உரிமை பறிப்பு, ஊதிய வெட்டு, ஊழல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு
நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்
2020 மே மாத கம்யூனிஸ்ட் இதழும் அச்சுக்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கு தொடர்கிறது. சாமான்ய மக்களின் துன்பங்கள் தொடர்கின்றன. தீவிரமடைகின்றன. அவற்றுக்கு தீர்வு காண முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன. ஆயினும் இந்த நெருக்கடி நிலைமைகளிலும் மதவெறி, ஊழல் நடவடிக்கைகளில் உற்சாகமாக தொய்வின்றி ஈடுபடுகின்றன.
சவப்பெட்டி ஊழல் நமக்கு மறந்துவிடாது. ஒரு பக்கம் கார்கில் போர், தேசப்பற்று என்று கூவிக்கொண்டே, நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று பிதற்றிக்கொண்டே, மறுபக்கம் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களைக் கொண்டு வரும் சவப்பெட்டி விலையில் ஊழல் செய்தவர்கள்தான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். இன்றும் உலகம் காணாத நெருக்கடியான கட்டத்திலும் ஊழல் செய்திருக்கிறார்கள்.
எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை என்ற குரல்தான் தலை காய்ந்த மக்கள் மத்தியில் இருந்து எழுந்து கொண்டிருக்கிறது. புழு பூச்சி களைந்த ரேசன் அரிசியை தொலைக்காட்சி காமிரா முன் காட்டி, இதில் புழு பூச்சியை களைந்து வைத்துள்ளோம், இதுவே இப்படி இருக்கிறது, இதை எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறார் ஒரு பெண். இது போன்ற குரல்களை ஏற்கனவே தமிழ்நாட்டில் கேட்டிருக்கிறோம்.
எங்குதான் போயுள்ளது நிதி எல்லாம்? ஏற்கனவே புயல், வெள்ள நிதி எதுவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகச் சென்று சேரவில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த இயற்கைப் பேரிடர் காலங்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தான பேரிடர் வந்துள்ளபோதும் அதே போன்ற நிலைமையை தக்க வைப்பதில் பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது.
மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சென்று சேர்ந்துள்ளது. அதற்கு மேல் ரேசன் கடைகள் மூலம் தரப்பட்ட உணவுப் பொருட்கள் தரமற்றவையாக இருப்பதால் மக்கள் துயரம் தீர்ப்பதாக நடவடிக்கைகள் இல்லை. ஆயிரம் ரூபாய் பெரிய தொகையும் இல்லை.
அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்கும் தொழிலாளர்களுக்கு தரும் நிதியிலும் புதுப்பித்தல் நிபந்தனைகள் போடப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான வறிய மக்களுக்கு அந்த உதவி போய்ச் சேரவில்லை. அவர்களும் அலை கழிக்கப்படுகிறார்கள். (அம்பத்தூரிலும் திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர் வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு அரசு புதுப்பித்தல் நிபந்தனையுடன் அறிவித்த கொரோனா காலப் பயன்களை பெற்றுத்தர கம்யூனிஸ்ட் கட்சியும் எல்டியுசியும் எடுத்த முயற்சிகளுக்கு விளைவுகள் கிடைக்கத் துவங்கியுள்ளன).
பிற மாநிலத் தொழிலாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் தொழிலாளர் துறைக்கு தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதில் என்ன நடந்தது என்று சொல்லப்படவில்லை. அவர்களும் தாங்கள் சிரமப்படுவதாகத்தான் சொல்கிறார்கள்.
மருத்துவர்களுக்கு, பிற மருத்துவ ஊழியர்களுக்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் போதுமான அளவு தரப்படவில்லை என்று அவர்கள் பக்கத்தில் இருந்தும் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவர்களுக்குத் தரும் உணவு கூட சில இடங்களில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று மருத்துவர் தரப்பில் சொல்லப்படுகிறது.
கொரோனா பணிகளுக்கு தன்னார்வலர்கள் பதிவு செய்யுங்கள் என்று சொன்ன பிறகு அது தொடர்பாக என்ன நடந்துள்ளது என்று ஏன் தமிழக அரசால் சொல்ல முடியாமல் போகிறது? தன்னார்வலர்களை ஈடுபடுத்தினால், முதலில் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு சிக்கல் உள்ளதா? அல்லது மேலே இருப்பவர்களிடம் இருந்து தடை ஏதும் வந்துவிட்டதா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம், துரித பரிசோதனைக் கருவியை ஒரு மாநிலம் ரூ.337 கொடுத்து வாங்கியிருக்கும்போது, தமிழ்நாடு ரூ.600 கொடுத்து வாங்கியிருப்பதில் பதில் இருக்கிறது என்று சொன்னால், இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால், அரசியல் செய்யாதீர்கள் என்று பாய்கிறார்கள்.
தினமும் வெளியாகும் புள்ளிவிவரங்கள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. சில பகுதிகளில் முழு ஊரடங்கு, தீவிர கண்காணிப்பு போன்ற சொந்த‘மான’ சுய‘மான’ முன்முயற்சிகளை தமிழக அரசும் எடுக்கிறது. ஆனால், மான முயற்சிகள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே அரசு ஊழியர் ஊதிய வெட்டு அறிவிப்பு வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்திலும் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் மே தினப் பரிசு வந்துவிட்டது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நலப்பயன்கள் வந்து சேரவில்லை என உரியவர்கள் மத்தியில் இருந்து வந்துகொண்டிருக்கும் புகார்கள், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி எப்படி செலவானது என்ற கேள்வியை எழுப்பும்போது, இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தலையில் கை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று பழனிச்சாமி அரசு சொல்ல வேண்டும்.
மோடி சுயசார்பு பற்றி பேசுகிறார். இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி பழனிச்சாமி அரசு, மத்திய அரசில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய வகைவகையான நிதி பாக்கிகளை விரைந்து பெற்றால், அரசு ஊழியர் ஊதியத்தில் கை வைக்க வேண்டியிருக்காது. சாமான்ய மக்களுக்குச் சென்று சேர வேண்டிய நிவாரணங்களை தள்ளிப்போட, தவிர்த்துவிட வேண்டியிருக்காது.
இத்தனைக்கும் பிறகும் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கிற கட்டமைப்பு பலம் தொற்று தாக்குதலை ஒப்பீட்டுரீதியில் மட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஒரு மாவட்டம் தொற்றில்லா மாவட்டம் என்று அறிவிக்கப்படும் நிலை கூட வந்துவிட்டது. இந்த நேரத்திலாவது தமிழக ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை ஒதுக்கி வைத்து தமிழக மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாறாக மக்கள் தலையில் சுமை ஏற்றுவது, ஊதிய வெட்டு, உரிமை பறிப்பு ஆகியவை பாசிச நடவடிக்கைகள் என வகைப்படுத்தப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளில் அறம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். சாமான்ய மக்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையில் பல்வேறுவிதமான அறநெறிகளை பின்பற்றுகிறார்கள். நெருக்கடி காலத்தில் தமிழக அரசு அறம் பார்த்து செயல்பட்டால் மட்டும் போதாது. ஆட்சியும் அதிகாரமும் பொறுப்பை, கடமையை நிறைவேற்றத்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.