2003ல் அய்க்கிய அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. 2003 ஏப்ரலில்
ஆக்கிரமிப்பு படைகளின் தற்காலிக அரசாங்கம் நியமிக்கப்பட்டது. 2003
டிசம்பரில் சதாம் பிடிபட்டார். 2004ல் ஈராக் இடைக்கால அரசாங்கம்
நியமிக்கப்பட்டது. 2005ல் தேர்தல்கள் நடத்தப்பட்டு 2006ல் மாலிகி
பொறுப்பேற்றார்.
மாலிகி, 2006ல் அய்க்கிய அமெரிக்கா ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்றவர். 2010லும் ஈரானும் அய்க்கிய அமெரிக்காவும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பிரதமர். 2014 ஏப்ரலில் நடந்த தேர்தல்களில் மாலிகி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 2006ல் இருந்து இரண்டு முறை பிரதமராக இருந்து மூன்றாவது முறையும் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கும் மாலிகி வெளியேற வேண்டும் என அய்க்கிய அமெரிக்கா சொல்கிறது.
ஈராக்கின் எண்ணெய்க்காகவே ஈராக் மீது அய்க்கிய அமெரிக்கா போர் தொடுத்தது. எக் சான் மொபில், பிபி, ஷெல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஈராக் எண்ணெய்யில் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த எண்ணெய் வளம் மீது எப்போதும் அய்க்கிய அமெரிக்காவுக்கு கட்டுப்பாடு வேண்டும். அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மத்தியில் ஒற்றுமையோ உறவோ ஏற்பட்டால் அது அந்தக் கட்டுப்பாட்டுக்கு கேடு விளைவிக்கக் கூடும். பிராந்தியத்தில் துணை மேலாதிக்க சக்தியாக செயல்படுகிற இஸ்ரேலுக்கு எதிராகவும் இந்த நாடுகள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது. எனவே இந்த நாடுகள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டுவிடாமல் இருப்பதை அல்லது மோதல் நிலை இருப்பதை அய்க்கிய அமெரிக்கா உறுதி செய்து கொள்ள வேண்டும். ஈராக் எதிர்கொள்கிற நெருக்கடியை ஒரு பரந்த பொருளில் இப்படிப் பார்க்கலாம்.
ஆனால், ஒரு சிக்கலான சூழல் அங்கு நிலவுகிறது. கலகத்தில் ஈடுபட்டுள்ள, சன்னி பிரிவினர் மேலோங்கி இருக்கும், ஈராக் மற்றும் சிரிய இசுலாமிய அரசை (அய்எஸ்அய்எஸ்) அய்க்கிய அமெரிக்கா தூண்டிவிட்டுள்ளது என தட்டையாக சொல்ல முடியாது. சிரிய அரசுக்கெதிரான போராட்டத்தில் இறங்கியவர்களை அய்க்கிய அமெரிக்கா தூண்டிவிட்டதுபோல் இங்கு நடக்கவில்லை. ஆயினும் அய்க்கிய அமெரிக்கக் கூட்டாளிகளான சவுதி அரேபியாவும் கத்தாரும் சன்னி ஜிகாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. பிராந்தியத்தில் அய்க்கிய அமெரிக்க நலன்கள் அய்க்கிய அமெரிக்காவின் நேரடித் தலையீடு இன்றியே பாதுகாக்கப்படுகின்றன. ஷியா பிரிவைச் சேர்ந்த மாலிகி ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் நியமித்தார். அரசுக் கட்டுப்பாடு அனைத்தும் ஷியா பிரிவினர் கட்டுப்பாட்டில் இருந்தது. சன்னி பிரிவினர் எதிர்ப்புக்கு இது முக்கிய காரணமாக இருந்தது.
ஈராக்கில் சன்னி, ஷியா, குர்த் பிரிவினருக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. 2003 ஈராக் போரில் ஈடுபட்ட ஒருவர், அய்க்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பால் மதச்சார்பற்ற நாடாக இருந்த ஈராக் ஸ்திரத்தன்மை இழந்தது, அய்க்கிய அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையும் திட்டமிட்டு பிரிவினைவாத பிளவுகளை உருவாக்கின, அவை உருவாக்காவிட்டால் அதுபோன்ற பிளவுகள் ஈராக்கில் உருவாகியிருக்காது, இன்று நாம் அதன் விளைவுகளைப் பார்க்கிறோம், ஈராக் மக்கள் அதற்கான விலையை தந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.
கீழை நாடுகள், அவற்றின் நாகரிகம் ஆகியவை பின்தங்கியவை, முரட்டுத்தனமானவை, மேலை நாடுகள், முன்னேறியவை, நாகரிகமானவை என, வழமையான மேலை தேசப்பார்வை (ஆக்சிடென்டல் வ்யூ) கருதுகிறது. அந்தப் பார்வையில் இருந்து மத்திய கிழக்கில் வடக்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் மொத்த விவகாரங்களையும் சன்னி, ஷியா பிரிவனை, வஹாபி அடிப்படைவாதம் என்று சுருக்கி விளக்குகிறது. சன்னி, ஷியா வேறுபாடுகள், வஹாபி அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கு மிகையழுத்தம் தந்து, அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் அவற்றை எப்படி தொடர்ந்து தன் வசதிக்கேற்ப பயன்படுத்துகிறது என்பதை காணாமல் விடுவது பெரும் அரசியல் தவறாகும்.
ஈராக், சிரியா நாடுகளின் எல்லைகளின் இரண்டு பக்கங்களிலும் இசுலாமிய பகுதிகளை நிறுவப் போவதாகச் சொல்லும் அய்எஸ்அய்எஸ் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள், ஈராக்கின் மொசூல், பைஜி, திக்ரித் ஆகிய முக்கிய நகரங்கள் வந்துவிட்டன. அங்குள்ள ஷியா பிரிவு மக்கள் வெளியேறுகிறார்கள். பைஜியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அய்எஸ்அய்எஸ் அறிவித்துள்ளது. பாக்தாதுக்கு ஒரு மணி நேர பயண தொலைவில், எண்ணெய் வயல்கள் உள்ள பகுதிகளையும் அய்எஸ்அய்எஸ் படைகள் ஆக்கிரமித்துவிட்டன. சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜிகாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
அய்எஸ்அய்எஸ் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தன்னாட்சி குர்த் பகுதிகளுக்கு மக்கள் செல்கிறார்கள். 3,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஈராக் பாடி கவுண்ட் என்ற அமைப்பு சொல்கிறது. அய்நா கணக்குப்படி சாமான்யர்கள் மற்றும் ஈராக் ராணுவத்தினர் என போர் துவங்கிய 17 நாட்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,075. ஜ÷ன் 25 அன்று அய்க்கிய அமெரிக்க மற்றும் ஈராக் ராணுவ அதிகாரிகள், ஈராக்கில் உள்ள சன்னி ஜிஹாதிகள் தளங்கள் மீது சிரிய போர் விமானங்கள் குண்டு வீசியதாக உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானின் கண்காணிப்பு விமானங்களும் ஈராக்குக்கு ஆதரவாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஈரான், ஈராக்கின் ஆளும் ஷியா பிரிவை ஆதரிக்கிறது. ஈராக்கும் ஈரான் செல்வாக்குக்கு இடம் தருகிறது. 2011ல், 3 லட்சம் அய்க்கிய அமெரிக்க படைத்துருப்புக்களை ஈராக்கில் நிறுத்தக் கூடிய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாலிகி மறுத்து விட்டார்.
ஈரான் ஆதரவு இதற்குக் காரணம். ஈரானின் இது போன்ற செல்வாக்கை மட்டுப்படுத்துவது அய்க்கிய அமெரிக்காவின், மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களுக்கு அவசியம். சிரியா மீதும் ஈரான் மீதும் போர் தொடுக்கத் தயாராக இருந்த அய்க்கிய அமெரிக்கா, தற்போதைய ஈராக் நெருக்கடியில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாலிகியை பதவி விலகச் சொல்வது, அல்லது சன்னி பிரிவினருக்கும் அரசாங்கத்தில் இடம் தர வேண்டும் என்று சொல்வது, இப்படி ஏதாவது நடந்தால் மட்டுமே உதவிக்கு ராணுவத்தை அனுப்புவதாகச் சொல்வது ஆகியவற்றின் பின் இருக்கிற நோக்கம், ஈராக் மீது ஈரான் கொண்டுள்ள செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதுதான். அய்க்கிய அமெரிக்காவில் மற்றுமொரு ஈராக் போருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அய்க்கிய அமெரிக்க ராணுவ அறிவுரையாளர்கள் 300 பேரை அய்க்கிய அமெரிக்கா ஈராக்குக்கு உடனடி உதவிக்கென அனுப்பியுள்ளது.
நியுயார்க் டைம்ஸ் இதழில் ஜ÷ன் 14 அன்று ‘ஈராக்குக்கான அய்ந்து கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள தாமஸ் ஃப்ரீட்மேன், ‘ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுக்க ஓர் அணு ஒப்பந்தம் போட வேண்டியுள்ளது; எனவே, ஈரானின் சன்னி எதிரிகளுக்கு நாம் எந்த அளவுக்கு உதவ வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஈரான் மீது இன்னும் தடைகள் உள்ளன. சிரியா, லெபனான் மற்றும் ஈராக்கில் ஈரான் படைகள் போரில் இருக்கின்றன. நல்லது. அமெரிக்காவுக்கு ஆதாயம் என்று நாம் சொல்லலாம்’ என்கிறார். ‘தெற்கு ஷியா, மய்ய சன்னி, வடக்கு குர்த் என்று ஈராக்கை மூன்று நாடுகளாக பிரித்துவிடுவதை நோக்கிச் செல்வதுதான் ஈராக்கின் வரலாற்றுரீதியான பிழையைத் திருத்த ஒரே வழி’ என்று அமெரிக்காவில் உள்ள அயலுறவுகள் கவுன்சிலின் முன்னாள் தலைவர் லெஸ்லி கெல்ப் சொல்கிறார். அதாவது, ஈராக் சந்திக்கிற நெருக்கடி, பிரிவினைவாத சக்திகளால் பிளவுபடுவது அய்க்கிய அமெரிக்காவுக்கு நல்லது.
அய்க்கிய அமெரிக்காவுக்கு எது நல்லதோ, அது உலக மக்களுக்கு தீயது. ஈராக் மீது அய்க்கிய அமெரிக்கா நடத்திய போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். 40 லட்சம் பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டனர்.
ஈராக்கின் உள்கட்டுமான வசதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது மீண்டும் அய்க்கிய அமெரிக்க நலன்கள் ஈராக் மக்களை வேட்டையாடுகின்றன. ஈராக்கில் வேலை செய்யும் இந்தியர்கள் 10,000 - 15,000 பேர் பாதுகாப்பான பகுதிகளில் இருப்பதாகவும் அய்எஸ்அய்எஸ் கைப்பற்றியுள்ள மொசூல் மற்றும் திக்ரித் நகரங்களில் 39 கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் 46 செவிலியர்கள் இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. அவர்கள் வெறுங்கையுடன் ஊர் திரும்பத் தயாராக இல்லை. 4 முதல் 6 மாதங்கள் சம்பள பாக்கியை பெற்றுக் கொண்டு திரும்ப வேண்டும் என்கிறார்கள். கடவுச் சீட்டு, பிற ஆவணங்கள் அவர்களுக்கு வேலை அளித்தவர்களிடம் உள்ளன.
முதல் உலகப்போர் துவங்கி நூறாண்டுகள் நிறைவுறுகிறபோது, அன்று ஒரு பெரிய சக்தியாக இல்லாத அய்க்கிய அமெரிக்கா இன்று உலக நாடுகள் மீதான மேலாதிக்கத்துக்கு தொடர்ந்து எடுக்கும் பல்விதமான முயற்சிகளுக்கு இன்று ஈராக் மக்களும் உலக மக்களும் பலியாகிறார்கள்.