அய்க்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவன தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள்
எஸ்.குமாரசாமி
சான்மினா எஸ்சிஅய், 4 கண்டங்களில் 25 நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனம். ஆண்டு வருவாய் ரூ.50,000 கோடி தாண்டும்.
திருபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம் மண்டலத்தில் கொரிய, ஜப்பான், அய்ரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களுடன் அய்க்கிய அமெரிக்க, கனடிய நிறுவனங்களும் உண்டு. அவற்றுள் அய்க்கிய அமெரிக்க நிறுவனமான சான்மினாவும் ஒன்று.
சான்மினா, மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம். மின்னணு நிறுவனமும் கூட. 7, 8 வருடங்களில் சிஅய்டியு, அய்என்டியுசி, ஏஅய்சிசிடியு, எல்டியுசி என நான்கு சங்கங்கள் செயல்பட்டன. 2017 பிப்ரவரியிலிருந்து சான்மினாவை தோழர்கள் குமாரசாமி, பாரதி, ராஜகுரு, ராஜேஷ் வழிநடத்தி வருகின்றனர். எல்டியுசி சங்கத்துக்கு மாற்றம் நிகழும் வரை தோழர் இரணியப்பனும் செயல்பட்டார்.
நிர்வாகம் இடதுசாரி சங்கங்களோடு பேசவில்லை. தொழிலாளி ஒப்புதல் பெறாமல், தொழிலாளி ஆதரவு இல்லாமல், தொழிலாளர் துறை ஒத்துழைப்புடன் மட்டும் அய்என்டியுசி சங்கத்துடன் 2017ல் ஒப்பந்தம் போட்டது. தொழிலாளர்கள் அதனை ஏற்கவில்லை. புதிய ஒப்பந்தம் வேண்டும் என்ற தொழில் தகராறை, சமரச அலுவலர் சட்ட விரோதமாக, தம் அளவிலேயே நிராகரித்துவிட்டார். அதற்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்ய சங்கம் தயாராகி வருகிறது.
பெரும் எண்ணிக்கையில் தற்காலிக நீக்கம், சம்பளத்துடன் பலருக்கு விடுப்பு, இரண்டு முறை விருப்ப ஓய்வு என ஆட்குறைப்பு நோக்கி முயற்சிகள் நடந்துள்ளன.
ஒரு தொழிலாளியை மேற்பார்வையாளர் தகாத முறையில் பேசிய விசயம், மனம் போன போக்கில் ஒருதலைபட்ச சம்பள உயர்வு என்ற பிரச்சனைகளில், இரண்டு வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. நிர்வாகம் 2017 நவம்பரில் ரூ.2,650 என அறிவித்த ஊதிய உயர்வு, ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகிய பிரச்சனைகளுக்கு எதிராக, தீபாவளி, ஜனவரி 1 மற்றும் பொங்கல் தாண்டி 65 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. ஒரகடம் தாண்டி, சென்னையில் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், அய்க் கிய அமெரிக்க தூதரகம், சட்டமன்றம் என நீண்ட இந்த போராட்டம், துணை முதலமைச்சர் தலையீட்டுடன் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தின் ஆறாம் நாள் முடிந்தது. பட்டினிப் போராட்டம், திருபெரும்புதூரில் தனியார் இடத்தில் நடந்தது.
2018, 2019 ஆண்டுகளில் அடுத்தடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளால் நிர்வாகத்தின் கை உயர்ந்தது. தொழிலாளர் துறை முன் தந்த எழுத்துமூல வாக்குறுதியை மீறி சங்க முன்னணிகள் தோழர்கள் நித்தியானந்தம், லோகநாதன், சாரதி ஆகியோரை, நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது. நிர்வாகம் அய்என்டியுசி சங்கத்தோடு ஓர் ஒப்பந்தத்தில், தொழில் தீர்ப்பாயத்தில் சிஅய்டியு நடத்தி வந்த தொழில் தகராறுகளை முடித்துக் கொள்வதாகவும், அவற்றை வலியுறுத்தப் போவதில்லை எனவும் ஒப்புக்கொண்டது. ஆனால், அப்படிபட்ட ஒரு தொழில் தகராறில், நிர்வாகத்தின் கூற்றுபடி இருக்க முடியாத ஒரு தொழில் தகராறில், நமது சங்க முன்னணிகளின் பணி நீக்கத்திற்கு ஒப்புதல் கோரி, நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
ஒரு வருடத்திற்கு மேல் 100% பிழைப்பூதியம் தந்து சில தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைத்துள்ளது. 2019ல் மீண்டும் ஒரு மிகக் குறைவான ஒருதலைபட்சமான ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிட்டது. இது பற்றி நிறுவன தலைமை அதிகாரியை, ஒப்புதல் பெற்று சந்தித்தவர்களை, கெரோ செய்தனர் எனச் சொல்லி தற்காலிக நீக்கம் செய்தது. ரூ.10 லட்சம் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் போக நிர்ப்பந்தம், கட்டாய விடுப்பு, வருகையின்மை புகாரில் பிழைப்பூதியம் இல்லாமல் 26 பேரை வெளியே நிறுத்துவது என்ற தாக்குதல்கள் ஏவப்பட்டன. நோயுற்று இறந்த ஒரு தொழிலாளிக்கு விருப்ப ஓய்வு தொகை மறுக்கப்பட்டது. அது பற்றி கேட்கச் சென்றவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். உடல் நலம் தேறி வேலை செய்ய தகுதி உண்டு என சான்றிதழ் தந்த ஒரு தொழிலாளிக்கு வேலை மறுக்கப்பட்டது.
சங்க முன்னணிகள் வேலை நீக்கத்தில், தற்காலிக நீக்கத்தில் இருந்தபோது, உள்ளே இருந்த முன்னணிகளும் அடுத்தடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது, சங்கத்திற்கு பெரும் சவாலானது. இந்த சங்க முன்னணிகள் இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளனர். மதர்சன் போராட்டத்தில் முனைப்புடன் பங்கு பெற்றனர்.
ஆயினும், சங்கத்தின் வெளித்தலைமைக்கும் உள்ளேயிருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொடர்பில் சில பலவீனங்கள் நிலவின. ஏஅய்சிசிடியுவிலிருந்து எல்டியுசி நோக்கிய மாற்றமும் இந்த கட்டத்தில்தான் நடந்தது.
சான்மினாவில் ஏற்பட்ட நெருக்கடியை, தோழர் குமாரசாமி தலைமையில் நேரடியாக, எதிர்கொள்ள நேர்ந்தது. அடுத்தடுத்து கூட்டங்கள், பொதுப் பேரவைகள் நடந்தன. என்ன பாதிப்பு வந்தாலும் 02.03.2020 முதல் வேலை நிறுத்தம் செய்வது என முடிவானது. வேலை நிறுத்த அறிவிப்பு தரப்பட்ட பிறகு, நிர்வாகம், தலைமை அதிகாரியை கெரோ செய்தனர் என இடைநீக்கம் செய்த மூவரை, நிலையாணைகளுக்கு புறம்பாக விசாரணையில்லாமல் வேலை நீக்கம் செய்துவிட்டது.
வேலைநிறுத்த அறிவிப்பிலேயே, சங்கம், மனிதர்கள், மூலப் பொருட்கள், வாகனங்கள் வருவதை போவதைத் தாம் தடுக்கப் போவதில்லை என்றும், தேவை இல்லாமல் அதற்கு நீதிமன்றம் சென்று தடை வாங்க வேண்டாம் என்றும், ரெகுலர் உற்பத்தியில் நிரந்தரம் அல்லாதவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.
ஆலை வாயிலில் பிளாஸ்டிக் ஷீட் பந்தல் போடப்பட்டது. ஓர் அலுவலகம் மற்றும் சமையல் அறை உருவானது. தொழிலாளர்க்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் நிழலில் வேறு வேறு இடங்களில் ஒதுங்கிக் கொண்டு இருந்தாலும், போராட்டத்தில் உறுதியாக இருந்தனர். உற்பத்தி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தையொட்டி, 27.02.2020, 02.03.2020, 05.03.2020, 10.03.2020, 17.03.2020, 19.03.2020 தேதிகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 02.03.2020 அன்று சங்க பொதுப் பேரவையும், வேலைநிறுத்த ஒருமைப்பாடு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. நிர்வாகத் தரப்பில் மனித வளத் துறை இயக்குநர், முதல் இரண்டு சுற்றுகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.
ஓரிரண்டு அமர்வுகளிலேயே, உடல்நிலை தகுதி சான்று தந்த தொழிலாளியை பணிக்கு அனுமதிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிவிட்டது, வருகையின்மை என வெளியே நிறுத்தப்பட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டது என்ற விவரங்களைத் தெரிவித்தது. கடைசியாக இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளச் சம்மதித்தது. அடுத்த இடை நீக்கம் பற்றியும் பேச தயார் என்றது.
பழைய இடைநீக்கம் தொடர்பாக ஒரு திட்டவட்டமான பதில் வேண்டும் என்றும், வேலைநீக்கம் திரும்பப் பெறப்பட வேண்டும் அல்லது பிழைப்பூதியம் தரப்பட வேண்டும் அல்லது கெப்ட் இன் அபேயன்ஸ், அதாவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் கோரியது. நிர்வாகத்தின் பதில் அறியவும், சங்கம் ஏதாவது மாற்றி யோசிக்கிறதா என அறியவும், அடுத்தடுத்த தேதிகளில் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இந்த நேரத்தில் கொரோனா ஆபத்து, தொழிலாளர்கள் கூட முடியாத நிலையை உருவாக்கியது.
இந்த பின்னணியில் 19.03.2020 அன்று இரு தரப்பினரும் தொழிலாளர் துறை முன் ஏற்றுக் கொண்ட அறிவுரைப்படி வேலை நிறுத்தம் முடித்துக் கொள்ளப்பட்டது.
வருகையின்மை என வெளியே நிறுத்தப்பட்டு பின்னர் வேலைக்கு எடுக்கப்பட்டவர்களுக்கு முழுசம்பளம் தரப்பட்டுவிட்டது. எச்சரிக்கை தரப்பட்டு பிரச்சனை முடிக்கப்படும்.
தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்கள், எச்சரிக்கை தரப்பட்டு, வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
5 தொழிலாளர்கள் தற்காலிக பணி நீக்கத்துக்கு, பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும்.
வேலை நிறுத்தம் நிமித்தம் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது.
23.03.2020 அன்று தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பிவிட்டனர். கொரோனா சிகிச்சைக்கு வெண்டிலேட்டர் உற்பத்தி செய்ய தயாராகின்றனர்.
இப்போது ஆறு தொழிலாளர்களின் பணிநீக்க வழக்குகள், நிர்வாகம் ஒப்புதல் கோரும் (அப்ரூவல்) கட்டத்தில் உள்ளன.
1. இல்லாத பொருந்தாத தொழில் தகராறில் பணிநீக்கத்துக்கு நிர்வாகம் ஒப்புதல் கேட்டுள்ளது, பொருந்துகிற தொழில் தகராறில் ஒப்புதல் கேட்கவில்லை எனச் சொல்லி வாதாடுகிறோம்.
2. பணிநீக்கம், மாதிரி நிலையாணைகளுக்குப் புறம்பானது, அதன்படி விசாரணை இல்லாமல் வேலை நீக்கம் செய்ய முடியாது, அதனால் அப்ரூவல் மனு நிலைக்கத் தக்கதல்ல என வாதாட உள்ளோம்.
கொரோனா ஆபத்து அகன்ற பிறகு சான்மினா சங்க நடவடிக்கைகள் திட்டமிட்டு முன் நகர்த்தப்படும்.
சான்மினா வேலை நிறுத்தத்தில், நிர்வாகத்தின் கடந்தகால நடவடிக்கைகளால் ஏற்பட்டு இருந்த அவநம்பிக்கை, வேலை நிறுத்தம் சில நாட்கள் நீடிக்க காரணமாக இருந்தது.
மேக்னா தொழிலாளர்
வேலை நிறுத்தப் போராட்டம்
மதர்சன் வேலை நிறுத்தம் முடிந்த 50ஆம் நாள், சான்மினா வேலை நிறுத்தம் துவங்கியது. சான்மினாவைத் தொடர்ந்து, மேக்னாவில் 20.03.2020 முதல் வேலை நிறுத்தம் துவங்கியது.
மேக்னா கனடா பன்னாட்டு நிறுவனம். உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோ உதிரிபாக நிறுவனம். இதுவும் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்.
சான்மினா போராட்ட அறிவிப்பு காலம் முதலே, 01.01.2020 முதல் புதிய ஒப்பந்தம் போட வேண்டும், நிர்வாகம் கொண்டுவந்த அய்என்டியுசி சங்கம் வேண்டாம் என, தொழிலாளர்கள் எல்டியுசிடியை அணுகி வந்தனர். சுமார் 75 நிரந்தர தொழிலாளர்களில் 60 பேர் எல்டியுசியில் இணைந்தனர். இது தொடர்பாக தகவல் சொன்ன கடிதத்தை நிர்வாகம் வாங்காமல் திருப்பி அனுப்பியது. அற்ப காரணங்களுக் காக குறிப்பாணை தரப்பட்ட மூன்று பேரையும், மற்றும் சங்க நடவடிக்கையை காரணமாக குறிப்பிட்டே, கிளைச் செயலாளரையும் நிர்வாகம் 19.03.2020 அன்று தற்காலிக பணி நீக்கம் செய்தது.
கொரோனா ஆபத்து முற்றிய நிலையிலும், 20.03.2020 முதல் வேலைநிறுத்தம் துவங்கியது. வேலை நிறுத்தம் செய்த 60 தொழிலாளர்களும் சமரச அலுவலகம் சென்றனர். நிர்வாகம் வேலைநிறுத்த பாதிப்பை சந்தித்துக் கொண்டிருப்பதால், 23.03.2020 திங்கள் அன்று பேச்சு வார்த்தைகளுக்கு வருவதாகச் சொன்னது.
விலகி அமர்ந்தபடி, மருத்துவ எச்சரிக்கைகளுக்கு ஏற்ப 22.03.2020 அன்று பொதுப் பேரவை நடத்தப்பட்டது.
நிர்வாகத் தரப்பில், அய்என்டியுசியும் வேண்டாம், எல்டியுசியும் வேண்டாம் உள்சங்கம் வையுங்கள் என தூது விடப்பட்டது. தற்காலிக பணிநீக்கம் ரத்து செய்யப்படாமல், சங்கம் ஏற்கப்படாமல் வேலை நிறுத்ததை முடிக்க வேண்டாம் என்று தொழிலாளர்கள் முடிவு எடுத்தனர்.
23.03.2020 அன்று நிர்வாகமும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில், சமரச அலுவலர் ஆலோசனைப்படி வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. போராட்டத்தை தொடர தயாராக இருந்த தொழிலாளர்களை கொரோனா நிமித்தம், வேலைக்கு திரும்புமாறு சங்கம் அறிவுறுத்தியது. சம்பள பட்டுவாடா சட்டத்திற்கு புறம்பாகவும், தொழிலாளர் துறையின் அறிவுரையை மீறியும் நிர்வாகம் மார்ச் 30 அன்று சம்பள பிடித்தம் செய்துள்ளது.
சான்மினா, மேக்னா சங்க நடவடிக்கைகள் மதர்சன் போராட்டத்தின் தாக்கம் ஆகியவற்றால் மே 1 வரை பிரச்சார இயக்கம் நன்கு நடக்க வாய்ப்பு இருந்தது. கொரோனா குறுக்கே வந்தது. கொரோனாவுக்கு பிறகு, அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க எல்டியுசி காத்திருக்கிறது.