COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

டாஸ்மாக் கடைகளை மூடு !

டாஸ்மாக் மதுவால், 50 பெண்கள் கணவனை இழந்த கச்சிராயநத்தம் கிராமத்தில் உள்ள சாராயக் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு, வட்டியில்லாக் கடன் கேட்டும், அரசு உயர்நிலைப்பள்ளி, 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரியும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 300 நாட்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ.300 கூலி வழங்கக் கோரியும் ஜெயங்கொண்டத்தில் ஜூலை 15 அன்று, இகக(மாலெ), புஇக, அவிதொச ஆர்ப்பாட்டம் நடத்தின.

அங்குள்ள ஆரூரான் எரிசாராய ஆலையை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் ஆண்டிமடம் ஒன்றியம் பெரிய கருக்கை கிராமத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட கூலி பட்டுவாடா செய்யாததைக் கண்டித்தும், பெரிய கருக்கையில் தனியார் வசம் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் வீரனார் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தியும் தோழர்கள் அய்யப்பன் மற்றும் ஜெகந்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) வட்ட அமைப்பாளர் தோழர் செங்குட்டுவன், மாவட்ட அமைப்பாளர் தோழர் சாகுல் ஹமீது, தோழர் கவ்னர் உரையாற்றினர்.



Search