சீனப் புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதன் பரிமாணங்கள்
உ. சீனப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல தொடர் ராணுவ நடவடிக்கை தவிர்க்க இயலாதது. ஆனால் சிபிசி (சீன கம்யூனிஸ்ட் கட்சி), இயங்கியல் முறையை அமல்படுத்தி அதன் தனிச் சிறப்புமிக்க திறமை மூலம் ராணுவப் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரத்தை வளர்த்தெடுத்தது. சில உதாரணங்களை சொல்ல வேண்டுமானால், தாக்குதலின்போது சாகசவாதத்தை, தற்காப்பு நிலையிலிருக்கும்போது பிற்போக்குத்தனத்தை, ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயரும்போது ஓடிப்போவது ஆகியவற்றை எதிர்த்தல் ஆகியவற்றை குறிப்பிடலாம். சுத்த இராணுவ நோக்குநிலையை, சுற்றித் திரியும் கிளர்ச்சியாளர் வழியை எதிர்ப்பது மற்றும் செம்படையை சீனப்புரட்சியின் பிரச்சாரகனாக, அமைப்பாளனாக பார்ப்பது.
நீண்ட பிரச்சாரம் மற்றும் உடனடி முடிவு எடுக்கும் போர்த்தந்திரத்தை எதிர்ப்பு மற்றும் நீண்ட யுத்தத்திற்கான போர்த்தந்திரத்தையும் பிரச்சாரத்தில் உடனடி முடிவு எடுப்பதையும் உயர்த்திப் பிடிப்பது, செம்படையில் கொரில்லாயிசத்தை எதிர்ப்பது அதேவேளை சண்டையில் கொரில்லா குணாம்சத்தை அங்கீகரிப்பது.
3. சீனப் புரட்சியின் வெற்றிக்குப் பின்பு, சீன சமூகத்தின் சோசலிச மாற்றம் நோக்கிய சில முன்நகர்வுகளுக்குப் பிறகு சிபிசி ‘முக்கியமான புகழ்மிக்க, சரியான’ கம்யூனிஸ்ட் கட்சி என அடையாளப்படுத்தப்பட்டது. சிபிசியில் சிலர் இதை, சரியான புரட்சிகர வழியின் பிரதி நிதி தோழர் மாவோ என உயர்த்திப் பிடித்து நீட்டித்தனர். ஆனால், மாவோ, இப்படிப்பட்ட செயலை எதிர்த்தது மட்டுமின்றி, இப்படி யாராவது முடிவுக்கு வருவார்களேயானால் அவர்கள் பாசாங்கு செய்வதாக அல்லது அடிப்படை மார்க்சிய கோட்பாடு, அறிவு பற்றி அறியாதவராக இருப்பார் என்றார்.
மாவோவைப் பொறுத்த வரை 1921ல் சிபிசி உருவாக்கிய தாம் உள்ளிட்ட கருவான குழு மார்க்சியம் - லெனினியம் மீது, புரட்சிகர உணர்வு மற்றும் ஈடுபாடு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், சீனப் புரட்சி பற்றிய விதிகளை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. புகழ்மிக்க வடக்கு வீர பயணம் (நார்த் எக்ஸ்பெடிஷன்), சியாங்காய் மலைப்பகுதிகளில் தளப் பிரதேசங்களைக் கட்டுவது, சிவில் யுத்தத்தில் சியாங் கே ஷேக்கின் துரோகத்திற்கு பின்னாலான பெரும் சரிவுகள், சியாங்கே ஷேக்கின் அய்ந்தாவது சுற்றிவளைப்பு மற்றும் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பெரியப் பின்னடைவுகளுக்குப் பின் நடைபெற்ற நீண்ட பயணம், ஆகிய எதிர்மறை அனுபவங்களை ஒப்பீட்டுரீதியாக படிப்பதன் அடிப்படையில், தலைமை, சீனப் புரட்சியை நிர்வகிக்கிற குறிப்பான விதிகளை பற்றிக் கொள்ள முடியும். இந்த அடிப்படையில் புரட்சிகர வழி நிலை நிறுத்தப்பட்டு, 6 மற்றும் 7ஆவது சிபிசி கட்சி காங்கிரசுக்கு நடுவில் 1935ல் சுனாயில் நடந்த சிறப்பு காங்கிரஸ் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி, செம்படை அல்லது மக்கள் விடுதலைப் படை மற்றும் அய்க்கிய முன்னணி ஆகியவை சீனப்புரட்சியின் மூன்று மந்திர ஆயுதங்களாக எழுந்துவந்தன. இந்த மந்திர ஆயுதங்கள் ஒருபோதும் புதிராக இருந்ததில்லை மாறாக சீனப் புரட்சியை வடிவமைப்பது மற்றும் வளர்த்தெடுப்பது எனும் இயக்கப் போக்கில் இவை வளர்த்தெடுக்கப்பட்டன. மேலும் இவை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டவை அல்ல மாறாக அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை மற்றும் உயிரோட்டமான பிணைப்பால் வளர்க்கப்பட்டவை. துவக்கம் முதலே ஆயுதம் தாங்கிய எதிர்ப்புரட்சிகர சக்திகளை எதிர்கொள்ள மக்களுக்கு வலு சேர்க்க கம்யூனிஸ்ட் கட்சி துவங்கும்போது கூடவே செம்படையை கட்டுவது என்ற பாதையையும் தேர்ந்தெடுத்திருந்தது. யுத்தத்தில் அவசியமான ‘எதிரிகளைக் குறைத்துக் கொள்வது நண்பர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது’ என்ற அடிப்படைக் கொள்கையின் மறு ஆக்கம்தான் அய்க்கிய முன்னணி.
இது யுத்த காலத்தில் மிகவும் அவசியமானதாகும். அடிப்படை வர்க்கங்களான நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை சுதந்திர அறுதியிடல் நோக்கி அமைப்பாக்குவது என்ற இலக்கை நோக்கிய பயணத்தை சிபிசி துவக்கியது. கம்யூனிஸ்ட் - கேஎம்டி ஒத்துழைப்பின்போது, ஹம்ப்பா இராணுவ பயிற்சி கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதும் சிபிசியின் கட்டுப்பாட்டில் இருந்த வந்ததுமான அங்கொன்றும் இங்கொன்றுமாக இராணுவ சக்திகளை விரிவாக்கம் செய்யவும், வலுப்படுத்தவும் அடிப்படை வர்க்க அடித்தளம் உதவின. இதுதான் சியாங்கே ஷேக் துரோகத்திற்குப் பின்னாலுள்ள வெளிப்படையான நிலையாகும். செம்படையின் வளர்ச்சி கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவாக்கத்துக்கும் பங்களிப்பு செய்தது.
இன்னொருபுறம், புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தில், சக்திகளின் சமநிலையில் ஒரு பண்பு மாற்றம் கொண்டுவர இராணுவ நடவடிக்கை போதுமானதாக இல்லை. சிபிசி கைதேர்ந்த அய்க்கிய முன்னணி தந்திரங்களைக் கையாண்டும், எதிரிகளுக்குள் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தியும் புதிய நட்பு சக்திகளை வெற்றி கொள்ள வேண்டியிருந்தது. அய்க்கிய முன்னணியை வளர்த்தெடுத்ததானது, கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும், இராணுவ நடவடிக்கைகள் புதிய பரிமாணம் பெறவும் பங்களித்தது.
5. ‘ஆயுதம் தாங்கிய எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ளும் ஆயுதப் புரட்சி’ என்று சீனப் புரட்சியின் அடிப்படை குணாதிசயத்தை தோழர் ஸ்டாலின் சரியாகவே விவரித்தார். சீன ஆளும் வர்க்கம், தனது ஆட்சியை ஒழுங்கமைக்க எவ்வித ஜனநாயக நிறுவனங்களையும் அறிமுகப்படுத்தவில்லை. மாறாக ஆட்சியை நிலை நிறுத்த இராணுவ சர்வாதிகாரம் மட்டுமே ஒரே வடிவமாக இருந்தது. எனவே சீனத்தில் ஜனநாயக நிறுவனங்களைப் பயன்படுத்துவது என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் போயிற்று. ஆகவே ஆயுதப் போராட்டம் முக்கியமான போராட்ட வடிவமாக இருக்க வேண்டியதாயிற்று. ராணுவ அறிவியல் மற்றும் சீனப் புரட்சியின் குறிப்பான இயங்காற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் ராணுவ செயல்தந்திரத்தை வளர்த்தெடுப்பதுதான் சீனப் புரட்சியின் உடனடிக் கடமையாக இருந்தது. ராணுவ செயல்தந்திரம் எப்படி சீன நிலைமைகளுக்கு தகுந்தவாறு பொருத்தமானதாக்கப்பட்டது என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். ஆனால் தோழர் மாவோவால் தலைமை தாங்கப்படும் சிபிசி, இராணுவ செயல்தந்திரத்தை எப்படி சரியான கோணத்தில் பற்றிக் கொள்வது என்பதற்கு அழுத்தம் வைத்தது.
முதலாவதாக, நமது ஒட்டுமொத்த ராணுவ நடவடிக்கையும், ராணுவப் படிப்பும் கூட ‘யுத்தத்தை இன்னொரு யுத்தத்தின் மூலம் தீர்த்துக் கட்டிவிட முடியும்’ என்ற புரிதலின் அடிப்படையில் உற்சாகம் பெற்றது என மாவோ சொல்வார். ‘கம்யூனிஸ்ட்டுகள் யுத்த வெறியர்கள் அல்ல மாறாக அவர்கள் அமைதியை விரும்புபவர்கள்’ துப்பாக்கியின் மேலாதிக்கத்திலிருந்து இந்த நாட்டை விடுவிக்க நாம் கொஞ்ச நாட்களுக்கு துப்பாக்கி ஏந்தியாக வேண்டும்’
இரண்டாவதாக, சீனப் புரட்சியில் ராணுவ செயல்தந்திரம் ஒன்றேதான் குறிக்கோள் என்பதாகவோ அதற்கு முழு சுதந்திர பங்களிப்பு என்றோ இல்லை; மாறாக, நிலப்பிரபுத்துவ சக்திகள் - தரகு அதிகார வர்க்க மூலதனம், அரை காலனிய ஏகாதிபத்திய தலையீடு ஆகியவற்றின் ஆட்சியை நீக்குவது என்ற அவசியமான அரசியல் செயல்தந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல ராணுவ செயல்தந்திரம் தவிர்க்க முடியாதது.
அரசியல் செயல்தந்திரம் என்பது அடிப்படை நோக்குநிலையோடு தன்னை நிறுத்திக் கொள்வதல்ல, மாறாக, சீனப் புரட்சியின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு குறிப்பான வடிவமெடுப்பதாகும். ஜப்பான் எதிர்ப்பு யுத்த வெற்றிக்குப் பிறகு நேரடியாக சிவில் யுத்தத்திற்கு செல்லாமல் அமைதிக்கான முயற்சி எடுத்தது சீனப்புரட்சியின் வலுவான செயல்தந்திரமாகும். ஒரு பக்கப்பார்வை, சீனப்புரட்சியின் முக்கிய அரசியல் செயல்தந்திரத்தை மட்டுப்படுத்தும் அல்லது அதை மீறும். சீன நிலைமைகளில் வெளிப்படையான அரசியல் செயல்பாடு இல்லாதபோதும் கூட, மார்க்சிய -லெனினியத்தை புத்திசாலித்தனமாக அமல்படுத்தியதன் மூலம் அரசியல் செயல்தந்திரம் வளர்த்தெடுக்கப்பட்டது. இது விரைவாக சீனப்புரட்சியை முன்னெடுக்க பெரும்பங்காற்றியது.
மேலும் முக்கியமாக, ராணுவ செயல்தந்திரம் மூலம் மட்டுமே சக்திகளின் சமநிலையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்ற கற்பனையை உடைத்தது. மாறாக, சூழ்நிலைக்குத் தகுந்த அரசியல் செயல்தந்திரம், பெரும் தகர்த்து முன்னேறுதல் மூலம் சமூகத்தில் தீர்மானகரமாக சக்திகளின் சமநிலையை மாற்ற அவசியமானது.
7) முக்கியமான, அடிப்படைக் கோட்பாடுகளை அருவமாக புரிந்து கொள்வது என்பது உண்மையான புரட்சிகர வழியில் கம்யூனிஸட் கட்சி கட்டி முன்னெடுப்பதற்குப் போதுமானதல்ல. குறிப்பான சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியை வடிவமைக்க, புரட்சியை வடிவமைத்த அதன் வரலாற்று இயக்கப்போக்கு மிக முக்கிய பங்காற்றக் கூடியது.
உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதன் துவக்க காலங்களில், அறிவாளிகளின் ஒரு பிரிவினர் (இதில் சிலருக்கு, படிப்புக்காக வெளிநாடு சென்ற அனுபவமும் உண்டு) கிராமப்புற மக்கள், மாணவர்களுக்கு மே 4 இயக்கத்தின் வாயிலாக அறிவூட்டியது முக்கிய பங்காற்றியது. ஆனால் சீனத்தில் உண்மையான புரட்சிகர போராட்டங்கள் ஏற்ற இறக்கங்களோடு முன் சென்றபோது, கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவது என்ற சவாலை விவசாயிகளிடமிருந்து அதிலும் குறிப்பாக ஏழை விவசாயிகளிடமிருந்து கம்யூனிஸ்ட்டுகளை வளர்த்தெடுத்ததன் மூலமே எதிர் கொள்ள முடிந்தது.
குறை வளர்ச்சி கொண்ட முதலாளித்துவம், மட்டுப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்க வளர்ச்சி கொண்ட ஒரு பின்தங்கிய சமூகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக சீனப் புரட்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
சீனத்தின் இந்தப் பெரிய பரிசோதனையில்ருந்து கீழ்கண்ட பாடங்களை பெற முடியும்.
அ) புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தில் குட்டிமுதலாளித்துவ சிந்தனையின் மேலாளுமை இருப்பதை அங்கீகரித்தபோதுதான் சிபிசி, பின்தங்கிய சமூக சீனத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது என்ற சவாலை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடிந்தது. எனவே பாட்டாளி வர்க்கமல்லாத இந்தக் கருத்தியலை அதன் கடைசி வரை சென்று போரிட்டு கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதை முன்னெடுத்துச் செல்வது இன்றியமையாததாகும்.
ஆ) சில முன்னாள் தலைவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தவறான அரசியல் - கருத்தியல் வழியை இனங்காண்பது, தடுப்பது மற்றும் வீழ்த்துவது ஆகியவைதான் சிபிசிக்குள் நடக்கும் கருத்தியல் போராட்டத்தின் செறிவான வெளிப்பாடாகும். ஆனால் கருத்தியல் - அரசியல் போராட்டத்தின் விதியைப் பொறுத்தவரை ‘ஒரு போக்கை இன்னொரு போக்கு மறைக்கும்’. எனவே வலது மற்றும் இடது வழிவிலகலுக்கு எதிராக அனைத்தும் தழுவிய வகையில் சிபிசிக்குள் புரட்சிகர வழியை நிறுவி உறுதி செய்ய இந்தப் போரை தொடர்ந்து நடத்த வேண்டியதாய் இருந்தது.
இ) கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறையை வளர்க்கவும், இன்னும் சொல்லப்போனால், செம்படை மற்றும் மக்கள் விடுதலைப் படையை விடாப்பிடியாக மறு கட்டமைப்பு செய்யவும் சிபிசி தனித்துவமான நடைமுறையை உருவாக் கியது. அது கம்யூனிஸ்ட் கட்சியை விரிவாக்குவது, செம்படை மீது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையை நிறுவுவது ஆனால் அதோடு மிக முக்கியமாக செம்படைக்கும் மற்ற ராணுவத்துக்கும் இடையேயான எல்லைக் கோட்டை வகுக்கவும் பங்களிப்பு செய்தது.
செம்படையினரிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்காவிட்டால், அது பிரச்சாரகனாகவோ அல்லது சமூகத்தின் ஒரு உறுப்பு அமைப்பாகவோ ஒருக்காலும் வளராது.
ஈ). கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தவறான கருத்தியல் - அரசியல் வழியை தடுத்து வீழ்த்துவதோடு சிபிசி தன்னை சுருக்கிக்கொள்ளாமல், பல்வேறு வழிவிலகல்களுக்கான கருத்தியல் - தத்துவ அடிப்படைகளை ஒழித்துக்கட்டவும் படிப்படியாக முயல வேண்டும். இதை அடைய, அவர்கள் இயங்கியல் பொருள்முதல்வாதம் பற்றிய தத்துவ புரிதலை அல்லது மார்க்சிய தத்துவ ஞானத்தை தோழர் மாவோ கட்டுரைகள் மூலம் பிரபலப்படுத்தினார்கள். தவறான வேலைநடை, தலைமை முறை, ஒரே மாதிரியான எழுத்து நடை ஆகியவற்றோடு அகநிலைவாதம் மற்றும் குறுங்குழுவாதம் ஆகிவற்றையும் எதிர்கொள்வதன் வாயிலாக வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சீர்செய் இயக்கமும்’ துவக்கப்பட்டது.
இறுதியாக, பாட்டாளி வர்க்க கருத்தியலை உறுதிப்படுத்துவதன் அடிப்படையான பாட்டாளி வர்க்க தரம் மற்றும் விவசாயிகள் மற்றும் மக்கள் விடுதலைப் படையில் பெரிய தகர்த்து முன்னேறுதல் மூலம் புதுமையான வகையில் கம்யூனிஸ்ட் கட்சியை விரிவாக்கி சிபிசிக்கு வெகுசனப் பரிமாணம் தந்தது ஆகியவற்றின் இயங்கியல்ரீதியான கலவையாக ‘வெகுசன பாட்டாளி வர்க்க கட்சியை’ சீனப் புரட்சியால் வளர்த்தெடுக்க முடிந்தது.