2014 நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை
அஇஅதிமுக கைப்பற்றியது, பதிவான வாக்குகளில் 44.3% பெற்றது, எனினும்
தருமபுரி மற்றும் கன்னியாகுமரி தொகுதி முடிவுகள் தோல்விகளை தருவதாக
அமைந்தன. தருமபுரியில் அஇஅதிமுக வேட்பாளரைவிட பாமகவின் அன்புமணி ராமதாஸ்
77,146 வாக்குகளை கூடுதலாகப் பெற்று, (பாமக 4,68,194 அஇஅதிமுக-3,91,048)
வெற்றி பெற்றார். ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித்துகளின் வாக்குகள் (விடுதலை
சிறுத்தைகள் கட்சி மூலமாக) திமுக வேட்பாளரை பலப்படுத்தும் என்ற
எதிர்பார்ப்பிற்கு மாறாக, திமுக 1,80,297 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது;
பதிவான 11,01,345 வாக்குகளில் பாமக 42.51%, அஇஅதிமுக 35.50%, திமுக 16.37%
பெற்றது, முக்கிய அரசியல் செய்திகளை கொண்டுள்ளன.
வெற்றியா? சரிவிலிருந்து தப்பி பிழைத்தலா?
திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு, பாட்டாளி மக்கள் கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தலில், அஇஅதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 7 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது. 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து 30 இடங்களில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமக தொடர்ந்து சரிவில் இருந்தது. தேமுதிக நோக்கி பாமகவினர் நகர்ந்தனர்... கொதிப்புற்ற பாமக விஜயகாந்த் மீது கடும் தாக்கு தல்களை மேற்கொண்டது. திமுக, அஇஅதிமுக நோக்கிய சரிவை பாமகவால் தடுக்கவே முடியவில்லை. பாமக தலைமை குடும்ப கட்சியாக, சுயநலமிக்கதாக மாறியதும், பலரும் வெளியேறுவதும், வெளியேற்றப்படுவதும், தமிழர் வாழ்வுரிமை கட்சி என அணிதிரண்டதும் பாமகவை பலவீனப்படுத்தின. மறுபுறம், அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது, மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு, வழக்கு என்ற நெருக்கடிகளும் பாமகவை சூழ்ந்தன. கட்சி அடித்தளங்களை இழந்ததோடு, தேக்கத்தையும் சந்தித்தது. பாமக பலருடன் சேர்ந்து நடத்தி வந்த தமிழ் தேசிய அரசியல் பயணம் ஆதாயங்களைத் தரவில்லை. வன்னியருக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையும் கூட கட்சியை கரை சேர்க்கவில்லை.
தமிழகத்தில் ‘பாமகவின் ஆட்சி’ என்பதெல்லாம் சுவையான கற்பனைகளாகிவிட்டன. பாமகவின் அரசியல் பயணம் முட்டுச்சந்தில் சிக்கிக் கொண்டது. மாபெரும் தப்பித்தலுக்கான வழிவகைகளை எதிர்பார்த்து நின்றது. ‘சாதி அரசியல்’ என்ற துருப்புச் சீட்டுடன் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, பாமகவின் தேரோட்டியாக வந்து நின்றார். வன்னியர் சங்கம் மூலம் வன்னிய இளைஞர்களை உசுப்பேற்றும் பணி மும்முரமானது. சாதிய வன்முறை மூலமாக வன்னியர் அடித்தளத்தை தக்கவைப்பது என்ற பரிசோதனைக்கு மென்மையான இலக்கான தருமபுரி தேர்வு செய்யப்பட்டது. 40% வன்னியர் வாக்காளர்களைக் கொண்டுள்ள இத்தொகுதியில் 42.51% வாக்குகளை பாமக பெற்றிருப்பது, பரிசோதனையில் வெற்றி பெற்று வன்னியர் அடித்தளத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதை குறிக்கிறது.
அரசியல் முனையை இழந்த தலித் எழுச்சி
தருமபுரியில் தலித்துகளின் எண்ணிக்கை சுமார் 20 சதம் ஆகும். வறட்சியும் ஏழ்மையும் மிக்க தருமபுரி மாவட்டம் கம்யூனிஸ்ட் பாரம்பரியம் மிக்கதாகும். கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் 70களிலும், 80களின் துவக்கத்திலும், அடிப்படை சமூகங்களான வன்னியர் மற்றும் தலித் உழைக்கும் மக்கள் கந்து வட்டிக் கொடுமைக்கு எதிராகவும், கொத்தடிமைத் தனத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டுப் போராடினர். வர்க்க உணர்வு சாதிகளைக் கடந்து, சாதி மறுப்புத் திருமணங்களை கொண்டு வந்தது. நக்சல்பாரி இயக்கம் கடும் பின்னடைவைச் சந்தித்தபோதும், காதல் திருமணங்கள்/சாதி மறுப்புத் திருமணங்கள் தொடரவே செய்தன. சாதிய வன்முறைக்கு பாமகவின் வன்னியர் சங்கம் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. நத்தம் காலனி இளவரசன்-திவ்யா காதல் திருமணம் காரணமாக்கப்பட்டது.
2012 நவம்பர் 7ல் நாயக்கன்கொட்டாய் வட்டார நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி காலனி என ஆதிராவிடர் குடியிருப்புகள் சாதிவெறிக் கும்பல்களால் பெட்ரோல் குண்டுகளை வீசி தீக்கிரையாக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. பல்லாண்டுகளாக வியர்வையும், ரத்தமும் சிந்தி உழைத்து தலித்துகள் உருவாக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பு சொத்துக்கள் 268 வீடுகள் அழிக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டோர் என நூறு பேர் கைது செய்யப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து தருமபுரி நோக்கி தலித்துகள், சனநாயக சக்திகள், புரட்சியாளர்கள் அணி திரண்டனர். வாழ்வுரிமைக்காகவும், இழப்பீட்டிற்காகவும், நீதிக்காகவும் பாதிக்கப்பட்ட தலித்துகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து, 2012, டிச. 31ல் மங்கம்மாள் உயிர் நீத்தார்.
உயர்நீதிமன்றத்தின் சதிராட்டங்களால், அதீதமான தலையீடுகளால் திவ்யா-இளவரசன் பிரிய நேரிட்டது. உச்சகட்டமாக, 2013, ஜூலை 4ல் இளவரசன் அகால மரணம் நேரிட்டது. தருமபுரியில் தலித்துகள் மத்தியில் எழுச்சி காணப்பட்டது. மறுபுறம், ஆரவாரமில்லாமல், பாமக ஊர்க்கூட்டங்கள் நடத்தியது. பெண்களை போராட்ட முனைக்கு கொண்டு வந்தது. வன்னியர் அடித்தளத்தை உறுதிப்படுத்தியது. தனது தேர்தல் பிரச்சாரத்தை வெகு முன்னரே திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாக துவக்கிவிட்டது. ஆனால், நத்தம் காலனி மீதான தாக்குதல் முதல் இளவரசன் மரணம் வரையிலான காலகட்டத்தில் தனது ஊசலாட்டமான செயல்பாடுகளால் தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித்துக்கள் மத்தியில் நம்பிக்கையை மதிப்பை இழந்து வந்தது. அது தலித்துகளின் உணர்வுகளுக்கு, கோரிக்கைகளுக்கு முறையான அரசியல் வடிவம் தரவில்லை.
எனவே, தருமபுரியில் தலித் எழுச்சி அதன் அரசியல் முனையை இழந்தது. திருமாவளவன் வகை தலித் அரசியல் பின்னடைவை சந்தித்தது. திமுகவானது தலித்துக்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக வரவில்லை. தலித் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையும், அரசியல் வெற்றிடமும் உருவானது. திமுக வேட்பாளர் 16.37% வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது கணிசமான தலித் வாக்குகள் (விசிக அடித்தளம்) திமுகவிற்கு சென்றடையவில்லை எனக் காட்டுகிறது.
அதிமுகவை நோக்கி திரும்பிய தலித் வாக்குகள்
‘தேர்தலில் தலித் வாக்காளர்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை அதிமுகவினர் பணம் வழங்கினார்கள்; தலித் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு பணத்தை அள்ளிஅள்ளி வழங்கி அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை மாற்றினார்கள்’ என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், இது தேர்தல் முடிவு பற்றி அரசியல்ரீதியாக விளக்கம் தருவதாக இல்லை. 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிதான் வெற்றி பெற்றிருந்தது. வன்னியர் மற்றும் தலித் வாக்காளர்கள் மத்தியில் ஏற்கனவே அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குமாற்றம் நடைபெற்றிருந்தது. 2012 நவ. 7 நத்தம் காலனி மீதான தாக்குதலுக்கு காரணமான பாமக-வன்னியர் சங்க நிர்வாகிகள் மீது அதிமுக அரசாங்கம் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளும், தலித்துகளை ஈர்த்திருந்தது.
அதற்கு பிறகு, 2013 ஏப்ரல் 25ல் வன்னியர் சங்கத்தின் சித்திரை திருவிழாவைத் தொடர்ந்து மரக்காணத்தில் தலித்துகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஒரு வாரகாலம் வடமாவட்டங்களில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பஸ்கள் தாக்கப்பட்டன. 13 பஸ்கள் எரிக்கப்பட்டன. ராமதாஸ் உட்பட பாமக தலைவர்கள் கைது செய்து சிறைக்குள் அடைக்கப்பட்டனர். காடுவெட்டி குரு உட்பட பல பாமக முன்னணித் தலைவர்கள் குண்டர் சட்டத்தில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகள், ஜெயலலிதா அரசாங்கத்தின் மீது தலித்துகளுக்கு மாயையை ஏற்படுத்தியது. பாமகவை வீழ்த்த அதிமுகதான் சரியான சக்தி என தலித்துகள் கருதினர். எனவே அதிமுகவிற்கு தலித் வாக்குகள் மாறிச் சென்றன. வடமாவட்டங்களில், தலித் அமைப்புகளின் சார்பில் ஜெயலலிதாவைப் பாராட்டி சுவரொட்டிகளும் கூட ஒட்டப்பட்டன.
பாமகவிற்கு வெற்றியை தீர்மானித்த வாக்குகள்
தருமபுரியில் பாமக நிறுவனர் ராமதாசின் மொத்த குடும்பமும் வாக்கு சேகரிக்க முழு மூச்சாக இறங்கியது; தேமுதிக கட்சியின் வாக்குபலம், பிரச்சாரம் போன்றவை எல்லாம் இருந்தது. எனினும் 77,146 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, பாமக வெற்றி பெற்றது பரிசீலனையைக் கோருகிறது. சுயநலன் மிக்க பாமக தலைமை மீது அதிருப்தியடைந்த வன்னியர் அரசியல் சக்திகளும் முன்னேற்றம் விரும்பும் இளைய தலைமுறையினரும், 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு உறுதியாக நின்றதை ஒப்பிடும்பொழுது, அதிமுகவின் வன்னியர் வாக்கு அடித்தளமும் பாமகவிடம் நகர்ந்துள்ளது.
கல்வி அமைச்சர் பழனியப்பனின் தொகுதியான பாப்பிரெட்டிப்பட்டியில் 90,012 (அதிமுக 65,785), தருமபுரியில் 95,041 (அதிமுக 56004) பென்னாகரத்தில் 89,654 (அதிமுக 51261) மற்றும் பாலக்கோட்டில் பாமகவிற்கு திரளான வாக்குகள் கிடைத்திருக்கிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக (முதன்முறையாக) 8 வன்னியர் வேட்பாளர்களை களத்திலிறக்கி வன்னியர் ஆதரவு தோற்றமளித்தபோதும் தருமபுரியில் வன்னியர் வாக்குகளை கவரமுடியவில்லை. பாமக மீதான அரசின் அடக்குமுறையும், பாமகவின் ‘காதல் நாடக’ தலித் காழ்ப்புணர்ச்சி பிரச்சாரமும் வன்னியர்கள் மத்தியில் பாமக மீதான அனுதாபத்தையும், ஆதரவையும் உயர்த்தியது.
நத்தம் காலனி வன்முறை தாக்குதலுக்குப் பிறகு, தமிழக அரசியலில் ஓரங்கட்டப்பட்டுவிடும் அபாயத்தை தவிர்த்திட ‘அனைத்து சமுதாய பேரியக்கம்’ என்ற பெயரில் பிற்பட்டோர் அணிதிரட்டலுக்கு ராமதாஸ் முயன்றார்; முக்குலத்தோர் தரப்பில் பி.டி.அரசக்குமார், வெள்ளாள கவுண்டர் தரப்பில் ஜிகே நாகராஜன், செங்குந்தர்-பிள்ளைமார் தரப்பில் கே.ராஜன், யாதவர் தரப்பில் டி.தேவநாதன் என வானவில் அணிசேர்க்கைக்கு ஆதரவு திரட்டினார்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு திருத்தம், காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதலை கட்டாயமாக்குதல், இந்து திருமண சட்டத்தை திருத்துதல் என பல்வேறு பிற்போக்கு கோரிக்கைகளோடு ராமதாஸ் வலம் வந்தார். அனைத்து சமுதாய பேரியக்கம் வெற்றி பெறவில்லை எனினும், விடுதலை சிறுத்தைகளை குறிவைத்து, காதல் திருமணங்கள்-கட்டப்பஞ்சாயத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் பெரிதும் எடுபட்டது. வன்னியர் அல்லாத பிற்பட்டோரும் விடுதலை சிறுத்தைகளை முழுமையாக வெறுத்தனர். வன்னியர்களைக் கடந்து பிற பிற்பட்டோர் ஆதரவும் பாமகவிற்கு கிட்டியது. எனவேதான் தருமபுரியில் 42.51% வாக்குகளை பாமக பெற முடிந்தது.
அரூர் தொகுதியில் அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள் 78,185 (பாமகவிற்கு 51,558), மலையாளி பழங்குடியினர், தலித்துகளில் அருந்ததியர் மற்றும் வெள்ளாள கவுண்டர்கள் ஆதரவு, அடித்தளம் மாறாமலிருப்பதை சுட்டிக் காட்டுகிறது. எனினும், வன்னியர் வாக்கு வங்கியை உறுதிபடுத்த, ‘தலித்துகளை தாக்கி கலவரத்தை உருவாக்குதல்’ என்ற யுக்தியில், பாமக தருமபுரியில் வெற்றி பெற்றுவிட்டது. பாமக தனது அரசியல் சரிவிலிருந்து தப்பிப் பிழைத்திருக்கிறது. ஆனால், இவ்வெற்றி சனநாயக இயக்கத்திற்கு மிகப் பெரிய சரிவு.
ஆட்டங் கண்ட அதிகாரபூர்வ இடதுசாரிகளின் அடித்தளம்
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிற பென்னாகரம்-சிபிஅய் சட்டமன்ற உறுப்பிரையும், அரூர்-சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரையும் கொண்டுள்ளது. இரு கட்சிகளும் 80,000 வெகுமக்கள் உறுப்பினர்கள், 5,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கொண்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக சிபிஅய், சிபிஎம் அறிவித்தன; பிரச்சாரமும் செய்தன, இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இயக்கங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் பிஎஸ்பி வேட்பாளரானார்; நூற்றுக்கணக்கான தலித் காலனிகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால், தலித் எழுச்சியின் பிரதிநிதியாகவும், ஒரே தலித் வேட்பாளராகவும் இருந்த அவர் 8180 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ‘பிஎஸ்பிக்கு தலித் வாக்குகள் போகாமலிருக்குமாறு விசிக பார்த்துக் கொண்டது’ என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும், இடதுசாரிகள் அடித்தளம் என்னவானது?
பிஎஸ்பிக்கு கடந்த பல தேர்தல்களில் தருமபுரியில் 6000 வாக்குகள் வரை கிடைத்திருக்கின்றன. பிஎஸ்பிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அரூர் தொகுதியில் தான் இம்முறையும் கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதிகாரபூர்வ கம்யூனிஸ்ட்களுக்கு இருப்பதாக கூறப்படும் வாக்குகள் பிஎஸ்பிக்கு மாறவில்லை. சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மூலம் தலித் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனினும், தருமபுரி சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டத்தில், பிஎஸ்பியை ஆதரிப்பது கடுமையாக எதிர்க்கப்பட்டது. சிபிஅய் பென்னாகரத்தில் இருவேறு கூட்டங்களை கூட்டியது. ஒரு கூட்டத்தில் பாமகவிற்கு ஆதரவாக வாக்களிக்கவும், மற்றொரு கூட்டத்தில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்கவும் வழிகாட்டியதாக சொல்லப்படுகிறது. கட்சி முடிவை அமல்படுத்த முடியாத நிலையில் இடதுசாரி தலைவர்கள் தடுமாறிட, அவர்களின் அடித்தளம் ஆட்டங்கண்டு பாமகவிற்கும் அதிமுகவிற்கும் வாக்களிக்க சென்றுவிட்டது அபாய அறிவிப்பாகும். சாதிகளைக் கடந்து தலித்-வன்னியர் உழைக்கும் மக்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதிலும் அதிகாரபூர்வ இடதுசாரிகள் தவறிவிட்டனர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
தருமபுரியில் பாமக தலைமையில் சாதியவாதம் தலைதூக்கியிருப்பதும், ஆளும் அதிமுக பின்னால் தலித்துகள் மாறியிருப்பதும், இடதுசாரி, சனநாயக, தலித் இயக்கங்களுக்கு பெரும்பின்னடைவே. ஆழமான பரிசீலனைக்கும், தவறுகளை களைந்து முன்னேறவும் அனைவரும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.