‘துரிதமாக வளர்ந்து வரும் பெரிய நகரங்களின் சுற்று
வட்டாரங்களில் இருக்கும் நிலங்களில் ஊக வணிகம் செய்வது நிதிமூலதனத்துக்குக்
குறிப்பிடத்தக்க அளவுக்கு லாபகரமான செயல்பாடாக அமைகிறது. இங்கு வங்கிகளின்
ஏகபோகம், நிலவாடகை ஏகபோகத்துடனும் போக்குவரத்துச் சாதனங்களது
ஏகபோகத்துடனும் ஒன்றிணைகிறது; ஏனெனில், நில விலையின் ஏற்றமும் நிலத்தைக்
கூறு பிரித்து லாபகரமாய் விற்பதற்கான சாத்தியப்பாடும் பிறவும் நகரின்
மய்யப் பகுதியுடன் இவற்றை இணைக்கும் நல்ல போக்குவரத்துச் சாதனங்களையே
முக்கியமாகப் பொறுத்திருக்கின்றன........... ...........நாசத்துக்கு
உள்ளாகும் சிறு உடைமையாளர்களும் தொழிலாளர்களும் இந்தப் பித்தலாட்டக்
கட்டிடக் கம்பெனிகளிடம் இருந்து ஏதும் பெற முடியாமல் போகிறது. மனைக்கட்டுப்
பட்டாக்கள், கட்டிடம் கட்டுவதற்கான உரிமைகள் முதலானவற்றில் வழங்கீட்டில்
ஆளுகை பெறுவதற்காக ‘நேர்மையான’ பெர்லின் போலீசுடனும் நிர்வாகத்துடனும்
மோசடியான பேர உடன்பாடுகளும் இப்படி மற்றும் பலவும் ஏற்படக் காண்கிறோம்’.
- லெனின், ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்சகட்டம்
லாபம் தேடி விரையும் நிதிமூலதனம், ஓரஞ்சாரங்களில் இருக்கிற உழைக்கிற மக்களை அடித்துத் தள்ளிவிட்டுச் செல்லும். அவர்கள் ஊனமாவார்கள்; உயிரிழப்பார்கள். எந்தவித குற்ற உணர்வும் இன்றி, நிதிமூலதனம் மேலும் முன்னேறிப் பாயும். மவுலிவாக்கங்கள் நிகழும் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பு லெனின் சொல்கிறார். மவுலிவாக்கத்துக்குக் காரணமான விதிமீறல் எப்படியெல்லாம் நடந்திருக்கக்கூடும் என்பது உட்படச் சொல்கிறார். ஏகாதிபத்திய, நிதிமூலதனப் பாய்ச்சலை தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தச் சாவுகளை தடுத்து நிறுத்த முடியாது.
தொழிலாளி அவன் கட்டும் மாளிகையையோ, நெய்யும் பட்டையோ, வெட்டியெடுக்கும் தங்கத்தையோ தனக்காக உருவாக்கிக் கொள்ளவில்லை, அவன் தனக்காக உருவாக்கிக் கொள்வது கூலி மட்டும்தான், அவனுக்குக் கிடைப்பதெல்லாம் நிலவறையில் ஒரு மூலை தான் என்று மார்க்ஸ் சொன்னதும் இன்று இல்லை. தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாகிவிடுகிறார்கள். உப்பரப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து செத்துக் கிடந்தவர்களிடம் ரூ.90,000 இருந்தது. அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து தங்களுக்காக உருவாக்கிய கூலி!
இந்தியாவில் உள்ள உயர்நிகர மதிப்பு தனி நபர்கள் எண்ணிக்கை 2008ல் 84,000. 2011ல் 1,25,000. 2012ல் 1,53,000. இவர்களிடம் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.35,34,000 கோடி. இவர்கள் இந்தப் பணத்தின் 26.5%அய் நிலவர்த்தகத்தில் முதலீடு செய்கிறார்கள். பிற வகையிலான முதலீடுகள் அடுத்தபடிதான். இன்னும் பலமடங்கு பெருக முனையும் இந்தப் பணம் நிலத்தின் மதிப்பை செயற்கையாக ஏற்றுகிறது. விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்றுகிறது. பழங்குடியின மக்களை அவர்களின் காடுகளில் இருந்து வெளியேற்றுகிறது. நாளை நல்ல விலை என்று சொல்லி சாதாரணர்களை ஈர்க்கிறது. அவர்களை கடனாளிகளாக்குகிறது. நிதிமூலதனம் பெருகப்பெருக, இன்னும் கூடுதல் நிலம், இன்னும் கூடுதல் ஊகவணிகம், இன்னும் கூடுதல் விற்பனை, பிறகு லாபம் என, இந்த விஷச்சுழலேணி தன் வழியெங்கும் சாமான்ய மனிதர்களின் பிணங்களை இறைத்துவிட்டுச் செல்கிறது. மதிப்பே இல்லாத நிலம் கூட ஒட்டு மொத்த ஊகவணிக பரபரப்பில் மதிப்பு உடையதாகக் காட்டப்பட்டு பணமாக்கப்படுகிறது. மிஞ்சுவது புதைசேறுதான்.
இந்தியாவில் உள்ள நிலவளத்தை இன்னும் முழுமையாக நிதிமூலதனம் கைக்கொள்ளவில்லை. சாம்பிட்ரோடா போன்றவர்கள் சூசகப் பரிந்துரைகள் செய்கிறார்கள். தபால் துறை, பிற மத்திய அரசு நிறுவனங்களிடம், அவ்வளவு நிலம் எதற்கு, பயன்படாமல் உள்ள நிலத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே என ஜெயலலிதா வெளிப்படையாகவே கேட்கிறார். ரயில்வே தனியார்மயத்தின் பின் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியமான உந்துதலாக இருக்கிறது.
ஆக, நிலவர்த்தகம், அதன் சூதாட்டங்கள், அதனால் விளையும் லாபம் மற்றும் கமிஷன் ஆகியவை ஜெயலலிதாவுக்கு ஒப்புதல் உடையவையே. அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அவர் ஒருபோதும் எடுக்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் 90% கட்டிடங்கள் விதிகளை மீறியே கட்டப்பட்டுள்ளதாக வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். திருமழிசையில் 12,000 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட தமிழக அரசுக்கு ஏற்கனவே திட்டம் உள்ளது. நகரின் மய்யத்தில் வீட்டுமனை கேட்டு எட்டு ஆண்டுகளாக காத்திருக்கும் மகாகவி பாரதி நகர் மக்களுக்கு ஓக்கியம் துரைப்பாக்கத்தில் இடம் தருவதாக தமிழக அரசு சொல்கிறது. அவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு அங்கு பல அடுக்குமாடி கட்டிடங்கள் வரலாம். பெறுவோர் பெறுவார். இழப்போர் இழப்பார்.
மவுலிவாக்கத்துப் பிறகு தமிழ்நாட்டின் தொழில்மயமாதல் மற்றும் நகர்மயமாதலை ஊனமடைதல் மற்றும் உயிரிழத்தல் என்று இனி மாற்றிச் சொல்ல வேண்டும். மவுலிவாக்கத்துக்கு முன்பும் தமிழ்நாட்டில் கட்டிட விபத்துக்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மவுலிவாக்கம் அந்த விபத்துக்களின் உச்சம். இதுவரை நடந்த விபத்துக்களில், தொழிலாளர்கள் உயரிழப்பை அலட்சியப்படுத்தி, அவை தொடர்பாக தமிழக அரசு எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு அத்தாட்சி. தமிழக மக்கள்தான் என் குடும்பம் என்று ஜெயலலிதா சொல்வது அப்பட்டமான பொய் என்பதன் நிரூபணம். மவுலிவாக்கம், தொழிலாளர் எதிர்கொள்ளும் துன்பங்களின் சமகாலத்திய உச்சபட்சக் குறியீடு.
மவுலிவாக்கம் என்றால் ஊழல். மவுலிவாக்கம் என்றால் விதிமீறல். மவுலிவாக்கம் என்றால் லாப வெறி. மவுலிவாக்கம் என்றால் கடுமையான உழைப்புச் சுரண்டல். மவுலிவாக்கம் என்றால் தொழிலாளர் உரிமை மறுப்பு. மவுலி வாக்கம் என்றால் இடம்பெயரும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மை. தொழிலாளர்களின் உயிர் மலிவாகிவிடுவது. மவுலிவாக்கம் என்றால் அரசின் குற்றமய அலட்சியம். மவுலிவாக்கம் என்றால் அரசியல்வாதி - அதிகாரி - முதலாளி முக்கூட்டு. அதிகாரம் படைத்த மனிதர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய பேரழிவு.
இதோ, உப்பரபாளையத்தில் இன்னும் ஒரு விபத்து. இன்னும் உயிரிழப்பு.
ஜெயலலிதா நினைத்திருந்தால், மவுலிவாக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் 61 கட்டுமானத் தொழிலாளர்களின் உயிரிழப்பை, உப்பரபாளையத்தில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் 11 கட்டுமானத் தொழிலாளர்களின் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழக மீனவர் நலன் காப்பதாகச் சொல்லி கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை. தொழிலாளர்கள் உயிரிழப்பு நேரக்கூடும் என்று தெரிந்தும் அதைத் தடுப்பது அவருக்கு ஒரு முன்னுரிமையாகவே இல்லை.
விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பாதுகாப்பதுதான் ஜெயலலிதாவின் முன்னுரிமையாக இருக்கிறது. தொலைக்காட்சி காமிராக்கள் முன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களைச் சந்தித்து தெலுங்கில் ஆறுதல் கூறி விட்டு, பின் ஒரு நபர் குழு, சிறப்பு புலனாய்வுக் குழு என கண்துடைப்பு நடவடிக்கைகள் அறிவித்துவிட்டு, மத்திய அரசு புகழ் பாட நகர்ந்துவிட்டார்.
மவுலிவாக்கம், உப்பரபாளையம் சம்பவங்களில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையையும் விதைக்கப் போவதில்லை. 2012ல் குன்னம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 10 வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோது ஜேப்பியார் கைது செய்யப்பட் டார். பிறகு அவர் பிணையில் வந்துவிட்டார். விட்ட வேலையை தொடர்கிறார். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது? மவுலிவாக்கத்திலும், கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்தான் சம்பிரதாய நடவடிக்கை வளையத்துக்குள் வருகிறார்கள். அதிகாரிகள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
உப்பரபாளையம் விபத்தில் சில ‘பிரமுகர்கள்’ பெயர்கள் வெளியே கசியாமல் கவனத்துடன் பார்த்துக் கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கட்டிட ஒப்பந்ததாரர், மேற்பார்வையாளர் பெயர்கள் தொடர்பான செய்திகள் முன்பின் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மவுலிவாக்கம் கட்டிடத்தில் நடந்த விதி மீறல்களை முறைப்படுத்த இரண்டு அரசாணைகள் வெளியிட்டதாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. அதிகாரிகள் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் ஒட்டுமொத்த நாசத்துக்கும் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதால் தமிழக அரசு அதிகாரிகளைப் பாதுகாக்கிறது. விபத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க முடியாது என்று சட்டமன்றத்திலும் அமைச்சர் தெளிவாக அறிவித்துவிட்டார்.
2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்பாக பல்வேறு செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிரேட்டர் சென்னையில் 100 கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்துக்களில் உயிரிழந்தார்கள் என்று அக்டோபர் 2013ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டது.
பிப்ரவரி 2012 முதல் 30 மாதங்களில் 30 பேர் கட்டுமானப் பணிகளில் உயிரிழந்துள்ளனர் என்று செப்டம்பர் 12, 2013 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. 2013ல் 17 பேர் கட்டிட விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மாதமொன்றுக்கு 10 முதல் 15 விபத்துக்கள் நடப்பதாகவும் அந்த செய்தி சொன்னது. அதற்குப் பிறகு, அக்டோபர் 15, 2013 அன்று ராயப்பேட்டையில் கட்டிட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நவம்பர் 2013ல் கும்மிடிபூண்டி அருகில் சின்ன புலியூரில் சுவர் இடிந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துக்கும் மேலாக, மவுலிவாக்கம் நடந்த பிறகு வெளியாகியுள்ள செய்தி, 2011ல் தமிழ்நாட்டில் கட்டிட விபத்துக்களில் நாளொன்றுக்கு ஒருவர் உயிரிழப்பதாக தேசிய குற்றப் பதிவு அமைப்பு சொல்வதாகச் சொல்கிறது.
மெட்ரோ ரயில் பணிகளில் தானே நேரில் பூமியைக் குடைந்து பாதை அமைப்பதுபோல் ஜெயலலிதா பேசுகிறார். அங்குள்ள இடம்பெயரும் தொழிலாளர்களின் வாழ்நிலைமை, பணிநிலைமை படுமோசம் என்ற வரையறைக்குள் கூட பொருந்துவதில்லை. சென்னையின் வளர்ச்சியைக் கட்டியெழுப்பும் அந்தத் தொழிலாளர்களும் மொத்தமாக ஊர் திரும்புவதில்லை. கை, கால்களை இழந்தோ, சில சமயம் சவப் பெட்டிகளிலோ ஊர்திரும்புகிறார்கள்.
8 ஆகஸ்ட் 2012 அன்று பச்சையப்பன் கல்லூரி அருகில் கிரேன் விபத்தில் ஒரு தொழிலாளி பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர். ஜனவரி 10, 2013 அன்று பரங்கிமலை அருகில் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயங்களுக்கு உள்ளாயினர்.
ஆக, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள், மாநிலத்துக்குள் இருந்தும் மாநிலத்துக்கு வெளியில் இருந்தும் வந்தவர்கள், எந்தவித பாதுகாப்பும் இல்லாத வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். வளமை சொட்டுச்சொட்டாக கீழே வரை வடியவே இல்லை. அதனால்தான் இந்தத் தொழிலாளர்கள் ஊரை, உறவினரை விட்டு, பிழைப்பு தேடி வெளியே வந்துள்ளனர். இந்த நிலைமைகள் பற்றிய தமிழக அரசின் கூருணர்வின்மையை கட்டுமானத் தொழிலாளர் வாரியம் வெளிப்படுத்துகிறது. அதன் விவரங்கள்படி தமிழ்நாட்டில் 2008ல் இருந்து ஒரு கட்டுமானத் தொழிலாளி கூட உயிரிழக்க வில்லை! மவுலிவாக்கத்துக்கும் நியாயம் கிடைக்காது என்பதை வாரியம் சொல்கிறது.
மவுலிவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்காக ஜெயா தொலைக்காட்சி ஜெயலலிதாவை பாராட்டிக் கொண்டிருக்கிறது. ஜ÷ன் 29 அன்று கட்டிட இடிபாடுகளை பார்க்க ஜெயலலிதா வந்தபோது, இடிபாடுகளை அகற்றும் பணி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டு, அந்தப் பணிகளில் இருந்த தொழிலாளர்களைக் கொண்டு, அவரது கார் அதிராமல் வர பாதை சரிசெய்யப்பட்டது. சுற்றும்முற்றும் கேட்கும் ஓலம் அவர் காதுக்குக் கூட எட்டக் கூடாது என்பது அவர் கட்டளையாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பணிகளில் ஈடுபடும்போது தொழிலாளர்கள் உயிரிழப்பது கட்டுமானத் துறையுடன் நின்றுவிடவில்லை. திருபெரும்புதூர் ஆலைகளில் வாரம் ஒரு தொழிலாளி ஆலை விபத்தில் உயிரிழப்பதாக அந்தத் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். சிவகாசி எப்போதும் பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது. கழிவுநீர் சுத்தம் செய்ய குழிகளுக்குள் இறங்கும் தொழிலாளர்கள் பல நேரங்களில் குழியில் இருந்து உயிருடன் வெளியே வருவதில்லை. 2012, 2013 ஆண்டுகளில் 34 பேர் இப்படிச் செத்துப் போனார்கள் (2014 ஜனவரி 19, டைம்ஸ் ஆஃப் இந்தியா).
கட்டிடம் இடிந்தவுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்க முதலில் ஓடிவந்தது அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் சாமான்யர்கள் தான். அதன் பிறகு தங்கள் உயிரை மதிக்காமல், இரவு பகல் பாராமல், நோய்த் தொற்று ஆபத்தை பொருட்படுத்தாமல், உண்ண, இருக்க, கழிக்கக் கூட போதுமான வசதிகள் இன்றி, 27 பேரை உயிருடன் மீட்க, படாத பாடுபட்டவர்கள் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்களே. மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தான் மீட்புப் பணியிலும் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களும் இடம்பெயரும் தொழிலாளர்களே.
மவுலிவாக்கத்தில் இடிந்தது கட்டிடம் மட்டுமல்ல. உலகமய வளர்ச்சி பற்றிய புனைவுகளும் தான். தொழிலாளர்கள் கட்டியெழுப்பினார்கள், தொழிலாளர்கள் அடிபட்டு செத்தார்கள் என்பதுடன் அனைத்தும் முடிந்துவிடுவதில்லை.
தொழிலாளர்கள் மீண்டும் அனைத்தையும் கட்டியெழுப்புவார்கள். எதிர்ப்புப் போராட்டங்கள் உட்பட.