தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா
பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்றாண்டுகளில், தமிழகத்தில் தலித்துகள் மீதான
தாக்குதல்கள், வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. சாதிய வெறியர்கள்,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொது இடங்களை தலித்துகள் புழங்குவதற்கு
எதிராகதாக் குதல்கள் தொடுக்கின்றனர்; தலித்துகளின் வாழ்வாதாரங்களை,
வாழ்வுரிமையை சேதப்படுத்துகின்றனர்; சாதி மறுப்புத் திரு மணங்களை
எதிர்ப்பது என்ற பெயரால் கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிடுகின்றனர்;
கவுரவக் கொலைகளை அரங்கேற்று கின்றனர்; தலித் பெண்களை, சிறுமிகளை பாலியல்
வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொலை செய்கின்றனர்; ஆளும் கட்சியும், தமிழக
காவல்துறையும் சாதிய வெறியர்களோடு கைகோர்த்து நிற்கின்றன. கடந்த 6
மாதங்களில் மட்டும் சாதிய வெறியாளர்களாலும், காவல்துறையாலும் கொல்லப்பட்ட
தலித்துகளின் எண்ணிக்கை 60அய் தாண்டியுள்ளது.
இளவரசன் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியை ஜூலையில் நடத்த முயன்ற தருமபுரி நத்தம் காலனி தலித் மக்கள், தருமபுரி காவல்துறையால் மிரட்டப்பட்டனர். 6 தலித் முன்னணிகள், உள்ளூர் பாமக தலைவரை கொல்வதற்கு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாகவும், சதித் திட்டம் தீட்டியதாகவும் பிடித்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்த நூற்றுக்கணக்கான பெண்கள், இந்த அராஜகம் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில், வாக்காளர் அடையாள அட்டைகளை, ரேசன் அட்டைகளை திருப்பித் தந்துவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதாக எச்சரித்தனர்.
காவல்துறையினர் 6 பேரையும் மாவோயிஸ்டுகள் என சித்தரித்து சிறையில் அடைத்து, 11 நாட்கள் கழித்து, அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசாங்கம் பிரயோகித்தது.
மகனின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவதற்குக் கூட இளவரசனின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தினடிப்படையில் சிவில் உரிமைகளையும், சனநாயக உரிமைகளையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய நீதிமன்றம், இரண்டு மணி நேர அனுமதி, உறவினர்களும் நண்பர்களும், கிராமத்தினரும் என அய்ம்பது பேருக்கு மட்டுமே அனுமதி, அரசியல் கட்சிகளுக்கும், சமூக அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என்றது. நீண்ட நெடிய காலம் நீடித்துக் கொண்டிருந்த 144 தடை உத்தரவு மட்டும் போதாது என்று, ஜூலை 4 அன்று, இளவரசன் நினைவுநாளில், நத்தம் காலனி என்ற ஒரு தலித் கிராமத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஜெயா அரசாங்கமே வன்முறையாளராக மாறி, தலித்துகளின் சனநாயக உரிமைகளை, உணர்ச்சிகளை நசுக்கியது.
திமுக, தேமுதிக, மதிமுக போன்ற எதிர்க் கட்சிகள், சட்டமன்றத்தில் பிரதிநிதிகளை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், குடியரசு கட்சி போன்ற தலித் அமைப்புகள், அதிகாரபூர்வ இடதுசாரிகள் எல்லாம் மவுனம் சாதித்தனர். தலித் விரோத ஜெயா ஆட்சியை கண்டிக்கத் தவறினர்.
இகக (மாலெ), மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை போன்ற இடதுசாரி அமைப்புகள் 13.07.2014 அன்று சேலத்தில் ‘தலித்துகள் மீது தொடரும் வன்முறைகள், தாக்குதல்கள்’ பற்றி பொது விசாரணை ஏற்பாடு செய்தன. மக்கள் தீர்ப்பாயமாக அமைந்த பொது விசாரணையின் நடுவர்களாக, உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக் கறிஞர் பொ.ரத்தினம், பியுசிஎல் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ச.பால முருகன், எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள் செயல்பட்டனர். நத்தம் காலனியைச் சேர்ந்த பெண்கள் தைரியமாக சாட்சியமளித்தனர்.
மாலெ கட்சியின் ஊழியரும், நத்தம் காலனியைச் சேர்ந்தவருமான இரமணி, தனது வாக்குமூலத்தில் இளவரசன் நினைவு நாளை கடைபிடிக்க அனுமதி கோரியதும், நீதிமன்றத்திற்கு சென்றதும், தமிழக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையிலேயே அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்றும் காவல்துறை அராஜகம் பற்றி புகார் தெரிவித்த பெண்களிடம், ‘உங்கள் வீடுகளில் குண்டுகளை வைத்துவிட்டு உங்களை எல்லாம் சிறைக்குள் தள்ளிவிடுவேன்’ என அவர் மிரட்டியதாகவும் கூறினார். கைது செய்யப் பட்ட 6 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்துக்கு, செய்தி தாள்களுக்குச் செல்லும் முன்பே, பாமக தலைவர் ராமதாஸ் கைக்கு கிடைத்து ‘பாமக தலைவர்கள் உயிருக்கு நக்சலைட்களால் ஆபத்து’ என பேட்டி கொடுக்க முடிந் தது. போலீசிற்கும், பாமகவிற்கும் இது போன்ற நெருக்கம் உள்ளதென சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக் கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களான சுமதி, செல்வி மற்றும் சாலம்மாள் கண்ணீருடன் கரங்கூப்பி, போலீசாரின் அட்டூழியங்கள் பற்றி சொன்ன செய்திகள், பொது விசாரணை அரங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தது. ‘ஜூன் 27 அன்று பகலில் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெரியாமல், ஒவ்வொரு காவல் நிலையமாக ஏறி இறங்கி, அலைந்து பரிதவிக்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் மாலை அவர்களை பார்த்த போது, போலீஸ் லாக்அப்பில் கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர், முட்டிகள் மற்றும் தொடைகளை தாக்கியதால் அவர்களால் நிற்க கூட முடியவில்லை, அவர்களை பார்க்கச் சென்ற எங்களையும் படுகேவலமாக பெண் போலீசார் உட்பட திட்டினர். 2012 நவம்பர் 7 அன்று எங்களது வீடுகள், சொத்துக்கள் சாதி வெறிபிடித்த (பாமக, அதிமுக, திமுக) கும்பலால் எரிக்கப்பட்டபோது மவுனமாக கைகட்டி நின்ற இந்த போலீஸ், இளவரசன் நினைவு நாளை நடத்த திட்டமிட்டதற்காக கடும் சித்திரவதைக்குள்ளாக்குகிறது. எங்களது பையனுடைய நினைவு நாளைக் கொண்டாடக் கூட எங்களுக்கு உரிமை இல்லையா?’ என கண்ணீர் ததும்ப சாட்சியமளித்தனர்.
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் தலித் மாணவி வினிதாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொலையாளிகளை கைது செய்யாத காவல்துறை விசாரணை என்ற பெயரால் மாணவிகளை துன்புறுத்துவதையும், பலியானவரின் ஒழுக்கம் பற்றிய புனை கதைகளை பிரச்சாரம் செய்யும் காவல்துறையின் கையாலாகாத்தனத்தையும், கேவலமான பண்பையும் தனது சாட்சியத்தில் ராமச்சந்திரன் பதிவு செய்தார். விழுப்புரம் மாவட்டம் எம்.குன்னத்தூரில் குடிநீரில் உரிய பங்கைக் கேட்ட தலித்துகளை சாதிவெறி பிடித்த ஊராட்சித் தலைவரும், அடியாட்களும் அடித்து உதைத்ததையும், டிஎஸ்பி டீ பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக் கொண்டு வேடிக்கைப் பார்த்ததையும் வெங்கடேசன் தனது வாக்குமூலத்தில் விளக்கிக் கூறினார். சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டி, விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்குகள் சென்றுவிடாமல் இருப்பதற்காக திட்டமிட்டு பாமகவால் தொடுக்கப்பட்ட வன்முறையையும், தொடரும் தாக்குதல்களையும் விரிவாக ராஜசங்கர் பதிவு செய்தார்.
பொது விசாரணைக்குழு பின்வரும் தீர்ப்புகளை வழங்கியது:
1. தருமபுரி - நத்தம்காலனி 6 பேர் மீது போடப்பட்டுள்ள‘மாவோயிஸ்ட்’ ஆயுதப் பயிற்சி - கொலை சதித் திட்டம்’ என்றமைந்த வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகள். இவற்றை மக்கள் தீர்ப்பாயம் வன்மையாகக் கண்டிப்பதுடன், பொய் வழக்கு களை கைவிட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோருகிறது.
2. திரு.கிறிஸ்துதாஸ் காந்தி அய்.ஏ.எஸ்., நடத்துகிற ‘துடி’ அமைப்பின் செயல்பாடுகளை மாவோயிஸ்ட் ஆயுதப் பயிற்சியாக சித்தரித்திருப்பதும், வேலூர் டிஅய்ஜிக்குத் தெரியாமல் அரக்கோணத்தில் பயிற்சி என்பதும், சென்னை மெரினா கடற்கரையிலேயே ஆயுத பயிற்சி என முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதும், இவ்வழக்குகள் அப்பட்டமான பொய் வழக்குகள் என்பதை புலப்படுத்துகின்றன. தருமபுரி மாவட்ட காவல்துறை பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என மக்கள் தீர்ப்பாயம் கருதுகிறது.
3. இளவரசன் நினைவுநாள், தலித்துகள் அணிதிரளும் நாளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே, தமிழக அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட அடக்குமுறையே நத்தம் காலனி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் ஆகும் எனவும் மக்கள் தீர்ப்பாயம் கருதுகிறது.
80களில் நக்சலைட் இயக்கத்தை ஒடுக்கிய எம்ஜிஆர் - தேவாரம் கால அடக்குமுறையை, ஜெயா ஆட்சியின் நத்தம் காலனி மீதான ஒடுக்குமுறை நினைவுபடுத்துகிறது. தென் மாவட்டங்களில் தலித்துகளின் அடையாளம் ஆகிப்போன இம்மானுவேல் சேகரன் போன்று, இளவரசன் நினைவுநாள் மாறிவிடக்கூடாது, தலித்துகள் அரசியல்ரீதியாக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களது எழுச்சியை ஜெயா முளையிலேயே கிள்ளி எறிகிறார். மகனின் நினைவுநாளுக்கு கூட நீதிமன்றத்துக்கு செல்லவேண்டிய அவலத்தையும், சிவில் உரிமை களை உயர்த்திப் பிடிக்கத் தவறிய நீதிமன்றத் தின் கூருணர்ச்சியற்ற போக்கையும் எதிர்த்தெழ வேண்டியுள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதா விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும், தொடரும் வன்முறைகள் மீது சட்டமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும், 2012 நவம்பர் 7 தாக்குதல் வழக்கிற்காக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும், கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி, தருமபுரி மற்றும் சிதம்பரத்தில் நடைபெற்ற போலீஸ் தாக்குதல்கள் பற்றி மறு விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைக ளோடு மாலெ கட்சி பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து களம் காணவுள்ளது.
(பொது விசாரணையில் மாலெ இயக்கத்தினர், இடதுசாரி அமைப்புகளின் செயல்வீரர்கள், தலித் அறிவாளிகள், பெண்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கே.கங்காதரன், சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) மய்யக்குழு ந.குணசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாலெ கட்சி மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் சிறப்பரையாற்றினார்)