COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 16, 2014

தொழிலாளர் துறை உதவி ஆணையரை காணவில்லை...

தொழிலாளர் துறை உதவி ஆணையரை காணவில்லை என்ற முழக்கத்துடன் 08.07.2014 அன்று டிஎம்எஸ் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. 50 நாட்களாக கதவடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள டிரில் புஷ்ஷிங் தொழிலாளர்கள், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தொழிலாளர் இணை ஆணையர் வழக்கை தானே ஏற்று நடத்துவதாகக் கூறி முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பேசுவதற்கு வர கோரினார்.

பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.மோகன், சங்க செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஸ்டாலின், புகழேந்தி, மகேந்திரன், அன்புமணி, ராஜேந்திரன், கண்டன உரையாற்றினார்கள்.

     மவுலிவாக்கம், உப்பரபாளையம் விபத்துக்களில் இடம்பெயரும் தொழிலாளர்கள் பெருமளவில் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இடம்பெயரும் தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை, உடனடியாக கட்டாயமாக பதிவு செய்ய தொழிலாளர் துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அவர்களை அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தோழர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Search