசும் மூலதனமும், கொலை வழக்கு, கொலைச் சதி வழக்கு வரை செல்வார்கள் என்பதை, 2009ல் நாடு கண்டது.
சதி செய்து,
மனிதவள துறை துணை தலைவரை கொலை செய்தார்கள் என்று வனையப்பட்ட வழக்கில், சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதும், தலைவர்கள் கட்டளைபடி போட்டுத் தள்ளுகிறோம் என்று சொல்லிக்கொண்டே தாக்கிக் கொன்றார்கள் என்பதையும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என, 03.12.2015 அன்று கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிளாண்ட் - 3 தொழிலாளர் தலைவர் பெயர் ஜோடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்று, அவருக்கு எதிரான வழக்கையும் மாவட்ட அமர்வ நீதிபதி திரு.சீனிவாசன் தள்ளுபடி செய்தார்.
27 பேரில் 19 பேர் விடுதலையாக, எட்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம், மேலும் ஆறு பேரை, பொய் வழக்கு என விடுதலை செய்தது. ஆனால், இரண்டடி விழுந்துள்ளது, அதனால் முதல் இரண்டு பேர் குற்றவாளிகள் என்ற வினோத தீர்ப்பை வழங்கியது. பக்தர்கள் நம்பிக்கை, தேசத்தின் விருப்பம், முதலீட்டாளர் கவலை ஆகியவை சாட்சிய (எவிடன்ஸ்) சட்டத்தில், நீதித்துறையால் புகுத்தப்பட்டுவிட்டன.
இரண்டு பேருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேர் விசயத்திலும், நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சங்க முன்னணிகளுக்கெதிரான 20க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும் தள்ளுபடி ஆகிவிட்டன. பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிக்கால் தோழர்கள் நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கணக்கில் சிறை வாசம் அனுபவித்தார்கள். அனுபவிக்கிறார்கள்.
ஆயுள் சிறைவாசத்தில் இருக்கிற தோழர் மணிவண்னனுக்கு, அவரது தாயார் உடல் நலத்தையொட்டி உயர்நீதிமன்ற உத்தரவுபடி 15 நாட்கள் பரோல் பெறப்பட்டு, அவரது பரோல் காலமும் முடிந்துவிட்டது.
சிவில் வழக்குகள் கதை, சோகக் கதைதான். சங்கம் துவங்கியபோது, சங்கத்தையோ, சங்க முன்னணிகளையோ தரப்பினர் ஆக்காமல், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத சங்கத்தினரை தரப்பினராக்கி, தொழிலாளர்களுக்கு எதிராக, நிர்வாகம், கோவையில் தடை பெற்றது. நிர்வாக இயக்குனர் வீட்டின் முன் யாரும் வரக்கூடாது என்று தரப்பட்ட, ஓர் இடைக்கால தடை மட்டும் நீக்கப்பட்டது. பிறிதொரு வேலை நிறுத்தம் 25.04.2017 அன்று நடந்து முடிந்த பிறகும், இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக தரப்பட்ட தடை, மேல் முறையீடு 2020ல் விசாரிக்கப்பட்டபோதும், தொடரும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வேலை நிறுத்தம், நடந்து முடிந்து விட்டது, அதற்குப் பிறகு 3 வருடங்கள் கழித் தும், அதை ஒட்டிய தடை தொடர முடியாது என்ற சாமானியப் புரிதல், ஏனோ நீதிமன்றத்திற்கு மட்டும் ஏற்கத்தக்கதாக இல்லை.
ஒரு வேளை, இதைத்தான், ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று சொல்கிறார்களோ?
2007ல் உருவான சங்கத்தின் பெரும்பான்மையை உடைக்க, நிர்வாகத்திற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. அரசுகளின் முதலாளித்துவ விசுவாசம், நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவது என்பவற்றைத் தாண்டி, போராடும் தொழிலாளர்கள், கடைசி ஆள் உயிரோடு இருக்கும் வரை போராடுவோம் என உறுதியாக நிற்பதுதான், போராட்டம் சொல்லும் சாரமான செய்தியாகும்.
என்ன போராட்டங்கள் நடந்து என்ன? என்ன அரசாணைகள் பெற்று என்ன? என்ன தீர்ப்புகள் வாங்கினால் என்ன? கடைசியில், கையில் என்ன மிஞ்சியது? இப்படிப் பார்ப்பது, புத்திசாலித்தனமான வியாபாரியின் பார்வையாக இருக்க முடியுமே தவிர, அடிபணியாமல் போராடும் தொழிலாளியின் பார்வையாக இருக்க முடியாது.
இரு தரப்பினருக்கும் இடையில் நிலுவையில் உள்ள தொழில் தகராறுகள்
1. 2007 பணியிட மாற்றம் தொடர்பான வழக்கு: சங்கம் துவங்கியவுடன் முன்னோடிகள் உத்தர்கண்டுக்கு மாற்றப்பட்டார்கள். நிர்வா கமும் நிர்வாக சாட்சியும் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடைபெறும் தொ.த.எண் 551/2008ல், உத்தர்கண்டில் வர்த்தக உற்பத்தியை துவங்கும் முன் பணியிட மாற்றம் நடந்ததாக, இயந்திரங்களை நிறுவும் பயிற்சி இல்லாதவர்கள் கொண்டு இயந்திரங்களை நிறுவ, இந்தி தெரியாதவர்கள் கொண்டு இந்தி பேசுபவர்களுக்குப் பயிற்சி தர, உடல் மொழியால் பயிற்சி தர பணியிட மாற்றம் நடந்ததாகச் சொல்லியுள்ளனர். உத்தர்கண்டிற்கு இடமாற்றம் நடந்து விட்டதால், இனி எல்லா பரிமாற்றங்களும் உத்தர்கண்டில் இருந்துதான் என்று சொன்னவர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களை, விசாரணை இல்லாமல், கோவையில் இருந்துதான் வேலை நீக்கம் செய்தனர்.
வழக்கில், முதலில் கோவை மாவட்ட பிரிக்கால் எம்பிளாயீஸ் டிரேடு யூனியன், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கம் தரப்பினராய் இருந்தனர். இந்த இரண்டு சங்கங்களும் (அமால்கமேட்) இணைந்து, கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம் உருவானது. இந்த சங்கத்துடன்தான் நிர்வாகம் 2012லும் 2014லும் தொழிலாளர் துறை முன் ஒப்பந்தம் போட்டது. வழக்கில், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தை தரப்பினராய் சேர்க்க சங்கம் மனு தாக்கல் செய்தது. நிர்வாகம் எதிர்த்தது. ஆனபோதும் சங்கத்தின் மனு ஏற்கப்பட்டது.
வழக்கு 2007ல் நடந்த பணியிட மாற்றம் தொடர்பானது. வழக்கை இழுத்தடிக்க சங்கங்கள் இணைந்தது தொடர்பான ஆவணங்கள், தீர்மானங்கள் கோரி நிர்வாகம், மனு தாக்கல் செய்தது. சங்கத்தின் எதிர்ப்பை ஏற்காமல், கோவை தொழிலாளர் நீதிமன்றம், நிர்வாகம் கோரிய ஆவணங்களை நாம் தாக்கல் செய்ய வேண்டும் என 2019ல் உத்தரவிட்டது. சங்கம் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து, இந்த உத்தரவுக்கு தடை பெற்றது. வழக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொன்னது. நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், ரிட் மனு விசாரணை இறுதியாக முடியும்வரை, கோவை நீதிமன்றம் தீர்ப்பு எழுத வேண்டாம், வாதங்களை வேண்டுமானால் கேட்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கத் தரப்பு வாதங்கள் முடிந்து விட்டன. 2007 பணியிட மாற்றல் உத்தரவு தொடர்பான வழக்கில், 2020 வரை நிர்வாகம் தன் வாதங்களை முடிக்கவில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான வழக்கு கோவையில் 13 ஆண்டுகள் ஆன பின்பும் முடியவில்லை.
2. 08.06.2012ல் நிர்வாகம் சங்கத்தோடு ஒப்பந்தம் போட்டது. அப்போது அஇஅதிமுக ஆட்சி வந்துவிட்டது. தொழிலாளர் துறை உயர்அதிகாரிகள் நிர்வாகம் பக்கம் இருந்தனர். 01.01.2012 முதல் ஒப்பந்த பயன்கள் என இரு தரப்பினரும் பேசிவந்த நிலையில், ஒப்புக் கொண்ட நிலையில், நிர்வாகம் வேண்டுமென்றே, முதல் 5 மாதங்களுக்கு சம்பள உயர்வு தர மறுத்தது. அந்த ஒப்பந்தத்திலேயே, இந்த 5 மாத சம்பள பிரச்சனையை சமரச பேச்சு வார்த்தைக்கு எடுத்துக்கொள்ள முடிவானது. 2012ல் 5 மாதங்கள் சம்பள உயர்வு பாத்தியதை வழக்கு, 2019ல், ஏழு வருடங்களுக்குப் பிறகே, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. வழக்கு, தொழிற் தீர்ப்பாயம் சென்னை முன்பாக உள்ளது. வழக்கு எண்: ஓ.பி.30/2019.
3. 08.06.2012 ஒப்பந்தத்தில் வேலைநீக்கம் தொடர்பாக சுமூக தீர்வு காண, நிர்வாகம், சங்கம் மற்றும் இருவர் கொண்ட நால்வர் கமிட்டி ஒன்று போடுவது என்றும், அந்த கமிட்டியின் முடிவு அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டது.
27 அமர்வுகளுக்குப் பிறகும், நால்வர் கமிட்டி, சுமுக தீர்வுக்கு வரவில்லை. நிர்வாகம், வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் ஒரு நஷ்ட ஈட்டுத் தொகை அறிவித்தது. சங்கம், நஷ்டஈடு வேண்டுமா, வழக்கு நடத்துவதா என்பது தொழிலாளியின் முடிவு என்றது. இந்த நால்வர் குழு கடைசியாக ஜ÷லை 2014ல் கூடியது. 02.08.2014ல் இரண்டாவது முத்தரப்பு ஒப்பந்தம் தொழிலாளர் துறை முன் போடப்பட்டது. நால்வர் குழுவின் பல அமர்வுகளுக்குப் பிறகும், தரப்பினர், அவரவர் நிலையில் இருந்ததால் தீர்வு வரவில்லை என்றும், சுமுக தீர்வு காண முயற்சிப்பார்கள் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், 01.10.2014 அன்று, நிர்வாகமும் மத்தியஸ்தர்களும் மட்டும் கூடி, வேலை நீக்கம் செய்யப்பட்ட எவருக்கும் வேலை கிடையாது, நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு தொழில் தகராறுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என ஓர் அறிக்கை தந்தனர். சங்கம், இந்த தீர்வை ஒப்புக் கொள்ளவில்லை என மூவரும் தெரிவித்தனர்.
நிர்வாகம், கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில், வேலை நீக்க வழக்கை நடத்தாமலே, 08.06.2012 ஒப்பந்தப்படி வழக்கு முடிந்துவிட்டது என்றும், வழக்கு நிலைக்கத் தக்கதா இல்லையா என தீர்மானிக்கக் கோரியும், 2019ல் ஒரு மனு தாக்கல் செய்தது. 2008, 2009, 2010இல் வேலை நீக்கங்கள் நடந்தன.
கோவை தொழிலாளர் நீதிமன்றம், ஒரு பகுதி வேலைநீக்க வழக்குகளை,வேலைநீக்கம் சரியா தவறா என விசாரிக்காமலேயே, வழக்கு ஒப்பந்தப்படி முடிந்துவிட்டதாக சொல்லி தள்ளுபடி செய்தது. கிட்டத்தட்ட 60 பேர் இதற் கெதிராக ரிட் மனு போட்டனர். தொழிலாளர் பிரதிநிதியாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்ட, நால்வர் குழுவில் இடம் பெற்ற தோழர் எஸ்.குமாரசாமி, அகில இந்திய பார் கவுன்சில் விதிகள்படி வழக்கறிஞராக இந்த வழக்கை நடத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவு போட்டார். வழக்கு இறுதியாய் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. கோவையில், மீதமுள்ள வழக்குகளில், தொழில் தகராறு நிலைக்கத் தக்கதல்ல என்ற நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் பிரிவு 36ன் கீழ் தொழிற்சங்க பிரதிநிதியாக தோழர் எஸ்.குமாரசாமி வாதாடி முடித்து விட்டார்.
4. 2014 - 2015ல் நிர்வாகம் 20% போனஸ் வழங்கவில்லை. லாபத்தில் பங்கு என தர வேண்டிய 15.34% வழங்கவில்லை. இவற்றை வழங்கக் கோரி, சங்கம் தொடர்ந்த தொழில் தகராறு, சென்னையில் உள்ள தொழிற் தீர்ப்பாயம் முன் ஓ.பி.எண் 11/2019 என விசாரணைக்கு வந்துள்ளது.
5. 2012, 2014 ஒப்பந்தங்களில் பொது வேலை நிறுத்த நாட்களில் மாற்று வேலை செய்ய ஷரத்து உள்ளது. அதன்படி பலமுறை, பொது வேலைநிறுத்த நாட்களில், ஆலை இயங்காமல் வேறொருநாள் மாற்று வேலை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் செத்து மடியும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து தமிழ்நாட்டின் அனைத்து மய்ய சங்கங்களும் 25.04.2017 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தன. சங்கம், ஒப்பந்தப்படி முன் தகவல் தந்து, 25.04.2017 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தது. இதற்கு நிர்வாகம் 804 பேருக்கு 8 நாட்கள் சம்பளத்தை தண்டனையாக பிடித்தது.
இதற்கெதிராக, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. வழக்கை நீதிமன்றத்திற்கு விரைந்து அனுப்ப வேண்டும், தொ.த. சட்டம்1947ன் 10பி பிரிவின் கீழ் 8 நாட்கள் சம்பளத்தை முன்பணமாக கொடுக்க உத்தரவிட வேண்டும் என ஜ÷ன் 19 முதல் ஜ÷லை 4 வரை காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடந்தது. சென்னையிலும் கோவையிலும் நடந்த காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.அரிபரந்தாமன் காணொளி மூலம் சென்னையில் துவக்கி வைத்தார். காலவரையற்ற பட்டினிப் போராட்டம் 16 நாட்கள் நடந்தது.
அரசு 10பி உத்தரவு போடவில்லை. ஆனால் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் நியாயமா, முன் பணம் கேட்டு இடைக்கால தீர்ப்பு கோரிக்கை நியாயமா என்ற எழுவினாக்களை 05.07.2017 அன்று நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பியதால், பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கோவை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு, இடைக்கால தீர்ப்பு போடும் அதிகாரம் வழக்கு எழுவினாப்படியே உள்ளது என்பதை, சங்கத்தால் புரிய வைக்க முடியவில்லை. சங்கத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்துவிட்டது. நிர்வாகத் தரப்பு சாட்சி விசாரிக்க வேண்டி உள்ளது. இது வழக்கு எண் 121/2017.
6. புதிய ஒப்பந்தம் வலியுறுத்தி சங்கம், 21.08.2018 முதல் வேலைநிறுத்தம் துவங்கியது. 29.11.2018 தேதிய, இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட தொழிலாளர் துறை அறிவுரை மூலம், வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. எந்த பழி வாங்குதலும் இருக்காது என நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
ஆனால் வேலை நிறுத்தத்தால் பெரும் பாதிப்பு என, போராடியவர்களில் 302 பேரை மட்டும், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்க உறுப்பிர்களை மட்டும், 01.12.2018 தேதிய உத்தரவு மூலம், அவர்கள் வேலைக்குத் திரும்பிய 03.12.2018 முதல் உத்தர்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கு நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது. பணியிட மாற்றத்திற்கு எதிராக 24.12.2018 அன்று சங்கம் தொழிற்தகராறு எழுப்பியது. 15.34% லாபத்தில் பங்கு மறுப்பு, உச்சவரம்பு இல்லாத 20% போனஸ் மறுப்பு, கல்வி உதவித் தொகை, தற்செயல் விடுப்புத் தொகை மறுப்பு, அவற்றை மாற்று சங்கத்தினருக்கு முன்பணமாக தந்திருப்பது ஆகியவற்றுக்கு எதிராகவும், இந்த தொழில் தகராறை எழுப்பியது.
பணியிட மாற்றத்திற்கு எதிராக நேரடியாக தொழில் தகராறு சமரச அலுவலர் முன் இருந்தபோது, அவரது அனுமதி பெறாமல், பணியிட மாற்றலை அமல்படுத்தவில்லை என நிர்வாகம் 302 பேரை 11.02.2019 அன்று வேலை நீக்கம் செய்தது. வேண்டுமென்றே, தவறாக, கோவை தொழிலாளர் நீதிமன்றம் முன்பு தொழில் தகராறு எண் 121/2017ல் பணி நீக்கத்திற்கு ஒப்புதல் கோரி மனு தாக்கல் செய்தது.
சங்கம் தொடுத்த 4580/2019 ரிட் மனுவில், 15.02.2019 அன்றே வேலை நீக்கத்திற்கு தடை வழங்கப்பட்டது. நிர்வாகம் தொடர்ந்த 969/2019 ரிட் மனுவிலும், சங்கம் கோரியவாறு பணியிட மாற்றல் வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பலாம் என ஆணையிடப்பட்டது. உரிய விதத்தில் 10பி உத்தரவு போடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி 06.03.2019 அன்று இறுதி தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகள் அமர்வம் 02.04.2019 அன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்குகளில், ஏற்கனவே வேலை நீக்கம் செய்துவிட்டதால், பணியிட மாற்றம் தொடர்பான வழக்கை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பக் கூடாது என்ற நிலைபாட்டை நிர்வாகம் எடுக்கவில்லை. மாறாக, பணியிட மாற்றம் தொடர்பான தொழில் தகராறை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில் 03.05.2019 அன்று பணியிட மாற்றம் மற்றும் பணப்பயன்கள் தொடர்பான தொழில் தகராறை ஓ.பி.எண் 6/2019 என தொழில் தீர்ப்பாய விசாரணைக்கு, அரசு அனுப்பி உள்ளது. அதே நேரம், 10பி பிரிவின் கீழ் பணியிட மாற்றல் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
நிர்வாகம் பணியிட மாற்றல் உத்தரவை நிறுத்தி வைத்து, தொழிலாளர்களுக்கு கோவையில் பணி வழங்காததால், நிர்வாகத்திற்கு எதிராக தொ.த.சட்டம் 1947ன் 29எ பிரிவின் கீழ் பிராசிக்யூஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு எண் 17371/2019 தாக்கல் செய்துள்ளது. நிர்வாகம் 10பி உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் தடை வேண்டும் என ரிட் மனு எண் 21433/2019 தாக்கல் செய்துள்ளது.
பணியிட மாற்றல் உத்தரவு தொடர்பான தொழில் தகராறு தொழில் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்படுவதால், பணியிட மாற்றத்திற்கு அடுத்து வந்த வேலைநீக்க வழக்கிற்கு ஒப்புதல் கோரும் மனுக்களை, கோவை தொழிலாளர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் உயர்நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் சங்கம் வலியுறுத்துகிறது.
ஏற்கனவே, 2007ல் 2009ல் தமிழக அரசு, பிரிக்கால் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் விதம் போட்ட 10பி ஆணைகள் செல்லாது என, நிர்வாகம் போட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் டிசம்பர் 2007லும், ஒரு நீதிமன்ற அமர்வில் 2010 துவக்கத்தில், அதாவது சில மாதங்களுக்குள்ளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இப்போது சங்கம் எல்லா வழக்குகளையும் நடத்தி வந்தாலும், தொழில் தீர்ப்பாயம் முன் உள்ள பணியிட மாற்றல் தொடர்பான வழக்கு மய்யமான தீர்மானகரமான வழக்கு என கருதுகிறது. இந்த வழக்கில் சங்கத் தரப்பு சாட்சியம் முடிந்துவிட்டது. நிர்வாகத் தரப்பில், வேலையை விட்டுச் சென்றாலும், விசுவாசமாகவும் பொறுப்பாகவும் முன்னாள் தலைமை மக்கள் அதிகாரி (இஏஐஉஊ டஉஞடகஉ’ந ஞஊஊஐஇஉத) மலர்வண்ணன் சாட்சியம் சொல்லி முடித்து விட்டார். அடுத்த சாட்சி உண்டா என, அவர்கள் சொல்ல வேண்டி உள்ளது.
மிகவும் சிரமம்தான். ஆனாலும் எல்லா விதங்களிலும் தொழிலாளர் வர்க்கம் போராடும். பழிவாங்குதல்கள், போராட்டங்கள், வழக்குகள் என நடந்துள்ள பிரிக்கால் தொழிலாளர் எழுச்சி, தமிழ்நாட்டு தொழிலாளர் இயக்க வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தை தானே தேடிக் கொண்டுள்ளது.