‘காந்தியடிகள் அணிந்தது
வேட்டி, பாரதி அணிந்தது வேட்டி, ரஷ்யாவில் காமராஜர் துணிச்சலுடன் அணிந்தது
வேட்டி, அண்ணா துரை அமெரிக்கா சென்றபோது அணிந்தது வேட்டி, எம்ஜிஆரின்
அடையாளமும் வேட்டி, நமது பாரம்பரியமான உடையான வேட்டிக்கு குரல் கொடுத்த
அனைவருக்கும் நன்றி...’எம்சிஆர் வேட்டிகள் மற்றும் ஷர்ட்டுகள். சந்தைதான்
எவ்வளவு சாதுரியமானது! எதையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
வேட்டி பிரச்சனையை விளம்பரமாக்கி தனது வேட்டிச் சந்தையை தக்கவைத்துக்
கொள்ளப் பார்க்கிறது எம்சிஆர் வேட்டிகள் மற்றும் ஷர்ட்டுகள் நிறுவனம்.
வேட்டி தமிழ் பண்பாடு, அதை எப்படி தடை செய்யலாம் என்று சட்டமன்றம் வரை குரல் எழுந்து, தடைக்குத் தடை விதிக்க சட்டம் என முடிவாகிவிட்டது. தமிழ் பண்பாட்டின் அனைத்து நற்கூறுகளும், அப்படி எதுவும் இருக்கும்பட்சம், காக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமே. இன்றும் என்றும் பாதுகாக்கலாம்.
அன்று வேட்டி அணிபவர்கள் இந்திய அடிமைகள். ஆண்டான்கள் புழங்கும் இடத்தில் அடிமைகளுக்கு இடமிருப்பதில்லை. அதனால், ஆங்கிலேயர்கள் தடை செய்தார்கள். இன்று வேட்டி அணிபவர்கள் யார்? சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒரு வசனம்... ‘வேட்டி கட்டினப்புறம், யாரையும் எப்படியும் ஏமாத்தலாம்னு ஒரு தைரியம் வருதில்ல...?’ இந்த வசனத்துக்கு எதிர்ப்பு ஏதும் எழவில்லை.
தமிழ் நாட்டின் அனுபவம், கேள்வி எழாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். வேட்டி அணிபவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள் அல்ல, ஏமாற்றுக்காரர்கள் வேட்டி அணிகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், வெள்ளை, சொள்ளைக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று பொதுப் புத்தியில் எப்படியோ படிந்திருப்பது, இன்றைய தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதி என்பதை நாம் மறுத்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. தமிழக சட்டமன்றம் ஏற்படுத்துகிற பாதிப்பாகக் கூட இது இருக்கலாம். (இன்று அங்கு சேலை கட்டியவர்களும் இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி மட்டும்தான் வேறுவித உடை அணிகிறார். உடையை வைத்து யாரையும் மதிப்பிட முடியாது என்பதை நமது சட்டமன்றத்தை விட வேறெது எளிதாக விளக்கிவிட முடியும்?)
நீதிபதி அரிபரந்தாமன் போன்றவர்கள் அரிதாகவே வேட்டி பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டின் கிராமப்புற வறியவர்கள் வேட்டிதான் இன்றும் பயன்படுத்துகிறார்கள். பேண்ட், சட்டை அவர்கள் பொருளாதாரத்தில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. மிகவும் மலிவானது என்றால் கூட, ஒரு பேண்ட், ஒரு சட்டைக்கு துணி வாங்க குறைந்தது ரூ.400 வேண்டும். அதை தைக்க இன்னும் ஒரு ரூ.200 வேண்டும்.இந்தத் தொகையில் அவர்கள் ஒரு மாத அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்கிவிடுவார்கள். வேட்டி வாங்கினால், இன்னும் சிக்கனமாக முடியும். தையல் செலவு மிச்சம். ஆக, வேட்டி அணியும் தமிழர்கள் பண்பாடு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இப்போது சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட சட்டம் மட்டும் போதாது. வேட்டியை மட்டும் தனியாக பாதுகாக்க முடியாது. தமிழ்நாட்டின் ஏகப்பெரும்பான்மை வறிய மக்களை பாதுகாக்க வேண்டும். வேட்டி நெய்யும் நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும். இலவச வேட்டி, சேலைத் திட்டத்தை கோஆப்டெக்ஸ் மூலம்தான் அமல்படுத்த வேண்டும் என்று அந்த ஊழியர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் எல்லாம் அழிந்துவிட்டால் கூடவே வேட்டி அணியும் தமிழர்கள் பண்பாடும் அழிந்துவிடும்.
ஆலைகளில் தொழிலாளர்களுக்கு சீருடையாக பேண்ட், சட்டை தருகிற நிர்வாகங்கள், தையல் செலவுக்கும் ஒரு தொகை தர வேண்டும். அதனால்தான், தமிழக அரசு இலவச வேட்டி, சேலை தருகிறது. இலவச பேண்ட் என்றால், தையல் கூலியும் சேர்த்துத் தர வேண்டும். நல்லது. இலவச வேட்டி தந்தாகிவிட்டது. சட்டை...? வறிய பிரிவு ஆண்கள், சட்டை இல்லாமல் வாழ்க்கையை கழித்துவிடுகிறார்கள்.அக்கம்பக்கம் கடைகளுக்குச் செல்லும்போது கூட சட்டை பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை. அதற்கும் அப்பால் எங்காவது வெளியில் போனால்தான் சட்டை வேண்டும். திருவிழா, பண்டிகை நாட்களில் மட்டும் அது நடக்கும். எப்படியோ சமாளிக்கிறார்கள்.
பெண்களுக்கு சேலை மட்டும் தருகிறார்களே, ரவிக்கை...? வறிய குடும்பத்து பெண்கள் ரவிக்கை அணிய வேண்டியதில்லை என்று தமிழக அரசு கருதுகிறதா? கீழ்ச்சாதி பெண்கள் தான் ரவிக்கை இன்றி இருந்தார்கள். தோள் சீலைப் போராட்டம் கண்ட மாநிலம் அல்லவா இது? பெண்கள் உடை பற்றி தமிழக அரசின் பார்வையில் அடிப்படை கோளாறு இருப்பதாக அல்லவா தெரிகிறது?
உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினர் இடுப்பில் கோவணம் மட்டும் கட்டிக் கொண்டு கடுமையாக உழைக்கும் நிலைதான் தமிழகத்தில் நிலவியது. இந்தப் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்று நிச்சயம் யாரும் சொல்ல மாட்டார்கள்.
மவுலிவாக்கம், உப்பரபாளையம் கட்டிட விபத்துகளில் பலியான தொழிலாளர்கள் லுங்கி அணிந்திருந்தார்கள். பெரும்பாலும் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் லுங்கியே அணிகிறார்கள். தமிழ்நாட்டின் பொதுப் புத்தியில் சமூக விரோதிகளின் உடை என்றே லுங்கி அடையாளம் காணப்படுகிறது.
கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருக்கட்டும். நகர்ப்புற உழைக்கும் பிரிவினர்க்கு வேட்டி அணிய முடியாது. மூச்சுத் திணறும் அளவுக்கு கூட்டம் இருக்கும் பேருந்தில் ஏறி இறங்கும் மாணவனோ, தொழிலாளியோ வேட்டியில் வெளியே செல்வதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவர்களுக்கு கிட்டத்தட்ட வேட்டி அணிய நேரம் இருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சாமான்ய மனிதர்கள் அணிவதால் பேண்ட், சட்டை மதிப்பிழந்ததாகி விடுகிறதா? அல்லது பேண்ட், சட்டை அணிவதால் அவர்களுக்கு பெருமதிப்புதான் கிடைத்து விடுகிறதா? உழைக்கும் மக்கள் அணியும்போது, பேண்ட் சட்டைக்கு பயன்பாட்டு மதிப்புக்கு மேல் வேறு மதிப்பு இருக்க முடியாது.
உழைக்கும் மக்கள் பிரிவினரை, அவர்கள் அடையாளங்களாக அறியப்படுவனவற்றை இழிவுபடுத்துவதும் தடை செய்வதும் தள்ளி வைப்பதும் இன்று சென்னை கிரிக்கெட் கிளப்பில் புதிதாகத் துவங்கவில்லை. தென்னாப் பிரிக்காவில் வெள்ளைக்கார சிப்பாயால் பழுப்பு நிறத்தவர் என்ற காரணத்தால் புகை வண்டியிலிருந்து காந்தி இறக்கிவிடப்பட்டார். சீனாவில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட உணவு விடுதிகளில் ‘இங்கே சீனர்களுக்கும், நாய்களுக்கும் இடமில்லை’ என்று அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டது. தமிழகத்தில் ‘பிராமணாள் கபேக்களில்’ பிற சாதியினருக்கு இடமில்லை என்று எழுதி வைக்கப்பட்டது. (அப்போதுதான் பெரியார் ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி’ என்றார்).
இவற்றை எல்லாம் கடந்து நீண்ட தூரம் வந்த பிறகும் கடந்த கால மிச்சசொச்சங்கள் விரட்டுகின்றன. இன்று ஜனநாயகவாதிபோல் வேட்டிக்கு குரல் கொடுக்கும் ராமதாஸ் தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டி சர்ட் போடுவதில் உடன்பாடு இல்லாதவர். (நீங்கள் எங்குதான் நிற்கிறீர்கள் மருத்துவர் அவர்களே?). மருத்துவ கல்லூரிகளில் கண்ணியம் காப்பது என்ற பெயரில் உடைக் கட்டுப்பாடு, பெண்களுக்கு குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற பொதுவாக உடைக் கட்டுப்பாடு, பள்ளி மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கம் பெறுவது என்ற பெயரில் நமது தட்பவெப்ப நிலைக்குப் பொருந்தாத உடைக் கட்டுப்பாடு, மேல் சட்டையில்லாதவர்கள் மட்டுமே சில கோயில்களில் சில எல்லைகள் வரை அனுமதிக்கப்படுவது என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க, அந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின் இருக்கும் சனாதன, ஆதிக்க, மேட்டுக்குடி, ஆணாதிக்க கருத்துக்களை கேள்விக்குள்ளாக்க, வேட்டி பிரச்சனை வாய்ப்பு தந்திருக்கிறது.
வர்க்க சமூகத்தில் அவரவர் இருக்கும் இடம் அவரவர் உடையை தீர்மானிக்கிறது. அவரவர் சமூகத்துக்கு ஆற்றும் பங்கு அவரவர் உடையை தீர்மானிக்கிறது. பண்பாடு, கலாச்சாரம், கருத்து அனைத்தும் பின் அதைச் சுற்றி கட்டமைக்கப்படுகிறது.
கேதன் பரீக், ஹர்ஷத் மேத்தா, சுப்ரதா ராய், சத்யம் நிறுவன உரிமையாளர்கள்... இவர்கள் கோட், சூட் அணிந்தவர்கள். கேடி சகோதரர்கள் இந்தப் பட்டியலில் சேர்வார்கள் போல் தெரிகிறது. கோட், சூட் அணியும் இன்னொரு வகை அம்பானி, டாடா, மிட்டல், ஜின்டல் இப்படி. இவர்கள் மனித ரத்தம் உறிஞ்சும் அட்டைகள். கோட், சூட் அணிபவர்கள் அனைவரும் கனவான்களும் அல்ல; வேட்டியும் லுங்கியும் அணிபவர்கள் சமூக விரோத சக்திகளும் அல்ல.