COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

நோக்கியா, நோக்கியா துணை நிறுவனத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பாதுகாக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம்

நோக்கியா, மற்றும் நோக்கியா துணை நிறுவனங்களில் உள்ள 30 வயதுக்குட்பட்ட  10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விருப்ப ஓய்வில் செல்ல நிர்ப்பந்திக்கப்படும் அவல நிலையைக் கண்டித்து, தமிழ்நாட்டின் இளம்தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 23.06.2014 அன்று அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஜூன் 25 அன்று திருபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் சங்க தலைவர் தோழர் ராஜேஷ் தலைமை தாங்கினார். AICCTU மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் கே.பாரதி, AICCTU திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் க.ராமன், மாநிலச் செயலாளர் தோழர் இரணியப்பன், சென்னை மாவட்ட கட்சி செயலாளர் தோழர் எஸ்.சேகர், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் ஆர்.மோகன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ஜி.முனுசாமி, புரட்சிகர இளைஞர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்கள் செந்தில்ராஜா, பாலச்சந்திரன், குணசேகரன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சுரேஷ் கண்டன உரையாற்றினர். ஏசியன் பெயின்ட்ஸ், டென்னகோ, மியாங்கோ, நிப்பான் எக்ஸ்பிரஸ், ஓஎல்ஜி, ஜீஈடோபாஸ் டூல்ஸ் ஆலைகளின் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Search