புதுதில்லி, 08 ஜுலை 2014
மோடி அரசாங்கத்தின் முதல் ரயில்வே நிதியறிக்கை, சாதாரண பயணிகள் நலன் மற்றும் பொதுவாக ரயில்வேயின் நலன் ஆகியவற்றை விலையாகக் கொடுத்து, இந்திய ரயில்வேயின் விலைமதிப்பற்ற தேசச் சொத்தை தனியார் நலன்களுக்கும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் தாரை வார்ப்பதில் ஓர் அடியாகும்.
இந்திய பயணிகளில் 99% பேர், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், கட்டுப்படியாகும், போதுமான அளவுக்குக் கிடைக்கும் இடம் ஆகியவற்றைக் கோருகிறார்கள். மோடி அரசாங்கத்தின் நிதியறிக்கை, ஒரு சிறிய சிறுபான்மைக்கு ‘புல்லட் ரயில்’ என்ற ஈர்ப்பின் பெயரில் இவை அனைத்தையும் பலியாக்குகிறது.
அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் மக்களின் பற்றியெரியும் கவலையாக இருக்கிறது. புதிய அரசாங்கத்தின் ரயில்வே நிதியறிக்கை இந்தக் கவலைகளுக்கு தீர்வு காண எதுவும் செய்யவில்லை. 3 லட்சம் காலிப் பணயிடங்களை நிரப்பாமல் இருப்பதுதான் மீண்டும் மீண்டும் விபத்துகள் நடப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. அடிப்படை பாதுகாப்பு செயல்முறைகளை நிறைவேற்ற ரயில்வேயில் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலைமைக்கு, ரயில் ஓட்டுநர்கள் மீது கடுமையான பணிச் சுமை, உறங்குவதற்குக் கூட இடைவேளை இல்லாமல் நீண்ட நேரம் மனிதத்தன்மையற்ற விதத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிற நிலைமைக்கு இது இட்டுச் சென்றுள்ளது. 2012ல் ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட ககோட்கர் குழு, ஒவ்வோர் ஆண்டும் ரயில் விபத்து மற்றும் தீவிபத்துக்களில் 15,000 பேர் உயிரிழப்பதாகச் சொல்கிறது. மனச்சாட்சியற்ற ‘படுகொலை’ என்றும் இதனைச் சொல்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டொன்றுக்கு ரூ.20,000 கோடி செலவிடப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது. ரயில்வே நிதியறிக்கை இந்தத் தொகையை ஒதுக்க, அல்லது, போதுமான அளவு ஊழியர்களை பணிக்கமர்த்தி, பராமரிப்பு பணிகளை தரமுயர்த்தி, தீப்பிடிக்காத பொருட்கள் கொண்டு ரயில் பெட்டிகளை தயாரித்து, விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளை முன்வைக்கத் தவறியுள்ளது.
நிதிப்பற்றாக்குறை என்ற பெயரில் அரசு - தனியார் - பங்கேற்பு மற்றும் ரயில்வேயில் 100% அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவது ஆகியவற்றின் மூலம் ரயில்வே தனியார்மயப்படுத்தப்படுகிறது. அரசு - தனியார் - பங்கேற்பு, ஊழல் உள்ளே நுழையும் வழி என்பதையும், தனியார் லாபத்துக்காக பொதுச் சொத்துக்கள் சுரண்டப்படுவதற்கு உதவுவது என்பதையும், தவிர்க்கமுடியாமல் பயணிகள் மீது கூடுதல் கட்டணச் சுமை மற்றும் திறன், பாதுகாப்பு, வசதி எவற்றிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போவது என்பதையும், விமான நிலைய அனுபவங்கள் காட்டுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 99 திட்டங்களில் 1 திட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது என்று ரயில்வே அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இந்தத் திட்டங்களை முடிக்க ஓர் அனைத்தும் தழுவிய திட்டம் எதையும் முன்வைக்க அவர் தவறிவிட்டார்.
புல்லட் ரயில்களை முன்னிறுத்துவதன் மூலம் இந்தத் தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்ப ரயில்வே நிதியறிக்கை முயற்சி செய்துள்ளது.
தனியார்மயம், அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றை அனுமதித்தே தீர வேண்டிய அளவுக்கு ரயில்வேயில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறதா? 20008 - 2012ல் ரூ.50,000 கோடி அளவுக்கு இரும்புத் தாது ஏற்றுமதியாளர்கள் ரயில்வேயை ஏமாற்றியிருப்பதாக மத்திய தணிக்கையாளரின் சோதனை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியட்டது (‘ரயில்வே பற்றிய உண்மைகள்’ என்ற தலைப்பில் ரூப் வெளியிட்டுள்ள ஜனவரி 2014 அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளபடி). ‘உள்நாட்டு நுகர்வுக்கு இரும்புத் தாது எடுத்துச் செல்வதற்கு தரப்படும் மான்ய விலையில், சட்டத்துக்குப் புறம்பாக, இரும்புத் தாது ஏற்றுமதியாளர்கள், இரும்புத் தாது எடுத்துச் சென்றுள்ளனர். நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு பிரம்மாண்ட அளவில் மான்யம் தர, பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் நலன்களை பிரதிபலிக்கிற ரயில்வே பாதுகாப்பு, பிற வளர்ச்சிக்கான செலவுகளை அரசாங்கம் செய்ய மறுக்கின்றது’ என்று ரூப் சொல்கிறது.
ரயில்வே நிதியறிக்கை முன்வைக்கப்படுவதற்கு முன்பாகவே, பயணிகள் கட்டணமும், சரக்குக் கட்டணமும் பெருமளவில் உயர்த்தப்பட்டுவிட்டன. நிதியறிக்கை, எதிர்கால கட்டண உயர்வை எரிபொருள் செலவோடு இணைப்பதால், டீசல் விலை உயரும் ஒவ்வொரு முறையும் இந்தக் கட்டணங்களும் உயரும்.
ரயில்வே நிதியறிக்கை, சாதாரண மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும், பயணிகள் பாதுகாப்பின்மை மற்றும் ரயில்வே ஊழியர்கள் நிலைமைகளில் தற்போதுள்ள நெருக்கடி பற்றிய ஒட்டுமொத்த அலட்சியத்தை வெளிப்படுத்தும், தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட்மயத்துக்கான நகல்திட்டமே.
இகக (மாலெ) மத்திய கமிட்டி