நெல்லை பேட்டை 45 வார்டில் 102 குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணை
வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியாரிடம் கொடுத்தது கூட்டுறவு
பண்டகசாலை நிர்வாகம். இதை எதிர்த்து அப்போதே மாலெ கட்சி போராட்டம் நடத்தி,
மண்ணெண்ணய் விநியோகத்தை மீண்டும் ரேசன் கடையில் நடக்க ஏற்பாடு செய்தது.
ஆனால், 17.06.2014 அன்று மண்ணெண்ணய் விநியோகத்தை மீண்டும் தனியார்
மண்ணெண்ணய் வியாபாரிடம் மாற்றி அவரிடம் போய் வாங்கிக் கொள்ளச் சொன்னது
கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகம். இதனால், கடும் கோபம் கொண்ட வார்டு பெண்கள்
80 பேர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள்
கணேசன், ராமையா, சபாபதி மற்றும் தோழர்கள் சேகர், செல்வம், தங்கம்,
சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ரேசன் கடையை முற்றுகையிட்டனர்.
காவல்துறை அதிகாரிகள், பொதுவிநியோகத் திட்ட வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார்கள். அதிகாரிகள், அன்றைய தினம் மட்டும் அந்த மக்கள் வாழும் பகுதியிலேயே மண்ணெண்ணயை விநியோகம் செய்து விடுகிறோம் என்றும் அடுத்த முறையில் இருந்து மீண்டும் ரேசன் கடையிலேயே மண்ணெண்ணய் வழங்கச் சொல்கிறோம் என்றும் உறுதியளித்தார்கள். அதைத் தொடர்ந்து பெண்கள் முற்றுகையைக் கைவிட்டனர். அன்றைய தினம் அவர்களின் வீட்டருகேயே அவர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கப்பட்டது.
பேட்டையில், அஇமுபெகவின் கொடியேற்று நிகழ்ச்சியும் பொதுக்கூட்டமும் 27.06.2014 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோழர் சுமதி தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள் கழக கொடியை பேட்டை பகுதிப் பொறுப்பாளர் தோழர் சூசை திலகவதி ஏற்றி வைத்து உரையாற்றினார். கூட்டத்தில் அஇமுபெகவின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்புச்செல்வி, தோழர்கள் சித்ரா, பாரிஷா, வள்ளி மற்றும் இகக(மாலெ) மாவட்டச்செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் ஜி.ரமேஷ், மாவட்ட ஜனநாயகப் பீடித் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் கா.கணேசன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 70 பெண்கள் கலந்து கொணடனர். கூட்டத்தில், பாஜக மோடி அரசின் மோசமான ரயில் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும் டீசல், மண்ணெண்ணய், எரிவாயு விலையை உயர்த்த உத்தேசித்திருப்பதைக் கைவிடக் கோரியும் தலித், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக கறாராக நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும் ஏழைக் குடும்பங்கள் சீரழிவுக்குக் காரணமாக உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வலியுறுத்தியும் பீடிப்பெண் தொழிலாளர்களுக்கு ஆயிரம் பீடிகள் சுற்றக் கூலியாக ரூ.400 நிர்ணயம் செய்யுக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.