ராஜஸ்தான் அரசாங்கம் தொழிலாளர் சட்டங்களில் மூலதனத்துக்கு இசைவான,
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்கிறது.
இதற்காக எதிர்ப்புக்களைச் சந்திக்கிறது. ராஜஸ்தான் அரசாங்கம் தமிழகத்தில்
ஜெயலலிதா அரசிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில்
மூலதனத்துக்கு ஆதரவாக சட்டங்களை திருத்த தனி முயற்சி எடுப்பதில்லை. ஓரளவு
தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு தரும் சட்டங்களை அமலாக்காமல், அவற்றை மீறும்
முதலாளிகள் மனம் கோணாமல், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
இருந்தால் போதும். சட்டங்களும் இருக்கும்.
தொழிலாளர்கள் சட்டங்கள் பின்னால் ஓடிக் கொண்டிருப்பார்கள். முதலாளிகள் விருப்பம் போல் தொழிலாளர்களை நடத்துவார்கள். மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்தது வரை இப்படித்தான் நடக்கிறது.
ஜெயலலிதா மாறிவிட்டார். அவரது அணுகு முறை பெருமளவில் மாறிவிட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே மொத்த பணமும் போய்விடுகிறது, உங்களை சிறையில் அடைக்கிறேன் பார் என்றெல்லாம் சொல்வதில்லை.
நான் இருப்பதே உங்களுக்காகத்தான் என்று சொல்லிக் கொண்டே மக்களை வஞ்சிக்கும் செயல்பாடுகளை தடையின்றி நிறைவேற்றி விடுகிறார். மக்களவை தேர்தல் வரையிலான கிட்டத்தட்ட மூன்றாண்டு கால ஆட்சியில், அதிகாரபூர்வ இடதுசாரிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பெருமளவில் எதிர்ப்புக் குரல் இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஒரு பக்கம் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அமல்படுத்திக் கொண்டே மறுபக்கம் அடையாள நடவடிக்கைகளுக்கு அப்பால், அடிப்படை மக்கள் சார்பு நடவடிக்கைகள் பக்கமே தானும் திரும்பாமல் உடன் இருந்த கட்சிகளும் எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்பட்டவையும் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். உடனடியாக தீர்க்கவே முடியாத, ஆனால், தமிழக மக்களின் மனச்சாய்வை தன் பக்கம் திருப்பக் கூடிய பிரச்சனைகளாகத் தேர்ந்தெடுத்து தலையீடு செய்வதாகக் காட்டி, ஓரஞ்சாரத்தில் இருந்த ஜனநாயக சக்திகளையும் வாயடைத்துப் போகச் செய்துவிட்டார்.
37 பெற்ற பிறகும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கை யும் எடுக்காமல், நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன் கையாண்ட உத்தியையே தொடர்கிறார். இப்போது கூட்டாளிகள் உடனில்லை. ஆனால், அவர்கள் நம்பகத்தன்மையில் கேள்வி எழுவதை உறுதிசெய்து கொண்டுவிட்டார். இப்போது, இன்னும் துணிச்சலாக, மக்கள் மடிய காரணமாக இருந்த விபத்துக்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்பது வரை பேசுகிறார்.
ஒரு மக்கள் இயக்கத்தை எப்படி நசுக்குவது, படிப்படியாக கலைத்து கரைத்து விடுவது என்பதிலும் முதலமைச்சர் ஜெயலலிதா முன் மாதிரி படைத்திருக்கிறார். பிற மாநில அரசாங்கங்கள், மேற்குவங்க இடதுசாரி அரசாங்கம் போல் நடவடிக்கைகள் எடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்டு, மக்கள் செல்வாக்கை இழக்க வேண்டியதில்லை. செல்வாக்கு இருக்கும். மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், நடந்து கொண்டிருந்த மக்கள் இயக்கம் காணாமல் போயிருக்கும். இடிந்தகரையில் இப்படி ஒரு முன்மாதிரியை கிட்டத்தட்ட வெற்றிகரமாக படைக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா.
இடியாத கரையாக இருந்த இடிந்தகரை இன்று இரண்டு கோஷ்டிகள் குண்டு வீசி தாக்கிக் கொண்டார்கள் என்ற கவலை தரும் செய்தியின் இடமாக மாறியுள்ளது. அணுஉலை எதிர்ப்பு மட்டுமின்றி, உடனடி நிகழ்ச்சிநிரலில் இல்லையென்றாலும் தாது மணல் கொள்ளை போவதற்கு ஒருவிதத்தில் தடையாக இருந்தது. உலக அளவிலான கொள்ளைக்கும் உள்ளூர் கொள்ளைக்கும் தடையாக இருந்த இடிந்த கரையை மிக சாதுர்யமாக திட்டமிட்டு, நசுக்குவது பளிச்சென கண்ணுக்குத் தெரியாமல், நசுக்கிவிட்டார் ஜெயலலிதா. இயக்கம் வடிவதற்கு வேறு ஏதோ காரணம் என கருதும் விதம் சுற்றிலும் வேறு காரணங்களை எழுப்பிவிட்டார்.
ஒரே நேரத்தில் பலம்பொருந்திய இரண்டு சக்திகளுடன், மத்திய அரசுடனும், மாநில அரசுடனும் போரிட முடியாது என்பதால், போராட்டக்காரர்கள் கவனம் மத்திய அரசு எதிர்ப்பில் குவிக்கப்பட்டது. மத்திய அரசு எதிர்ப்பு வேடம் தரித்த ஜெயலலிதா, ‘உங்களுள் ஒருத்தி’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் மீது தனது காவல்துறையை ஏவினார். எந்த மத்திய அரசை எதிர்ப்பதாகச் சொன்னாரோ, அதே மத்திய அரசு மெச்சி மகிழ்கிற அளவுக்கு போராட்டக்காரர்கள் மீது பொய் வழக்குகள் போட்டார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கூட வழக்குகளை முழுவதுமாக திரும்பப் பெறவில்லை. மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதில் அந்த காவல்துறை ஒடுக்குமுறை கிட்டத்தட்ட ஒரு தீர்மானகரமான நடவடிக்கை. அதற்குப் பிறகு அப்படி ஓர் ஒடுக்குமுறை நடவடிக்கை போராட்டக்காரர்கள் மேல் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், எங்கு திரும்பினாலும் காக்கிக் சட்டை கண்ணில் படும்படி காவல்துறையினரை நிறைத்து, இடிந்தகரையை போராட்டக்காரர்களுக்கு திறந்தவெளிச் சிறையாக மாற்றினார். தொடர் போராட்ட நடவடிக்கைகளில் இருந்ததால் ஏற்கனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை நடமாட்டம் போராட்டக்காரர்களை இன்னும் இறுக்கியது.
செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழக மக்களின் ஒரு பிரிவினரை போராட்டக்காரர்களுக்கு எதிராக நிறுத்தினார். தாங்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பதற்கு இந்தப் போராட்டக்காரர்கள்தான் காரணம் என அவர்கள் கருதும் சூழலை உருவாக்கினார். போராட்டத்தை வழிநடத்தியவர்கள் மீது மத்திய அரசு சுமத்திய அவதூறுகள், அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான அவரது ஒடுக்குமுறை அணுகுமுறைக்குச் சாதகமாகவே இருந்தன.
எதிர்ப்புக்களைக் கடந்து அணுஉலை செயல்படத் துவங்கியது. முதல் சோர்வு அடியெடுத்து வைத்தது. இருந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவரங்கள் கோருவது, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வது, அணுஉலையை முற்றுகையிட முயற்சி செய்வது என போராட்டம் தொடர்ந்தது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டது. அதற்கும் அணுஉலை எதிர்ப்பாளர்கள் தயாராயினர். தேர்தல் தோல்வி சோர்வு தந்து இருக்கக்கூடும். ஆயினும், அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்படவில்லை.
இடையில் தாது மணல் கொள்ளைக்குப் பின் இருப்பதாகச் சொல்லப்படும், ஜெயலலிதா வட்டத்துக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் வைகுண்டராஜனுக்கு பிரச்சனைகள் உருவாயின. ஜேப்பியார் போலவோ, பிஆர்பி போலவோ அவர் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்றாலும் தாது மணல் கொள்ளை பழைய வேகம் பிடிக்கவில்லை. அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒழித்துக்கட்ட ஜெயலலிதா வைகுண்டராஜனை பயன்படுத்திக் கொண்டாரா, வைகுண்டராஜனைப் பாதுகாக்க அணுஉலை எதிர்ப்பாளர்களை ஒடுக்கிவிட நினைத்தாரா என்று, கோடு குழம்பும் அளவுக்கு சில நலன்கள் பின்னிப்பிணைந்துள்ளன.
இப்போது, இடிந்தகரையில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. மக்களுக்குள் ‘மோதல்’ என்கிறார்கள். இந்த ‘மோதலின்’ பின் இருப்பது யார்? இடிந்தகரை பகுதியில் காவல்துறை குவிந்திருக்கும்போது, நாட்டு வெடிகுண்டு எப்படி உள்ளே வந்திருக்கும்? காவல்துறைக்கு தெரிந்தா? தெரியாமலா? தமிழ் நாட்டில் இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு பிடிப்பதுதான் எவ்வளவு கடினமானது! தமிழ் நாட்டின் சில பகுதியினர் இடிந்தகரை போராட்டக்காரர்களுக்கு எதிராக நிற்பதுபோன்ற தோற்றம் துரு முயற்சி செய்த ஜெயலலிதா, இப்போது, காவல்துறையினரைக் கொண்டு, இடிந்தகரைக்குள் இரண்டு பிரிவு இருப்பது போல் காட்டப் பார்க்கிறார்.
நாட்டு வெடிகுண்டு, இன்னும் கைது, பொய் வழக்கு... இப்படியாக தொலைநோக்கு கொண்ட,
கட்டுக்கோப்பான, உறுதியான, அமைதியான, போர்க்குணமிக்க ஒரு மக்கள் இயக்கத்தை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தொலைத்துக் கட்டப் பார்க்கிறது.
கூடன்குளம் அணுஉலையில் தயாராகும் மின்சாரம் எல்லாம் தமிழ்நாட்டுக்கே என்று ஜெயலலிதா வலியுறுத்தும்போது, அணு உலை விபத்து ஏற்பட்டால், அதனால் விளையும் நாசம் அனைத்தும் தமிழ்நாட்டுக்கே என்பதை மறந்துவிடக் கூடாது.
காவல்துறை, 144, துப்பாக்கிச் சூடு, இவற்றுடன் சீரான இடைவெளியில் மலிவு விலைப் பொருட்கள், கொஞ்சம் மாநில உரிமை, கொஞ்சம் இலங்கை, கொஞ்சம் மீனவர் பிரச்சனை ஆகியவற்றைச் சேர்த்து இன்னும் இரண்டு ஆண்டுகள் நகர்த்திவிடப் பார்க்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் முதல் கட்சியாக சட்ட மன்ற தேர்தலுக்கும் தயாராகிறார். அவர் பதில் சொல்லாமல் கடந்துவிடுகிற கேள்விகள், இன்றோ நாளையோ, தமிழக மக்கள் மத்தியில் இருந்து நிச்சயம் எழும்.