சீனப் புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதன் பரிமாணங்கள்
ஒரே மாதிரியான எழுத்து என்று சொல்வதன் முக்கிய அம்சங்களை ‘எட்டு கால்கள்’ கட்டுரையில் தோழர் மாவோ பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
1. இது முடிவேயில்லாமல் வெற்று ஆரவாரங்களாய் பக்கங்களை நிரப்பும்.
2. இது மக்களை வேண்டுமென்றே அச்சுறுத்த வேண்டும் என்ற தோற்றம் கொண்டிருக்கும்.
3. இது வாசகர்களைக் கணக்கில் கொள்ளாமல் ஏதாவது சொல்லும்.
4. அதன் அலுப்பூட்டும் மொழி, பிரச்சனையை நினைவூட்டுவதாக இருக்கும்.
5. சொல்ல வேண்டியவற்றை சிக்கல் நிறைந்ததாக வகைப்படுத்தியிருக்கும்.
6. இது வெளிப்படும் இடங்களில் எல்லாம் பொறுப்பற்று மக்களுக்கு தீங்கிழைக்கும்.
7. இது மொத்த கட்சியையும் விஷமாக்கி, புரட்சியை சீர்குலைக்கும்.
8. இதன் பரவலாக்கம் நாட்டை பாதித்து மக்களை சேதப்படுத்தும்.
ஒரு வடிவம் என்ற முறையில் இது புரட்சிகர உணர்வை வெளிப்படுத்த பொருத்தமானது அல்ல என்பது மட்டுமல்ல, அதை தடை செய்யக் கூடியதுமாகும். நாம், ஊக்கமான, உயிர்த்துடிப்பான, புதுமையான, அழுத்தமான மார்க்சிய - லெனினிய வேலை நடையை பின்பற்ற வேண்டும். இந்த வேலை நடை நீண்ட காலமாக நம்மிடம் இருக்கிறது என்றாலும் கூட நம்மிடையே இதை இன்னும் வளர்த்தெடுத்து பரவலாக்க வேண்டும்.
தொகுத்துச் சொல்வதானால், சீர்செய் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது அகநிலைவாதம் மற்றும் குழுவாதத்தை எதிர்ப்பது படிப்பை சீர்திருத்துவது, ஒரே மாதிரியான எழுத்து நடையை எதிர்ப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி 2 முக்கிய நோக்கங்களுக்கு கவனம் செலுத்தியது. முதலாவதாக ‘கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று, வருங்காலத்தில் அது நிகழாமல் தடுப்பது’ இரண்டாவதாக ‘நோயை அழித்து நோயாளியைக் காப்பது’ என்பதாகும். கருத்தியல் மற்றும் அரசியலிலுள்ள சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்க ஒருவர் கடுமையாக, முரட்டுத்தனமாக நடந்து கொள்வதற்குப் பதிலாக ‘நோயை அழித்து நோயாளியைக் காப்பது’ என்ற சரியான, செயலூக்கமான முறை ஒன்றேதான் வழி.
6. ஊழியர் கொள்கை தொடர்பாக
சரியான கருத்தியல் - அரசியல் வழியை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்த பின்பு, புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஊழியர்களே முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர். ஒரு பொருளில் கம்யூனிஸ்ட் கட்சி அடிப்படையில் ஊழியர்களை அடிப்படையாக கொண்ட கட்சியாகும். பெரும் எண்ணிக்கையிலான கட்சி ஊழியர்களால் மட்டுமே ஒட்டுமொத்த கட்சியையும் ஒற்றுமைப்படுத்தி அணிதிரட்ட முடியும். ஒன்றுபட்ட, அணி திரட்டப்பட்ட கட்சியால்தான் கட்சிக்கு வெளியில் உள்ள பல லட்சக்கணக்கான பரந்த மக்களுக்கு நேரடியாக தலைமை கொடுக்க முடியும். எனவே பெரும் எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களுக்கு திட்டமிட்ட வகையில் பயிற்சி கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்காகும்.
நமது கரிசனம் என்பது கட்சி ஊழியர்கள் மற்றும் கட்சி அல்லாத உறுப்பினர்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும். நல்ல திறமையான மனிதர்கள் கட்சிக்கு வெளியிலும் இருப்பதை நாம் புறந்தள்ளக் கூடாது. ஊழியர்களை எப்படி கணிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் ஊழியரின் வாழ்நாளின் ஒரு குறுகிய காலத்தை வைத்தோ அல்லது சில சம்பவங்களை வைத்தோ கணிப்பதற்கு வரம்பிட்டுக் கொள்ளாமல் அவர் வாழ்க்கை மற்றும் வேலையை ஒரு முழுமையாகப் பார்க்க வேண்டும். ஊழியரை எப்படி நன்கு பயன்படுத்துவது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இறுதி ஆராய்ச்சியில் தலைமைக்கான முக்கிய பொறுப்பு என்பது கருத்துகளை உருவாக்குதல், ஊழியர்களை பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். ஊழியர்களை பயன்படுத்த இரண்டு நேரெதிர் வழிகள் இருக்கின்றன. அவை ‘தகுதி அடிப்படையில் அமர்த்துவது’, செல்வாக்கின் அடிப்படையில் அமர்த்துவது என்பவை. கம்யூனிஸ்ட் கட்சி, ஊழியர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
கட்சி வழியை அமல்படுத்துவதில் தீர்மானகரமாக இருப்பது, கட்சி ஒழுங்கை கடைபிடிப்பது, வெகுமக்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பது, சுதந்திரமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்வது, செயலூக்கம், கடின உழைப்பு மற்றும் சுயநலமில்லாமல் இருப்பது. இந்த அம்சங்கள் எந்த ஊழியருக்கும் ‘தகுதிக்கான’ அடிப்படையாகும்.
நல்ல ஊழியரை நன்கு கவனித்துக் கொள்ளவும் நமக்குத் தெரிய வேண்டும். இதற்காக பின்வரும் வழிகளை நாம் பின்பற்ற வேண்டும்.
அ) வழிகாட்டுதல் கொடுப்பது: அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது. இதனால் பொறுப்பெடுப்பதற்கான துணிவு கிடைக்கும் அதே வேளை உரிய நேரத்திலான வழிகாட்டுதல் கொடுப்பது. கட்சி வழியில் வழிநடத்தப்படும்போது அவர்கள் தங்கள் முன்முயற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆ) அவர் தரத்தை உயர்த்துவது: இது கல்வி அளிப்பதைக் குறிக்கும். இதன் மூலம் அவர்கள் கோட்பாட்டுப் புரிதலையும் வேலை செய்யும் திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
இ) அவர்களின் வேலையை பரிசோதனை செய்வது அவர்களின் அனுபவங்களைத் தொகுத்து சாதனைகளை முன்னெடுத்துச் செல்வதையும், தவறுகளை சரி செய்வதையுமே இது அர்த்தப்படுத்துகிறது. பரிசோதனை எதுவுமில்லாமல் வேலைகளை ஒதுக்குவதும் காத்திரமான தவறு நடந்துவிட்ட பிறகு அதைக் கவனிப்பதும் ஊழியர் நலனைப் பார்த்துக் கொள்வதற்கான வழி ஆகாது.
ஈ) தவறு செய்தவர்கள் அதைத் திருத்திக்கொள்ள இணங்கச் செய்யும் வழிமுறை பொதுவாக பயன்படுத்தப்படும். காத்திரமான தவறுகளை செய்துவிட்டு வழிகாட்டுதலையும் ஏற்க மறுக்கும் ஊழியர்களுடன் மட்டுமே போராட்டம் என்ற முறையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
உ) ஊழியர்களின் சிரமத்திற்கு உதவுவது: உடல் நலக் குறைவு, வீட்டுப் பிரச்சனை அல்லது மற்ற பிரச்சனைகளால் ஊழியர்கள் சிரமம் சந்திக்கும்போது நாம் எல்லா வழிகளிலும் முடிந்தவரை கொடுத்து உதவ வேண்டும். இதுவே ஊழியர் நலன் பேணுவதாகும்.
7. தலைமைக்கான வழிமுறை பற்றி
கம்யூனிஸ்ட்டுகள் இரண்டு அடிப்படைகளை பின்பற்ற வேண்டும். ஒன்று பொதுவானதைக் குறிப்பானதோடு இணைப்பது. மற்றொன்று தலைமைக்கும் வெகு மக்களுக்குமான இணைப்பு. இந்த அடிப்படைகளில் ஊன்றி நின்று கீழ்கண்ட அம்சங்கள் மீது தலைமை அக்கறை செலுத்த வேண்டும்.
அ) பொதுவான அழைப்பைக் கொடுப்பதோடு தன்னை நிறுத்திக் கொள்ளாமல், வேர்க்கால்மட்ட அமைப்பு ஒன்றில் தன்னை ஈடுபடுத்தி விடுக்கப்பட்ட அழைப்பை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் மற்றும் அதில் ஒரு தகர்த்த முன்னேற்றத்தைக் கொண்டு வந்து குறிப்பான அனுபவங்கள் எடுப்பதன் மூலம் வழிகாட்ட முடியும்.
ஆ) இந்த இயக்கப்போக்கில் ஒவ்வொரு கிளையிலும் (யூனிட்) ஒரு முன்னணிக் குழு உருவாக்கப்பட்டு அவை வெகுமக்களிடம் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்க ஊக்குவிக்கப்பட்டு, வெகுமக்களின் செயல்துடிப்புள்ள சக்திகள் கட்சி தலைமையைச் சுற்றி அணி திரட்டப்பட வேண்டும். இந்த சக்திகளை சார்ந்து நின்று இடைப்பட்டவர்களை வளர்த்தெடுக்கவும் மற்றும் பிற்போக்கு சக்திகளை வென்றெடுக்கவும் வேண்டும்.
இ) எல்லா நடைமுறை வேலைகளிலும் அடிப்படை மார்க்சிய கோட்பாட்டு அறிவோடு தொடர்புடைய ‘மக்களிடமிருந்து, மக்களுக்காக’ என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
ஈ) கீழ்மட்ட அமைப்புகளுக்கான சில கடமைகளை கொடுக்கும்போது, மேல்மட்ட அமைப்புகளும் அதன் பல்வேறு பிரிவுகளும் கீழ்மட்ட அமைப்பின் தலைவர்கள் மூலமாகத்தான் செல்ல வேண்டும், அப்போதுதான் அவர்கள் பொறுப்பை எற்றுக் கொள்ள முடியும். இது தலைமையையும் வேலைப் பிரிவினையையும் இணைப்பது என்ற மத்தியத்துவப்படுத்தப்பட்ட வழிமுறையோடு தொடர்புடையது ஆகும்.
உ) எவ்வாறான சூழல் அல்லது இடமாக இருந்தாலும் தலைமை மய்யக் கடமையை பற்றிக் கொண்டு மற்ற கடமைகளை அதற்குத் துணையானதாகக் கொள்ள வேண்டும். மய்யக் கடமை என்பது முற்றூடானதோ அல்லது நிர்ணயிக்கப்பட்டதோ அல்ல மற்றும் அது சூழ்நிலைக்குத் தக்கவாறு மாறக் கூடியதாகும்.
எல்லா முன்னணித் தலைவர்களும் அகநிலைவாத, அதிகாரத்துவ முறைக்கு மாறாக, அறிவியல்பூர்வ, மார்க்சிய வழியிலான தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அகநிலைவாதிகளும், அதிகாரத்துவவாதிகளும் தலைமையை வெகுமக்களுடன் இணைப்பது பற்றியோ, பொதுவானதைக் குறிப்பானதோடு இணைப்பது பற்றியோ கொள்கை புரிதல் கொண்டிருக்க மாட்டார்கள். நாம் மார்க்சிய முறையிலான தலைமையை விரிவான மற்றும் ஆழமான தளத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்.
சீனப் புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதிலுள்ள முக்கியமான அம்சங்களை நாம் மேலே விவாதித்திருக்கிறோம். இதை சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது பற்றிய விரிவான சித்திரம் என்று சொல்ல முடியாதுதான். இருந்த போதும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் நம் நடைமுறைக்கு இது சிறிது வெளிச்சத்தைத் தரக் கூடும். கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் இயக்கப் போக்கில் சீனச் சூழல் மற்றும் புரட்சிக்கும், இந்திய புரட்சிக்குமிடையில் முக்கியமான பொருத்தமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், சீனா எதிர்கொண்டதைப் போன்ற அதே குட்டி முதலாளித்துவ கருத்தியல் சுற்றிவளைப்பை இந்தியாவும் சந்திக்கிறது.
முடிவுரைக்குப் பதிலாக
சீனப் புரட்சி பல பத்து லட்சக்கணக்கான பின் தங்கிய சமூக சீன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பாட்டாளிகளால் தலைமை தாங்கப்பட்ட புரட்சிகர மாற்றத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததால் உலக வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்வாக அமைந்தது. அது பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அல்லது முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளுடன் 25 ஆண்டுகாலமாக தொடர்ந்தது. சீனப் புரட்சி உலகை, குறிப்பாக பின்தங்கிய, வளர்ந்து வரும் நாடுகளை உலுக்கும் நிகழ்வாக அமைந்தது. சீனப் புரட்சியால் உந்துதல் பெற்ற பல்வேறு பின்தங்கிய நாடுகளில் புரட்சிக்கான முயற்சி நடைபெற்றது. முயற்சிகள் மற்றும் அளப்பறிய தியாகங்களை ஒப்பிடும்போது அர்த்தமுள்ள மற்றும் உண்மையான வெற்றி என்பது குறைவாகத்தான் இருந்தது.
இந்நிகழ்வுக்கான அடிப்படைக் காரணம் சீனப்புரட்சியை அந்தந்த நாட்டின், சமூகத்தின் யதார்த்த நிலைமைகளோடு இணைக்க மற்றும் அதிலிருந்து உண்மையான பாடங்களைப் பெறத் தவறுதல் ஆகியவற்றில் உள்ளது. சீனப் புரட்சி நிகழ்வு எப்போதுமே மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, ஒரு பக்க மற்றும் இயக்க மறுப்பு முடிவுகளுக்கு இட்டுச் செல்ல தூண்டும். மேலும், சீனப் புரட்சி நிகழ்வின் தொடர் இயக்கப்போக்கு அதன் தோற்றத்திலேயே, அதன் சாரத்தை அல்லது அடிப்படை உட்கூறுகளை அல்லது உள்ளார்ந்த இயக்க விதிகளை பற்றிக்கொள்ளத் தவறினால் தவறாக வழிகாட்டுவதற்கான உள்ஆற்றலை கொண்டிருந்தது.
இந்தியாவில் புரட்சிகர பிரச்சாரத்தை எடுத்துச் செல்லும் இயக்கப் போக்கும் கூட பல பிறழ்வுகளை அல்லது சீனப் புரட்சியை எளிமையாக பார்ப்பது என்பதை எதிர் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது, கோட்பாடு மற்றும் நடைமுறை இரண்டிலுமே மோசமான இயக்க மறுப்பியல் அணுகுமுறையாகும்.
நாம் முன்னர் பல்வேறு தலைப்புகளில் விவாதித்த விசயங்களின் வெளிச்சத்திலும், இயங்கியல் மற்றும் அனைத்தும் தழுவிய அணுகுமுறை மூலம் சீனப்புரட்சியின் படிப்பினைகளை கற்றுக் கொள்ள முயற்சிப்போம்.
1. சீனப்புரட்சி, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ‘நகல் புத்தகமாக’ ஒருபோதும் இருந்தது இல்லை. மார்க்சிய-லெனினியத்தால் வழிநடத்தப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படை கூறுகள் மற்றும் கோட்பாடுகள் துவங்கி, ரஷ்யப் புரட்சியை ஒப்புநோக்கும் புள்ளியாகக் கொண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் புரட்சியின் ‘தெரியாத’ பயணத்தைத் துவங்கியது.
வரலாற்றின் வெளிச்சத்தில் சமகால சீனத்தின் உள் விசையை பற்றிக்கொண்டு மார்க்சிய-லெனினிய கருவி கொண்டு அதனோடு வினையாற்றும் வழிமுறையையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்ததன் மூலம் தகர்த்த முன்னேற்றத்தை நிகழ்த்தியது. எதார்த்தமாகவும், வெளிப்புறச் சூழல் பற்றி அர்த்தமுள்ள வெளிப்படுத்துதலுக்காகவும் சிபிசி (சீனக் கம்யூனிஸ்ட் கட்சி) ‘ஆய்வு இல்லையென்றால், பேச உரிமையில்லை’ என்றது.
சிபிசி சீன சமூகத்தின் வர்க்க இயங்காற்றலை கிரகித்துக் கொண்டு சீனப்புரட்சிக்கான சரியான வர்க்க அணுகு முறையை, வர்க்க வழியை கைக் கொண்டது. பின்தங்கிய வளர்ச்சியடையாத சீன சமூக பின்னணியில் சிபிசியின் அடிப்படை முயற்சி என்பது சீனப் புரட்சிக்கான விதைகளை விதைப்பது, அந்த விதைகளை வளர்ப்பது, அதன் தர்க்கரீதியான எல்லையான சோசலிசம் நோக்கி மேம்படுத்துவது என்பதாக இருந்தது. சிபிசி, அதன் போர்த்தந்திர இலக்கினை அடைய, மார்க்சிய - லெனினிய வெளிச்சத்தில் அதன் திறமைகள் அனைத்தையும் செலுத்தி தொகுப்பான செயல்தந்திரங்களை அமல்படுத்தியது. ஒட்டுமொத்தத்தில், சீனப் புரட்சி லெனினின் அடிப்படை வழிகாட்டுதலான ‘குறிப்பான சூழ்நிலையின், குறிப்பான பகுப்பாய்வுதான் மார்க்சியத்தின் உயிர்வாழும் ஆன்மா’ என்பதை அமல்படுத்துவதற்கான பரிசோதனைக் கூடமாக அமைந்தது.
2. சீனப் புரட்சியின் காலகட்டத்தில் மார்க்சிய-லெனினியத்தை அறிவுக் கூர்மையுடன் பயன்படுத்திய சில நிகழ்வுகளை அடுத்து பார்ப்போம்.
அ. புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய சமூகம் என்றும் நிலப்பிரபுத்துவ சக்திகள், தரகு, அதிகார வர்க்க மூலதனம், அரைக்காலனிய ஏகாதிபத்திய தலையீடு ஆகியவற்றை ஒழிப்பதுதான் சீனப்புரட்சியின் போர்த்தந்திர இலக்கு என்றும் வரையறுத்தது.
ஆ. புரட்சியின் கட்டத்தை ஜனநாயகப் புரட்சி என்றும் ஆனால் பழைய முதலாளித்துவ புரட்சி என்ப ற்குப் பதிலாக, பாட்டாளிகளால் தலைமை தாங்கப்படும் ‘புதிய ஜனநாயக’ புரட்சி என அடையாளப்படுத்தியது.
இ. விவசாயப் புரட்சிதான் முடிக்கப்படாத சீன ஜனநாயகப் புரட்சியின் திறவுகோல் என்றும், விவசாயப் போராட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளின் தலைமையை நிறுவுவது என்பது, ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத் தலைமையை உறுதிபடுத்துவதற்கு அவசியமானது என்ற புரிதல்.
ஈ. எழுச்சியின் மூலமாக மேலிருந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, மக்களின் அரசியல் அதிகாரத்தை கொரில்லா யுத்தத்தின் மூலம் கீழிருந்து உருவாக்குவது; சீனாவில் பகையாளர்களுக்கிடையில் வளர்ந்து வரும் முரண்பாடுகள், சீன சமூகத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி ஆகியவற்றை ஆராய்வதன் மூலம், வெள்ளை அதிகாரத்தால் சூழப்பட்ட சிவப்பு அரசியல் அதிகாரங்களை வளர்த்தெடுப்பதற்கான வெற்றிகரமான முயற்சிகள்.
- தொடரும் தமிழில்: தேசிகன்