மவுலிவாக்கம், உப்பரப்பாளையம் விபத்துக்களில் பலியான கட்டுமான
தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்
சட்டத்தை கறாராக அமல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
07.07.2014 அன்று அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் கே.பழனிவேல், நிர்வாகிகள்
கே.வேணுகோபால், எஸ்.பாலகிருஷ்ணன், ஆர்.மோகன். உரையாற்றினர். டிரில் ஜிக்
புஷ்ஷிங், எம்.கே.பி ஜாய் இன்ஜினியரிங், சாய்மீரா ஆலை தொழிலாளர்கள்
பங்கேற்றனர். மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் கண்டன
உரையாற்றினார்.