தமிழ்நாடு பற்றி எரிகிறது. ஜெயலலிதா பிடில் வாசித்துக்
கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் அனைத்து பிரிவு சாமான்ய மக்கள் மீதும்
வெவ்வேறு தளங்களில் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
அனைத்துக்குமாகச் சேர்த்து மீனவர் பிரச்சனை பற்றி கடிதம் எழுதினால் மட்டும்
போதும், தமிழக மக்களை சமாளித்து விடலாம் என்று ஜெயலலிதா கருதுகிறார்.
ஆனால், தமிழ்நாட்டு மக்களை அவர்கள் யதார்த்த வாழ்க்கை சுடுகிறது.
வாழ்வாதாரப் பறிப்பு அன்றாட நிகழ்வாகிவிட்ட ஜெயலலிதா ஆட்சியில், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, தலித் மக்கள் மீது தாக்குதல், மாணவர் தற்கொலை, கவுரவக் கொலைகள் என தமிழ்நாட்டு மக்கள் சாதாரண வாழ்க்கை வாழ முடியாமல், யார் எப்போது எந்தப் பக்கத்தில் இருந்து எப்படி தாக்குவார்கள் என்று பயந்துபயந்தே தவிக்கின்றனர்.
கரூர் சிறுமி கொலை தமிழக மக்கள் படும் துன்பத்தின் உருட்டித் திரட்டப்பட்ட வடிவமாக முன்வந்திருக்கிறது. தலித்துகள் மீதான தாக்குதல்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக மாறி வருகிறது. கரூர் சிறுமி ஒரு தலித். பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருவதன் வெளிப்பாடு கரூர் சிறுமி.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தொழிலாகிவிட்ட கல்வி வியாபாரம் மாணவர்களை பலி கொள்கிறது. கரூர் சிறுமி, அடுத்து படிக்க, கல்வி கட்டணம் செலுத்த, விடுமுறை நாட்களில் வேலைக்குப் போனவர். அதில் கிடைக்கிற ரூ.5,000 அவர் கல்விச் செலவுக்கு பயன்படும் என்று எதிர்ப்பார்த்தார். கல்வி வியாபாரம், அந்த 17 வயது குழந்தையை விரட்ட, அந்தக் குழந்தை பாலியல் வன்முறைக்குப் பலியானது. இரண்டு மாதங்கள் வேலை செய்ததில் அந்தச் சிறுமிக்கு கிடைப்பது ரூ.5,000. என்ன அநியாயம்? தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் என்ன நிலைமைகளில் வேலை செய்கிறார்கள் என்பதையும் கரூர் சிறுமியின் கொலை காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தலித், ஒரு பெண், ஒரு மாணவர், ஒரு தொழிலாளி வாழ இடமில்லை. இவர்களைத் தவிர தமிழ் நாட்டில் வேறு யாருக்காக ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா?
பொள்ளாச்சி விடுதி மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளான பிறகு 23 அம்ச திட்டம் சொல்கிறார். இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்? ஒரு விடுதிப் பிரச்சனை வெளியில் வந்தது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற விடுதிகளில் உள்ள வறிய குடும்பத்துச் சிறுவர்களின் கவுரவமான வாழ்க்கைக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்? குழந்தைப் பருவம் கொடுமை பருவமாக அல்லவா அவர்களுக்கு கழிகிறது? காஞ்சிபுரத்தில் சிறார் விடுதிகளில் சிறுவர்கள் கொடுமைப்பட்டது தொடர்பாக உருப்படியான நடவடிக்கை எடுத்திருந்தால், தனியார் மற்றும் அரசு விடுதிகளை கண்காணித்திருந்தால் பாதுகாப்பு மற்றும் கவுரவத்துக்கான ஏற்பாடுகள் செய்திருந்தால் பொள்ளாச்சி மாணவிகளை பாலியல் வன்முறை தாக்குதலில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் மாணவிகள் திறந்தவெளியில்தான் குளிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாணவிகளின் பாதுகாப்புக்கு ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த குற்றமய அலட்சியத்தை சைக்கிள் கொடுத்து மறைத்துவிட முடியாது.
மாநிலத்தில் உள்ள பெண்கள், மாணவிகள், சிறுமிகள் என யாருக்கும் பாதுகாப்பான நடமாட்டத்தையும் உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எந்த அக்கறையும் காட்டாமல், பாலியல் வன்முறையைத் தடுக்க 13 அம்சத் திட்டம், விடுதிகளை முறைப்படுத்த 23 அம்சத் திட்டம் என்று சொல்வதில் பொருளில்லை. 13 அம்சத் திட்டம் ஏட்டில் மட்டும் இருக்கிறது செயலில் இல்லை என்பதைத்தான் தமிழ்நாட்டில் நடக்கிற அடுத்தடுத்த பாலியல் வன்முறைச் சம்பவங்கள் காட்டுகின்றன.
தற்போதைய 23 அம்சத் திட்டத்தில் ஜெயலலிதா ஓர் ‘ஆகக்கடுமையான’ விதியைப் புகுத்தியிருக்கிறார். இருபாலார் விடுதியாக இருந்தால் இருபாலாருக்கும் தனித்தனியாக விடுதி அமைக்க வேண்டுமாம். அது முடியாமல் போனால் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டுமாம். என்ன ஒரு தொலைநோக்கு! என்ன ஓர் அறிவுக் கூர்மை! இன்னும் பாதுகாப்புப் பணியாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள், சுற்றுச்சுவர்கள் என்று இன்னும் ‘அதிஅற்புத’ நிபந்தனைகள்... இந்த சாதாரண விதிகளைக் கூட பூர்த்தி செய்யாமல்தான் தமிழ்நாட்டில் இதுவரை விடுதிகள் இயங்கி வந்தன என்றால் ஜெயலலிதா நல்லாட்சி செய்வதாகச் சொல்லிக் கொள்வது மாபெரும் பொய். கும்பகோணம் பள்ளி தீ விபத்து மாணவர்களை பலி கொண்டபோது, பள்ளிகள் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உருவாக்கப்பட்டன. அப்போதும் ஜெயலலிதாதான் முதலமைச்சராக இருந்தார்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார் பள்ளிகள் இயங்குகின்றனவா என்று முறைப்படி கவனித்ததுண்டா? இப்போதைய 23 அம்ச அறிவிப்பில், நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று சொல்லப்படவில்லை. விடுதி உரிமையாளர் பொறுப்பேற்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. முறையான கண்காணிப்பு பொறியமைவு பற்றி எதுவும் பேசாத இந்த 23 அம்ச அறிவிப்பு, வெறும் கண்துடைப்பு. வறிய குடும்பத்து குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனையை தற்காலிகமாக தள்ளிப்போடும் முயற்சி.
டில்லி பாலியல் வன்முறை சம்பவத்தை ஒட்டி நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தபோது, தமிழ்நாட்டில் 13 அம்ச பாதுகாப்பு ஏற்பாடு பற்றி ஜெயலலிதா அறிவித்தார். பொள்ளாச்சியிலும் கரூரிலும் அந்தக் கயவர்களுக்கு துணிச்சல் வந்தது, பெண்கள் பாதுகாப்பை பெரிய அளவில் உறுதி செய்ய முடியாத அந்த 13 அம்ச திட்டம்கூட செயலில் இல்லாததுதான். கரூரில் 17 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதே பகுதியில் பத்தாவது படிக்கும் தலித் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பகுதியில் மே மாதத்தில் மட்டும் இரண்டு பாலியல் சீண்டல் சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார். ஜ÷ன் 20 அன்று நடந்த சம்பவத்தில் காவல் துறையினர் புகார் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
ஜெயலலிதா கட்டுப்பாட்டில்தான் காவல்துறை உள்ளது. பாலியல் குற்றம் புரிந்தவர்கள் மீது குண்டர் சட்டம், மகளிர் விரைவு நீதி மன்றங்கள், அரசு குற்றவியல் வழக்குரைஞராக பெண் வழக்குரைஞர்களே அமர்த்தப்படுவது என்றெல்லாம் சொல்கிற 13 அம்சங்கள், குற்றங்களை பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினரை என்ன செய்வது என்று எதுவும் சொல்லவில்லை.
பாலியல் குற்றங்கள் பொறுத்தவரை நிச்சயமான தண்டனை மட்டுமே அடுத்து குற்றங்கள் நிகழாமல் தடுக்கும். குற்றம் பதிவு செய்யப்பட்டால்தானே அது நீதிமன்றத்துக்கு வரும்? குற்றத்தை பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு செயல் திட்டம் கண்துடைப்பே. குற்றவாளிக்கு மரண தண்டனை, ஆண்மை நீக்கம் ஆகியவை பற்றி சட்டத்தை திருத்த மத்திய அரசிடம் கோரப்படும் என்று சொல்கிற 13 அம்ச செயல்திட்டம், குற்றத்தை பதிவு செய்ய மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166எ பற்றி மவுனம் காக்கிறது. 37 தொகுதிகளில் வெற்றி தந்த தமிழகத்தின் தலித் மக்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா அரசு தந்துள்ளது வெறும் முட்படுக்கை மட்டுமே.