COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

பாலியல் வன்முறை குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடு

தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்களைத் தடுக்க, வர்மா கமிட்டி பரிந்துரைகளை, ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், பெண் நீதிபதிகளைக் கொண்ட பெண்களுக்கான தனி நீதிமன்றம் அமைத்திடக் கோரியும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஜூன் 19 அன்று மயிலாடுதுறையில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புரட்சிகர இளைஞர் கழக நாகை மாவட்ட பொறுப்பாளர் தோழர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய மாணவர் கழகப் பொறுப்பாளர் தோழர் மைக்கேல் முன்னிலை வகித்தார். மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம். மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் இளங்கோவன், டி.கே.எஸ். ஜனார்த்தனன், மாணவர் கழகப் பொறுப்பாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத்,  மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆனந்தன், கண்ணன், ராஜேந்திரன், முற்போக்கு பெண்கள் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் சரளா, பிரியதர்சினி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர்கள் திலீப்குமார், இளந்தென்றல், பாரதிராஜா, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Search