தமிழகம் முழுவதும், தலித் மக்கள் மீது, அவர்கள் உடைமைகள் மீது
தொடர்ந்து தாக்குதல்கள் நடக்கின்றன. தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீது
நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர்
பாலசுந்தரம் தலைமையிலான உண்மை அறியும் குழு நெல்லை, தூத்துக்குடி,
விருதுநகர் மாவட்டங்களில் விசாரணை, ஆய்வு மேற்கொண்டது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள உடப்பன்குளத்தில் ஜூன் 1 அன்று 3 தலித்துகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். ஜூன் 4 அன்று தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் உடமைகள் சூûறாயாடப்பட்டன. மூன்று தலித்துகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் தலித் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். ஈ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் கோவில் விழாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, தங்கள் குழந்தைகளும் தாக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள பள்ளியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்று விட்டார்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள சாத்தமங்கலத்தில் கிராமக் கோவில் திருவிழாவில் தலித் மக்களை அனுமதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். கோவிலில், பொதுக்குழாயில், ரேசன்கடையில், பள்ளிக்கூடத்தில், பொதுப் பாதையில், சுடுகாட்டில் என பொது இடங்களில் தலித் மக்கள் புழங்குவதைத் தடுப்பதும் அவர்கள் நாகரிகமாக, கவுரவமாக, பொருளாதார அந்தஸ்துடன் வாழ்வதை சீர்குலைப்பதுமான நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
உடப்பன்குளம்
சங்கரன்கோவில், உடப்பன்குளம் கிராமத்தில் யாதவர்கள், நாயக்கர்கள், தலித்துகள் வசிக்கிறார்கள். தலித்துகள் வீடுகள் 30 வீடுகள் மட்டுமே உள்ளன. அதில் 20 வீடுகளில் மட்டுமே ஆட்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலும் கூலி வேலையையும் குளத்து வேலையையும் (ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ்) நம்பித்தான் இருக்கிறார்கள். யாதவர்களும் இதே வேலைகளைச் செய்கிறார்கள். சமீப காலங்கள் வரை நாயக்கர் வயல்களில் அல்லது மற்ற இடங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் நான்தான் கோனார் பெண்களை தேவைக்கேற்ப அழைத்துச் செல்வேன், ஆனால், தற்போது அவர்கள் ஆடுகள், மாடுகள் வளர்ப்பு, வட்டித் தொழில் மூலம் வசதியான நிலைக்கு வந்துவிட்டனர் என்கிறார் தலித் பிரிவைச் சேர்ந்த 55 வயது மாரியம்மாள்.
தலித்துகள் வீடுகளும் யாதவர்கள் வீடுகளும் அருகருகே உள்ளன. தலித் மக்களுக்கு ஒரே தெருதான். அந்த ஒரு தெரு வழியாகத் தான் அவர்கள் கடைத் தெருவிற்கும் சுடுகாட்டிற்கும் செல்ல வேண்டும். ஊருக்குள் வரப் போக முடியும். யாதவர்கள் வீடுகளுக்குப் பின்புறத்தில்தான் அந்தத் தெரு இருக்கிறது. தற்போது யாதவர்கள் அந்தத் தெருவை நோக்கி முன்வாசல் வைத்து தங்கள் வீட்டைக் கட்டிக் கொண்டுள்ளார்கள். அதனால் அவ்வழியாக தலித்துகள் புழங்குவதைத் தடை செய்யப் பார்க்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு தலித் சமூகத்தில் இறந்துபோன ஒருவரின் உடலை சுடுகாட்டிற்கு வழக்கமான தெரு வழியே எடுத்துச் சென்றுள்ளார்கள். தங்கள் வீட்டை தற்போது தலித் மக்கள் தெருவைப் பார்த்து முன்வாசல் கட்டியுள்ள வீட்டில் இருந்த யாதவர் சமூகத்தைச் சேர்ந்த பெண், இறந்தவர் உடலை எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றவர்கள் மீது கழுநீரை ஊற்றி அந்த வழியாகச் செல்லக் கூடாது என்று சொல்லியுள்ளார். ஆண்டாண்டு காலமாக தலித் மக்கள் அவ்வழியாகத்தான் செல்கிறார்கள்.
வேறு வழியும் கிடையாது. இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுக் குழாயில் தலித்துகள் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்று தகராறு செய்துள்ளார்கள் யாதவர்கள். தேர்தல் சமயத்தில் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் அங்கு கொடி ஏற்ற வந்துள்ளார்கள். அதற்கு யாதவர்கள் தரப்பில் எதிர்ப்பு இருந்துள்ளது.
ஜூன் 1அன்று, கோயமுத்தூரில் வசிக்கும், உடப்பன்குளத்தைச் சேர்ந்த முருகன் (40), வேணுகோபால்(42) இருவரும் சங்கரன் கோவிலில் தங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தனர். பின்னர், உடப்பன்குளத்தில் தன் அண்ணன் காளிராஜைப் பார்க்க முருகனும் அவருடன் வேணுகோபாலும் வந்துள்ளார்கள். பின்னர், அவர்கள் கோயம்புத்தூருக்குத் திரும்பிச் செல்ல சங்கரன்கோவிலில் விடுவதற்காக காளிராஜ் அவர்கள் இருவரையும் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். ஊர் பக்கத்திலேயே அவர்கள் மூவரையும் வழிமறித்து வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.
தற்போது உடப்பன்குளத்தில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. போலீஸôர் இறந்த காளிராஜின் மனைவி தனத்திடமும் மற்ற தலித் மக்களிடமும் யார் வந்தாலும் எதுவும் கூறக் கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று மிரட்டுகிறார்கள். அரசாங்கம் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் கொடுத்ததோடு சரி. அதை வாங்க மறுத்த காளிராஜ் மனைவியைச் சமாதானப்படுத்தி பணத்தை வாங்கச் வைப்பதற்காக மட்டுமே சங்கரன்கோவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி வந்து சென்றுள்ளார். அம்மக்களின் கவுரவம், வாழ்வுரிமை, பாதுகாப்பு பற்றி அவர் கவலைப்படவேயில்லை. தற்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தி முருகேன் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
கடந்த 1 மாத காலமாக உடப்பன்குளம் தலித் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும் சாப்பாட்டிற்கு அரிசிகூட இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவராக உள்ள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் சத்தமில்லாமல் வெளியூர் சென்றுவிட்டார். யாதவர் சமூகத்தைச் சேர்ந்த துணைத்தலைவர் குருசாமிதான் இப்போது எல்லாம். தங்கள் கையில் காசு இல்லை, குளத்து வேலையைத் தாருங்கள் என்று தலித் மக்கள் கேட்டதற்கு, குளத்து வேலை தொடங்கினால் சாதி மோதல் ஏற்படும் என்று சொல்லி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியையே நிறுத்தி வைத்துள்ளார் குருசாமி. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வந்தது. தனி தண்ணீர்க் குழாய் வைத்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். உடப்பன்குளத்தின் தலித் மக்களை அவர்கள் குடியிருக்கும் இடத்தைவிட்டு அகற்றி அவ்விடத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்துடன் தலித்துகள் உரிமை மறுப்பும், தொடர்ந்து மூவர் படுகொலையும் நடந்துள்ளது.
உடப்பன்குளத்தில் இருப்பதே 20 தலித் குடும்பங்கள்தான். அவர்கள் உணவுக்கு ஏற்பாடு செய்ய அதிமுக அரசு தயாராக இல்லை. அம்மக்களுக்கு உடனடியாக உணவுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணய் இதரப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் வேலைவாய்ப்புக்கு உடன் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் 20 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
கூமாப்பட்டி
கூமாப்பட்டி, ராமசாமிபுரத்தில் கோவில் கொடைவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ், அத்தகராறுக்கு சம்பந்தமே இல்லாத பாலமுருகனையும் அழைத்து விசாரித்து நடுரோட்டில் பட்டப் பகலில் அனைவர் முன்னிலையிலும் அடித்ததில் அந்த இடத்திலேயே இறந்துபோய்விட்டார். பாலமுருகன்(27) தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை ராமசந்திரன். அதிமுகவின் கிளைச் செயலாளர். பாலமுருகனுக்கு 7,8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். 2 வயதில் ஒரு மகன். இதுவரை எந்த நிவாரணமும் அக்குடும்பத்திற்குக் கொடுக்கப்படவில்லை. கோவில் தகராறில் ஏற்பட்ட மோதலில் பாலமுருகன் இறந்துவிட்டதாகவும் ஊர் மக்கள் காவல்துறையினரை அடித்துக் தாக்கியதாகவும் காவல்துறை கதையை மாற்றிவிட்டிருக்கிறது. காவல்துறையினரைத் தாக்கியதாகச் சொல்லி ராமசந்திரன், ஊர் தலைவர்கள் உட்பட 50 பேர் மீது பொய்யாக கொலை முயற்சி வழக்கு போட்டுள்ளார்.
ஊர்க்காரர்களை வைத்து ராமசந்திரனிடம், உன் மகனின் மரணப் பிரச்சினையைப் பெரிதாக்காதே. போலீஸிடம் பேசி எங்கள் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்க வை என்று நிர்பந்திக்கச் செய்து பாலமுருகனை அடித்த காவலரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது காவல்துறை. பாலமுருகனை அடித்துக் கொன்ற காவலர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னும் அந்தக் காவலர் கவலையே இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதிமுக விருதுநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமாகிய ராஜேந்திர பாலாஜியிடம் ராமசந்திரன் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையோ நிவாரணமோ இல்லை. “அமைச்சர் வருவதாகச் சொன்னார். பக்கத்தூர் கோவில் திருவிழாவிற்குச் செல்வதால் துக்க வீட்டிற்குச் சென்றுவிட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று வரவில்லை” என்கிறார் அதிமுக கிளைச் செயலாளர் ராமச்சந்திரன். ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தலித் என்றால் இரண்டாம்பட்சம்தான்.
காவல்துறையினர் இயற்கை மரணமுற்றாலே 3 லட்சம் வழங்கும் முதல்வர், காவலரால் அடித்துக் கொல்லப்பட்ட பாலமுருகனுக்கு அதுவும் அவர் கட்சியின் கிளைச் செயலாளர் மகன் குடும்பத்திற்கு இதுவரை எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கதறிக் கொண்டிருக்கும் பாலமுருகனின் மனைவிக்கு உடனடியாக அரசு வேலையும் 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ராமசந்திரன் உள்ளிட்ட ஊர் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவும் பாலமுருகனை அடித்துக் கொன்ற காவலரை பணி நீக்கம் செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
ஈ. குமாரலிங்கபுரம்
ஈ. குமாரலிங்கபுரம் பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளி. அது ஆதிக்க சாதியினர் ஆதிக்கத்தில் உள்ளது அதனால், கோவில் விழாவைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் தலித் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அச்சத்தின் காரணமாக தலித் குழந்தைகளின் பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்றுள்ளார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் கொடுக்கிறேன், மடிக்கணினி கொடுக்கிறேன், முட்டை கொடுக்கிறேன், முளைவிட்ட பயிறு கொடுக்கிறேன், கல்விக்காக பல கோடி செலவு செய்கிறேன் என்று பெருமை பேசும் ஜெயலலிதா ஆட்சியில் பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை. இரண்டாண்டிற்கு முன்னால் மதுரை மாவட்டத்திலும் தலித் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லி மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றார்கள். தலித் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் அவர்களுக்கு ஏற்படும் கவுரவக் குறைவு, பாதுகாப்பின்மையைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்ற பெற்றோர்களில் குழந்தைகளை அதே பள்ளியில் சேர்த்து பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மணக்கரை
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் ஜ÷ன் 4 அன்று தாக்குதலுக்குள்ளான தலித்துகள் மூன்றுபேரும் இன்னும் மருத்துவச் சிகிச்சையில்தான் உள்ளார்கள். ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு இதுவரை அரசு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை. வீடுகள், பொருள்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்ட நிலையில், அவர்களுக்கு பெயருக்கு ரூ.2000, 3000 என்று மட்டுமே வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் இழந்துள்ளார்கள். முழுமையான நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். படுகாயமுற்ற மூவருக்கும் தரமான உயர் சிகிச்சையும் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் 60 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. தலித் மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் அதிமுக அரசும் முதலமைச்சரும் கை கட்டி மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால்தான் தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இது ஜெயலலிதா தலித் மக்களுக்கு இழைக்கும் துரோகம். சட்டமன்றத்தில், போராடுகிற தலித் மக்களை வன்முறையாளர்கள், சமூக விரோதிகள் என்று பேசும் ஜெயலலிதா, தன் உடன் பிறவாச் சகோதரியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசு நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்த அனுமதிப்பது, அவர்கள் கொண்டாடும் சமுதாயத் தலைவருக்கு அய்ந்து கோடியில் தங்கக் கவசம் அணிவிப்பது போன்ற தன் ஒரு தலைப்பட்ச செயல்களால், சாதிவெறி பிடித்த ஆதிக்க சக்திகள் மேலும் மேலும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்த ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக ஆகியவை தலித் மக்கள் தாக்கப்படும்போது மட்டும் அமைதி காப்பது, கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி சம்பவங்களில் ஈடுபட்ட காவல்துறை, நிர்வாகத்துறை உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படாதது, அம்பேத்கார் படத்திற்குக் கீழ் உட்கார மாட்டேன் என்று சொல்லும் நீதிபதி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குப் போடுவது, அவ்வழக்கை அனுமதிக்கும் நீதிமன்றம் என அரசாங்கம், கட்சிகள், நீதிமன்றம், நிர்வாகம், காவல்துறை எல்லாம் தலித் விரோத மனநிலையை, பார்வையைக் கொண்டிருப்பதுதான் தலித் மக்களுக்கு எதிராக தொடரும் சமூக அநீதிக்கு மூல காரணம்.
தலித் மக்களுக்குப் பொதுவாழ்வில் அவர்களுக்குள்ள உரிமை, பாதுகாப்பு, அச்சமற்ற சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது அரசின் உடனடி கடமை. தலித் மக்கள் மீது தாக்குதல், கொலை நடக்கும்போது அற்ப நிவாரணத் தொகை வழங்குவது, போலீஸ் பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மக்களை மேலும் அச்சுறுத்துவது இவைகள்தான் நடக்கின்றன. மாறாக, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்கும் வகையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்துவது, உண்மையான குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வழங்குவது, அதற்காக மாவட்டம் தோறும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் ஏற்படுத்தும் விதத்தில் நில உரிமை உள்ளிட்ட நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்வது, சமூகப் பொது இடங்கள், அரசியல், அரசாங்கம் ஆகியவற்றில் தலித்துகள் மீதான பாராபட்சங்களுக்கும் அநீதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவர்களுக்குரிய சமபங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் மீது முற்போக்கு, இடதுசாரி, ஜனநாயக இயக்கங்கள் ஆதரவுடன் மாநிலந் தழுவிய அளவில் தொடர் இயக்கங்கள் நடத்த இகக(மாலெ) முடிவு செய்துள்ளது. முதற்கட்ட இயக்கம் தாமிரபரணி படுகொலை தினமான ஜூலை 23ல் தொடங்கப்படும்.
(இந்த உண்மை அறியும் குழுவில் இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.சங்கரபாண்டியன், ஜி.ரமேஷ், அந்தோணிமுத்து, விருதுநகர், மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆவுடையப்பன், மதிவாணன், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக நெல்லை மாவட்டத் தலைவர் தோழர் அன்புச்செல்வி, நெல்லை மாவட்ட ஜனநாயக பீடித் தொழிலாளர் சங்கப் பொதுச்செயலாளர் தோழர் கே.கணேசன், விருதுநகர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தோழர் கூடலிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்).