கொரோனா காலத்தில் நாட்டு மக்களைக் காக்க
ரூ.20 லட்சம் கோடி வேண்டும்!
மக்களின் வாழ்க்கையை,
உரிமைகளை, ஜனநாயகத்தை காக்க
மே நாளில் போராட்ட உறுதியேற்போம்!
எஸ்.குமாரசாமி
கொரோனா காலத்து ஊரடங்கையடுத்து வருகிற நாட்களில் நாட்டு மக்கள் தற்போதுள்ள நெருக்கடிகளைவிட கூடுதல் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். இந்த நெருக்கடிகளில் இருந்து நாட்டு மக்களைக் காக்க ரூ.20 லட்சம் கோடி வேண்டும். இந்தப் பணம் நம் நாட்டில் இருக்கிறது. இது முடியும்.
கொரோனாவும் மோடியின் நண்பர்களும்
மோடிக்கு மிகவும் நெருக்கமான உலகத் தலைவர்கள் ட்ரம்ப் மற்றும் பொல்சனரோ எனச் சொல்ல முடியும். ஜனவரி 26 குடியரசு தின சிறப்பு விருந்தினர், பிரேசில் அதிபர் பொல்சனரோதான். அதன் பின், குஜராத்துக்கும் தாஜ்மகாலுக்கும் வந்த சிறப்பு விருந்தினர் அய்க்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான்.
உன் நண்பர்கள் யாரெனச் சொல், நீ யார் எனச் சொல்லி விடுகிறேன் என்பது முதுமொழி. பொல்சனரோ, கொரோனா என்பது ஒரு சின்ன காய்ச்சல், அதற்கு பெரிய கூப்பாடு எல்லாம் போடாதே என்றவர். கொரோனா தடுப்பில் அரசு முயற்சிகள் பொறுப்பாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்று சொன்ன சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்தவர். நாடாளுமன்ற உறுப்பினர்களான தனது மூன்று மகன்கள் மீதும் தன் மீதும் இருந்த ஊழல் புகார் விசாரணையை முடக்க, கூடவே இருந்த கூட்டுக் களவாணியான நீதித்துறை அமைச்சரையும் பதவி நீக்கம் செய்தவர். பிரேசில் நாடு கொரோனாவால், வேலையின்மையால், உணவின்மையால், மருத்துவ வசதிகளின்மையால் தடுமாறி திகைத்து நிற்கும்போது, மக்களைப் பற்றி கவலைப்படாமல், தன் நலனை மட்டுமே முன்னிறுத்துபவர், மோடியின் நண்பர் பொல்சனரோ.
டொனால்ட் ட்ரம்ப், நவம்பர் 2020 அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டவர். அவர் எல்லாவற்றுக்கும் முதலில் அய்க்கிய அமெரிக்காவே என்று சொல்லும்போது, எல்லாவற்றுக்கும் முதலில் ட்ரம்ப் என்று சொல்கிறார் என்று பொருளாகும். மக்கள் கொத்துக்கொத்தாய் மடியும்போதும் பிரச்சனைகளை திசை திருப்ப சீனா மீது பழி சுமத்துவது, ஈரான் மீது போர் மிரட்டல் என தயங்காமல் இறங்குபவர். வகிக்கும் பதவிக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத ட்ரம்ப், இப்போது, கொரோனா நோயுற்றவர்களுக்கு லைசால், டெட்டால், பினாயில், ப்ளீச், குளோராக்ஸ் போன்ற கிருமி நாசினிகளை ஊசி மூலம் உடலில் செலுத்தினால், கொரோனா கிருமி அழிக்கப்படும் என உளறினார். விமர்சனங்கள் எழுந்த பிறகுதான் கேலியும் கிண்டலுமாகப் பேசியதாகவும் இதை ஊதிப் பெரிதாக்கிய ஊனமான ஊடகத் துறையை இனி சந்திக்க மாட்டேன் என வாய் சவடால் அடிக்கிறார். ட்ரம்ப் பற்றி பேசும் போது, பாத்திரங்களைத் தட்டி கோ கொரோனா கோ, விளக்கேற்றி வைத்து ஓடிவிடு கொரோனா ஓடிவிடு என்ற மாபெரும் முயற்சி பற்றி நமக்கு சங்கடமாக நினைவில் வந்து தொலைக்கிறது.
கொரோனா காலத்தில் மக்களின் வாழ்க்கையும் உரிமைகளும்
உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் வேலை நீக்கம் என்பது பொருளாதார மரண தண்டனை என்றார். ஷேக்ஸ்பியர் தனது ஒரு கதாபாத்திரம் மூலம் ஒருவரிடம் இருந்து வாழ்வதற்கான வழிமுறைகள் பறிக்கப்படும்போது அவரது வாழ்க்கையே பறிக்கப்படுகிறது என்றார். உலகத் தொழிலாளர் அமைப்பு கொரோனாவை அடுத்து 270 கோடி பேர் முழுமையாகவோ பகுதியளவிலோ வேலையிழப்புக்கு ஆளாவார்கள் என்றும் 3.2 ட்ரில்லியன் டாலர், அதாவது 240 லட்சம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்தியாவில், ஏற்கனவே வேலை பார்த்தவர்களில் குறுசிறு வர்த்தகங்கள் முதல் வேறு வேறு விதங்களில் வருமானம் ஈட்டியவர்களில் 80%க்கு மேலானவர்களுக்கு வேலையும் வருமானமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் இடம்பெயர்ந்த 10 கோடி முதல் 15 கோடி தொழிலாளர்கள் எப்போது சொந்த ஊர் திரும்புவோம் என்பது கூட தெரியாமல் எதிர்காலம் பற்றி புரியாமல் மரண வேதனை யில் உள்ளனர்.
துயர் போக்குவதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கை மீது, உரிமைகள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சம்பளம் தருமாறு வேலையளிப்பவர்களை கட்டாயப்படுத்துவது நியாயமல்ல என்கிறார் பிஜ÷ ஜனதா தள நாடாளுமன்ற குழுத் தலைவரும் தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு 2019 தொடர்பான நாடாளுமன்ற தொழிலாளர் குழு தலைவருமான பாத்ருஹரி மகதாப். ஊடகத் துறையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஞாயிறு பதிப்பை நிறுத்தி வேலை நீக்கத்தை துவக்கிவிட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் 10% முதல் 30% சம்பள வெட்டு என்கிறது. கிவின்ட் இணைய இதழ், தனது ஊழியர்களுக்கு 15.04.2020 முதல் சம்பளமில்லாத விடுப்பு அறிவித்துள்ளது. கையிருப்பு மற்றும் உபரி ரூ.88 கோடி வைத்துள்ள கோவை பிரிக்கால் நிறுவனமும் விடுப்பு உரிமைகளை விட்டுக் கொடு, 40% சம்பளம் துறந்து விடு என்று தான் சொன்ன முன்வைப்புகளை ஒருதலைபட்சமாக அமல்படுத்திவிட்டது. மே மாதம் துவங்கி, கார்ப்பரேட் துறை என்ன செய்யும் என்பதற்கு பிரிக்கால் திசை வழியை காட்டுகிறது.
மத்திய அரசு ஒன்றரை வருட காலம் தனது ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு பஞ்சப்படி கிடையாது என தடாலடியாய் அறிவித்துவிட்டது. கேரளாவின் இடது முன்னணி அரசு ஒவ்வொரு மாதமும் 6 நாட்கள் சம்பளம் என 5 மாதங்களில் 30 நாட்கள் சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு ஊழியர்களிடம் இருந்து பிடிக்கப்படும் என்றும் இதற்கு அவர்களைக் கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிற மருத்துவர்கள், மருத்துவ துறைப் பணியாளர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோருக்கும் இந்தப் பிடித்தம் பொருந்துமா பொருந்தாதா என்பது பற்றி விஜயன்தான் சொல்ல வேண்டும். (பின்னர் தரப்படும் என்று சொல்வது, ஆறுதல் தராது).
பஞ்சாபின் காங்கிரஸ் அரசாங்கம், இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு (சோனியா, ராகுல் ஆசியுடன்) ஒரு மேதினச் செய்தி சொல்லியுள்ளது. 20.04.2020 தேதிய அறிவிப்பாணை மூலம், வேலை செய்வோர் பற்றாக்குறை உள்ளதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 1948 தொழிற்சாலைகள் சட்டப்படியான 8 மணி நேர வேலை அகற்றப்படும் எனச் சொல்லியுள் ளது. ஒரு நாளில் 9 மணி நேரம், ஒரு வாரத்தில் 48 மணி நேரம் என்பதை வேலை நேரம் தாண்டக் கூடாது என்றும் ஒரு ஷிப்ட் வேலை நேரம் இடைவேளையோடு சேர்த்து பத்தரை மணி நேரம் (ஸ்ப்ரெட் ஓவர்) தாண்டக் கூடாது என்றும் சொல்கிற தொழிற்சாலைகள் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்றும் 13 மணி நேர காலத்துக்குள் ஷிப்ட் முடிந்தால் போதும் (ஸ்ப்ரெட் ஓவர்) என்றும் இந்தத் திருத்தம் சொல்கிறது. இந்த விசயத்தில் மாநில உரிமை கொடி கட்டிப் பறக்கிறது.
தமிழ்நாடு அரசும் தன் பங்குக்கு முதல் அடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் பெற முடியாது, ஜ÷லை 2021 வரை பஞ்சப்படி கிடையாது என்று சொல்லியுள்ளது.
கொரோனா புனிதப் போர், இசுலாமிய வைரஸ் என சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட வெறுப்பரசியல் பிரச்சாரம், வளைகுடா அரபு நாடுகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு பெரும்தொகைகளை ஈட்டி அனுப்பும், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி மீது போர் என மோடி சொல்வது ஏற்கத் தக்கதல்ல. எதிரியைப் பற்றி தெரியாது, எதிரியை வீழ்த்தும் வழிமுறை பற்றி தெரியாது, தம் தரப்பை காப்பது பற்றி தெரியாது என வளர்ந்த உலக நாடுகள் எல்லாம் தடுமாறும் போது போர் என்ற வெற்றுப் பேச்சு, செயல் என்று வரும்போது ஜனநாயகப் பறிப்புக்கு மட்டுமே இட்டுச் செல்லும்.
இருபத்தியோராம் நூற்றாண்டின் உழைக்கும் மக்களின் பெரும்பிரிவினர், வேலைகளுக்காக வேட்டையாடுபவர்களாக, தேடித் திரிந்து சேகரிப்பவர்களாக (ஹன்டர்ஸ் அன்டு கேத ரர்ஸ் ஆஃப் ஜாப்ஸ்) மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா காலம், வேலைக்கு வேட்டையாடுபவர்கள், வேட்டையாடப்படுவதற்கும் அவர்களுக்குள்ளேயே படுமோசமான போட்டி உருவாவதற்கும் வழிவகுக்கும்.
மக்கள் மீது, அவர்கள் வாழ்க்கை மீது, உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர், அவர்களது மானுட இயல்பையே மறுத்து, அவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் வரை சென்ற போர், மே, ஜு ன், ஜு லை மாதங்களில் தீவிரமடையும் என்பது நன்றாகவே தெரிகிறது.
கொரோனா காலத்தில் ஜனநாயகத்தின் மீது போர்
அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், மிகச் சரியாகவே சொன்னார்: ‘கொரோனா கொள்ளை நோய் பரவும்போதே, சில நாடுகளில் இனவாத தேசியம், ஜனரஞ்சகவாதம், எதேச்சதிகாரம், மனித உரிமைகள் பின்னுக்குத் தள்ளப்படுவது ஆகியவற்றை காண்கிறோம். கொள்ளை நோயோடு தொடர்பில்லாமல், கொள்ளை நோயை சாக்காக்கி, ஒடுக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்புள்ளது’.
தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தை, இயலாமையை, ஊழலை விமர்சிக்கிற ஊடகத்தினர் சிறை வைக்கப்படுகின்றனர். மக்களுக்கு நிவாரணம் கோரிய இககமாலெ, இககமா தோழர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. தோழர் வேல்முருகன் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் உரிமைப் பறிப்புக்கு, ஜனநாயகம் மறுப்புக்கு, கொரோனா அரசுக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு. முதுகெலும்புள்ள, மக்கள் சார்பு நிலை எடுக்கிற, தி வயர் இணைய இதழ் ஆசிரியர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மக்கள் சார்பு அறிவாளிகளும் செயல்பாட் டாளர்களுமான ஆனந்த டெல்டும்ப்டே, கவுதம் நவுலகா ஆகியோர் பிணை மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் அரசியல் செய்யக் கூடாது என்ற வாதம் கொண்டு, மோசமான ஜனநாயக விரோத அரசியல் தொய்வின்றி முன்னகர்த்தப்படுகிறது.
மத்திய அரசு வழிகாட்டுதல்கள் மட்டும் தந்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது. களத்தில் நேரடியாக மக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டிய மாநில அரசுகள் போதுமான நிதியும் அதிகாரமும் இல்லாமல் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவின் பால்கரில் இந்து சாமியார்கள் பழங்குடியினரால் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட விசயத்தில், அப்பட்டமாக மதவெறி நஞ்சை உமிழ்ந்த சங் ஆதரவாளரான ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமிக்கு, உச்சநீதிமன்றம் விரைந்து செயல்பட்டு கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு தந்தது. மற்ற கருத்து சுதந்திர வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் இந்த அளவு அவசரமும் அக்கறையும் காட்டுமானால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.
கொரோனா காலத்திலும் ஜனநாயகத்தை வெட்டிச் சாய்ப்பதற்கான கொலைவாள்கள் கூர்தீட்டப்படுகின்றன.
மக்கள் துயர் போக்க வழியே இல்லையா?
மோடி, தன்னிறைவையும் சுயசார்பையும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொண்டு, சுயசார்புடன், தன்னிறைவுடன் முக்தி நிலை அடைய வேண்டும். இந்து ராஷ்டிரா, இதோ வந்துவிட்டது.
செல்வத்தை உருவாக்குபவர்கள் என மோடியால் அழைக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.72 லட்சம் கோடி மீட்புத் திட்டம் வேண்டும் என அசோசெம் என்ற முதலாளிகள் அமைப்பு கோருகிறது. நிர்மலாவும் மோடியும், அவர்களிடம் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்வார்களா? பதில், நாம் அறியாததல்ல.
கொரோனா காலத்திலும் முகேஷ் அம்பானி காட்டில் மழைதான். ரூ.7,700 கோடி மதிப்பில் 27 மாடி வீடு வைத்துள்ள அந்த அம்பானி காட்டில்தான் மழை. ரிலையன்ஸ் நான்கு ஆண்டுகள் முன் டெலிகாம் துறைக்குள் நுழையும் முன் ரூ.3.06 லட்சம் கோடி கடன் வைத்திருந்தது. ஜியோ களமிறங்கி 38.8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றது.
ஆராம்கோ என்ற சவுதி அரேபிய நிறுவனத்துடன் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (15 பில்லியன் டாலர்) ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ள பரிமாற்ற நடவடிக்கை, மேலே நகராமல் அப்படியே நிற்கிறது. இந்த நிலையில் மார்ச் 2020 முடிந்த காலாண்டில் ஜியோவின் வருவாய் 32% உயர்ந்தது. இப்போது, ஜியோ பிளாட்பார்மின் பணமதிப்பு ரூ.4.62 லட்சம் கோடி என மதிப்பிட்டு, அதன் 9.9% பங்குகளை ரூ.43,574 கோடிக்கு வாங்க பேஸ்புக் முன்வந்துள்ளது. (இந்தியாவில் பேஸ்புக்குக்கு 35 கோடி வாடிக்கையாளர்களும் வாட்சப்புக்கு 40 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்). உலகிலேயே இதுதான் சிறுபான்மை பங்கு விற்பனையில் ஆகப்பெரிய தொகையாகும். இந்தியாவில், தொழில்நுட்பத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டில் இதுவே ஆகப்பெரிய முதலீடாகும். இதில் ரூ.15,000 கோடியை ஜியோ பிளாட்பார்ம் வைத்துக்கொள்ளும். ரூ.28,514 கோடியை, கடன் அடைப்பதற்காக ரிலையன்ஸ் பயன்படுத்தும்.
கொரோனா கால வீடடங்கு, ஊரடங்கு, லாக் டவுன் பழகிய நமக்கு, இனி முகக்கவசம் நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகும் என மோடி சொல்வதை கேட்கும் நமக்கு, பேஸ்புக் - ஜியோ ரிலையன்ஸ் கூட்டை புரிந்து கொள்வது, அவ்வளவு சிரமமானதா என்ன? அது ஆஃப்லைன், ஆன்லைன் இணைப்பு தொடர்பானது. ஆன்லைன் இணைய வாடிக்கையாளர்களையும் ஆஃப்லைன் சில்லறை வர்த்தகர்களையும் ஜியோ மார்ட் - வாட்சப் கூட்டு இணைக்கும் என திட்டமிடுகிறார்கள்.
இந்தியாவில் 130 கோடி மக்கள் அதாவது, 26 கோடி குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 10.8 கோடி பேர் பொது விநியோகத்துக்கு வெளியே உள்ளனர் என்று தி வயர் இணைய இதழ் சொல்கிறது. இந்தியாவின் உணவு கிட்டங்கிகளில் 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் உள்ளன. நல்ல விளைச்சல் வந்துள்ளது. அதனால் கொள்முதல் மூலம் கிட்டங்கிக ளில் மேலும் 40 மில்லியன் டன் உணவு தானியங்கள் சேரும். தற்போது ஓராண்டுக்கு பொது விநியோகத் தேவை 54 மில்லியன் டன். பொது விநியோகத்துக்கு மேற்கொண்டு, 20 மில்லியன் டன் ஒதுக்கினால் கையிருப்பும் வைத்துக் கொண்டு அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு சாத்தியமே. உணவுப் பற்றாக்குறை என்ற பிரச்சனை இல்லை. உணவு தானியம் போதுமான அளவு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய நேரத்தில் அவசர அவசியம் உணர்ந்து நாடெங்கும் அவற்றை கொண்டுபோய் சேர்த்தால் பஞ்சமும் பசியும் இருக்காது.
இந்தியாவில் வேலை செய்து பிழைப்பவர்களில் 85% பேர் மாதம் ரூ.10,000க்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள். அதில் பாதி பேர் ரூ.5,000க்கும் கீழ் சம்பாதிக்கிறார்கள். இந்த வருமானமும் இப்போது அடிவாங்கியுள்ளது.
இந்த நிலைமை இயற்கையானதா? நிச்சயம் இல்லை. தனிச்சொத்து ஆளுகிற சமூகத்தில் வருமானமும் செல்வமும் கோடிக்கணக்கானவர்கள் கையில் சேராமல் ஒரு சிலர் கைகளிலேயே ஏற்றத்தாழ்வாக குவிந்துள்ளன.
ஒரு வருடத்தில் ஒரு தொழில்நுட்ப நிறுவன தலைமை அலுவலர் ஈட்டும் வருமானத்தை எட்ட வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு 22,277 ஆண்டுகள் ஆகும். அந்தத் தலைமை அலுவலர் ஒரு நொடியில் ரூ.106, ஒரு நிமிடத்தில் ரூ.6,360, ஒரு மணி நேரத்தில் ரூ.3,81,600, ஒரு நாளில் ரூ.91,56,400, ஒரு வருடத்தில் ரூ.332 கோடி வருமானம் ஈட்டுவார். அவர் ஒரு நிமிடத்தில் சம்பாதிக்கும் ரூ.6,360அய் விட குறைவாகவே அந்தப் பெண் தொழிலாளி ஒரு மாதத்தில் ரூ.5,000 என சம்பாதிக்க முடியும். அந்தப் பெண் தொழிலாளி ஒரு வருடத்தில் ரூ.60,000அய் விடக் கூடுதலாக அந்தத் தலைமை அலுவலர் வெறும் 10 நிமிடங்களில் ரூ.63,600 சம்பாதித்து விடுவார். வருமானத்தில் ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்குமானதுதான்.
இந்திய மக்களில் 70% பேர், அதாவது, 95.3 கோடி பேரிடம் உள்ள செல்வத்தை விட 4 மடங்கு கூடுதலான செல்வம் மக்கள் தொகையில் 1% பேரிடம் குவிந்துள்ளது.
இந்த வருமான, செல்வ ஏற்றத்தாழ்வுகள் நியாயமானவை அல்ல. சமூகமே உழைப்பதன் விளைவாக உருவான செல்வத்தை ஒரு சிறிய கூட்டம் கொள்ளையடிக்கிறது. அதற்கு ஒடுக்குமுறையை ஏவுகிறது. சமூகத்தில் உள்ள ஆதிக்க அதிகார உறவால் கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் கார்ப்பரேட்டுகளே ஆள்வதால்தான் இது சாத்தியமாகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் கோடானு கோடி மக்கள் நலம் பெற, ஒரு சிறு கூட்டத் திடம் இருந்து சமூகம் தான் உருவாக்கியதில், தனக்கு பாத்தியதை உடையதில் இருந்து சிறிது எடுத்துக் கொண்டாலே பிரச்சனை தீரும்.
செல்வ வரி போட்டு, கார்ப்பரேட் கடன் வசூல் செய்து, கார்ப்பரேட் பெருநிறுவன கையிருப்பு மற்றும் உபரி வரி போட்டு, அந்நிய செலாவணி இருப்பில் இருந்து எடுத்தாலே மக்களின் உடனடியான பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
26 கோடி குடும்பங்களில் 6 கோடி குடும்பங்களுக்கு நிவாரணம் எதுவும் வேண்டாம் என வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 20 கோடி குடும்பங்களில் 100 கோடி பேரை வருமானத்துக்கு ஏற்ப இரண்டு வகையினங்களாக, மிகக் குறைந்த வருமானமுள்ள 8 கோடி குடும்பங்கள், அதற்கடுத்த நிலையில் உள்ள 12 கோடி குடும்பங்கள் என பிரித்துக் கொள்ளலாம். அதற்கேற்ப வழங்கும் தொகையை சற்று மாற்றிக் கொள்ளலாம். மே, ஜ÷ன், ஜ÷லை என்ற மூன்று மாதங்களுக்குமாக 20 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தந்தால், அதாவது, 100 கோடி பேருக்கு மூன்று மாதங்களுக்குமாக ஆளுக்கு ரூ.20,000 வீதம் கணக்கிட்டு தந்தால், அதற்கு ரூ.20 லட்சம் கோடி வேண்டும். நிதியமைச்சர் நிர்மலா எப்படி எப்படியோ கணக்கு காட்டி அறிவித்த நிவாரணமே ரூ.1.7 லட்சம் கோடிதானே? ரூ.20 லட்சம் கோடி எங்கிருந்து எப்படி வரும்?
ரிசர்வ் வங்கி தரும் விவரப்படி, ஏப்ரல் 17, 2020 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.36,62,709 கோடி. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருந்து பணம் தரச் சொன்ன மத்திய அரசு அந்நியச் செலாவணி இருப்பில் இருந்து 15% மட்டும் எடுத்துக் கொண்டால் ரூ.5.44 லட்சம் கோடி வரும்.
9,600 கார்ப்பரேட் கடனாளிகள் ரூ.98 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். (266 பேர் மட்டும் ரூ.41 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்). தமிழ்நாட்டில் கல்விக் கடன், ட்ராக்டர் கடன் வாங்கியவர்களிடம் கட்டாய வசூல் செய்து உயிரிழப்பு நடந்தது. இந்த 9,600 கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனாக வாங்கியுள்ள ரூ.98 லட்சம் கோடியை, கழுத்தில் துண்டு போட்டு, 10% வசூலித்தால் ரூ.9.8 லட்சம் கோடி வந்துவிடும். வாராக்கடனாக மாறாமல் இருக்க, மக்கள் வாழ, அந்தக் கடனை வசூல் செய்யலாம்.
இந்தியாவில் டிசிஎஸ், அய்டிசி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எச்சிஎல், ஹிண்ட் சிங்க், ஜேஎஸ்டபிள்யு, மாருதி, விப்ரோ, வேதாந்தா, டாடா ஸ்டீல்ஸ், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் காட்டிய கையிருப்பு மற்றும் உபரித் தொகை ரூ.10 லட்சம் கோடி வரும். இதில் 5% வசூல் செய்தால் ரூ.50,000 கோடி கிடைக்கும்.
இந்தியாவின் ஆகப்பெரிய பணக்கார 10 குடும்பங்களிடம் ரூ.12,94,100 கோடி செல்வம் உள்ளது. ரத்து செய்யப்பட்ட செல்வ வரியை மீண்டும் கொண்டு வந்து, இந்த பத்து குடும்பங்களிடம் 10% செல்வ வரி வசூல் செய்தால் ரூ.1,29,410 கோடி கிடைக்கும். அடுத்த நிலையில் உள்ள 943 குடும்பங்களிடம் ரூ.37,36,000 கோடி செல்வம் உள்ளது. இவர்களிடம் 6% வசூல் செய்தால் ரூ.2,24,160 கோடி வரும். ஆக 953 குடும்பங்களிடம் இருந்து ரூ.3,53,570 கோடி வரும்.
இந்த நான்கு வகையினங்களும் ரூ.5.54 லட்சம் கோடி + ரூ.9.8 லட்சம் கோடி + ரூ.0.50 லட்சம் கோடி + ரூ.3.53 லட்சம் கோடி சேர்ந்து ரூ.19.37 லட்சம் கோடி வரும். ரூ.20 லட்சம் கோடிக்கு மீதம் தேவைப்படுவதை ரிசர்வ் வங்கி இருப்பில் இருந்தோ, அந்நியச் செலாவணி இருப்பில் இருந்தோ எளிதாக எடுத்துக் கொள்ள முடியும். (எப்படியாயினும், இது வரை கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்காமல் வாராக் கடன்கள் என தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், வரிச்சலுகைகள், மோடி கணக்குப்படி ஒரு குடும்பத்துக்கு தரக்கூடிய அளவுக்கு உள்ள கருப்புப் பணம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க முடியும், ஒதுக்கியாக வேண்டும் என்று நிச்சயம் சொல்ல முடியும்).
இப்படிச் செய்தால், இனி சூரியன் கிழக்கே உதிக்காதா? முதலாளிகளின் தொழில் எல்லாம் படுத்துவிடுமா? பொருளாதாரம் மாயமாய் மறைந்துவிடுமா? கொழுப்பு நீங்கி நல்ல உடல் கட்டு வரும். இது சாத்தியமானதா என்று கேட்டால் சாத்தியம்தான். அவசியமானதா என்று கேட்டால், கார்ப்பரேட் வளர்ச்சிப் பாதை ஆதரவாளர்கள் எல்லாம் நாசமாகி விடும், கூடவே கூடாது என்பார்கள். மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதை ஆதரவாளர்கள் அவசியமானது, செய்வோம் என்பார்கள்.
நாட்டின் பொருளாதாரம், மக்கள் உழைப்பால் உருவான பொருளாதாரம் கார்ப்பரேட்டுகள் பிடியில் சிக்கியுள்ளது. அதற்கு முதலாளித்துவ அரசியல் உரம் சேர்க்கிறது. மக்களைக் காக்க, மக்கள் சார்பு கொள்கைகளும் மக்கள் சார்பு அரசியலும் வேண்டும்.
சில நூறாண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டில் மணிமேகலை ஓர் அறம் பேசியது.
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்
அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் உறுதி செய்வதுதான் அறம்.
ரூ.20 லட்சம் கோடி வேண்டும், நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என மே நாளில் முழங்குவோம்.
மே, ஜுன், ஜுலை மாதங்களில் மக்கள் பெரும்நெருக்கடிக்கு ஆளாவார்கள். பிரச்சனைகள் தீராவிடில் நாடு இதுவரை சந்திக்காத போராட்டங்கள் எழும். நாம் இந்த சோதனையான காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம். வாழ்வை நேசிக்கிற நாம், வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டும் என விரும்பும் நாம், மக்களின் உரிமைகளுக்காக, நல்வாழ்க்கைக்காக, ஜனநாயகத்துக்காக போராட நம்மை தயார்படுத்திக் கொள்வோம்.