COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

ரயில் கட்டண உயர்வுக்கு எதிராக மாலெ கட்சி போராட்டம்

சென்னை: 22.06.2014 அன்று அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் எஸ்.ஜவகர், மாவட்டத் தலைவர் தோழர் பழனிவேல், சிபிஅய்எம்எல் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர் முனுசாமி, ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கினார். கட்சியின் சென்னை மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள், அனைத்து தொழிற்சாலை கிளை சங்கங்களின் தலைமை தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவை: 25.06.2014 அன்று பெரியநாயக்கன்பாளையம் பிரிக்கால் பிளாண்ட் 1ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 26.06.2014 அன்று பிரிக்கால் பிளாண்ட் 3ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்: 25.06.2014 அன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்துகொண்டார். தோழர் வெங்கடேசன் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை: 25.06.2014 அன்று ஆதனக்கோட்டையில் தோழர் சின்னத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேநாளில் கந்தர்வக்கோட்டையில் தோழர் ஜோதிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். பழ.ஆசைத்தம்பி, மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் வளத்தான் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

நாகை - தஞ்சை: 26.06.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.இளங்கோவன், டி.கே.எஸ்.ஜனார்த்தனன் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.

நாமக்கல்: 30.06.2014 அன்று பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினார்.

கடலூர்: விருதாச்சலத்தில் 27.06.2014 அன்று ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் கழக தலைவர் தோழர் தனவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர் ராஜசங்கர் கண்டன உரையாற்றினார்.

களச் செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்
      

Search