COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

குடியிருப்புப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

சேலத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களை சேர்ந்தவர்களுக்கு குடியிருப்பு பட்டா மற்றும் நியாயமான தீர்க்க வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், கண்டுகொள்ளாத அரசு நிர்வாகத்தை கண்டித்தும் 23.06.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கட்சி மாநிலக்கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன், AICCTU மாவட்டச் செயலாளர் தோழர் வேல்முருகன் கண்டன உரையாற்றினார்கள்.

 பழங்குடி மக்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை மறுப்பதுடன் அவர்களையும் அனைத்து மக்களையும் சுங்கவரி செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் கட்டுமான நிறுவனங்களை கண்டித்தும் அரசின் அலட்சியத்தைக் கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஏற்காடு கிளை 20.06.2014 அன்று சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர் கதிரவன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன், அகில இந்திய விவசாயிகள் மகாசபா மாவட்டச் செயலாளர் அய்யந்துரை கண்டன உரையாற்றினர்.

Search