தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துக் கட்டுமானப் பணிகளிலும்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமிழக மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு
செய்யப்பட்டுள்ள தங்குமிட வசதிகள் மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி
தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
உப்பரபாளையத்தில் விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் தர வேண்டும்!
திருவள்ளூர் மாவட்டம் உப்பரபாளையத்தில் ஆந்திரா மற்றும் ஒடிஷாவைச் சேர்ந்த 11 கட்டுமானத் தொழிலாளர்கள் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்தது தமிழ்நாட்டில் மீண்டும் பெரும்அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மவுலிவாக்கத்தில் ஜூலை 5 அன்றுதான் மீட்புப்பணிகள் முடிந்துள்ள நிலையில் அன்று இரவே இன்னொரு கட்டிட விபத்து 11 தொழிலாளர்களை பலி வாங்கிவிட்டது.
இகக மாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் தலைமையிலான குழு சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டது. சம்பவ இடத்துக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம், காயங்களுக்கு உள்ளாகியுள்ள தொழிலாளிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், விபத்துக்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டுமானத் தொழிலாளர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்தியுள்ள அஇஅதிமுக ஒன்றிய கவுன்சில் துணைத் தலைவர் மாரி, கட்டிட உரிமையாளர் ராமநாதன், சுற்றுச் சுவரை பாதுகாப்பதற்றதாகக் கட்டியுள்ள பாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது.
பாலா என்பவரின் கிடங்கு இயங்குகிற நிலமும் ராமநாதன் என்பவரின் கிடங்கு கட்டப்பட்டு வரும் நிலமும் தலா 10 ஏக்கர் இருக்கலாம் என்றும் அதில் புறம்போக்கு நிலமும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தேகம் எழுவதால், அந்த நிலம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மாலெ கட்சிக் குழு வலியுறுத்தியது.
உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். அவர்களில் ஒருவருக்கு 65 வயதாகிறது. இவர்களுடன் 5 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது. அக்கம்பக்கம் உள்ள மக்கள்தான் முதலில் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
இடிந்து விழுந்த சுவர் எந்த முறையான வழிமுறையையும் பின்பற்றி கட்டப்படவில்லை. உள்ளீடற்ற கற்களால் (ஹாலோ பிளாக்) கட்டப்பட்டுள்ளது. 20 அடி உயரம் மற்றும் 300 அடி நீளமுள்ள அந்தச் சுற்றுச்சுவற்றில் இடையிடையே சுவர் வலுவாக நிற்பதற்கு அவசியமான தூண்கள் போதுமான இடை வெளியில் கட்டப்படவில்லை. அதனால்தான், சாதாரண மழைக்கே தாங்காமல், அந்தச் சுவர் இடிந்து சுவற்றின் ஓரம் இருந்த குடிசைகள் மீது விழுந்துள்ளது. மீதமுள்ள சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள முண்டியம்மன் நகரைச் சேர்ந்த, முகப்பேரில் வசிக்கிற, பாலா என்பவருக்குச் சொந்தமான கிடங்கின் சுற்றுச்சுவர். பாலாவின் சகோதரர் ராமநாதன் என்பவரின் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள்தான் அந்தச் சுவற்றின் ஓரம் வேயப்பட்ட குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராமநாதன் கட்டுகிற கிடங்கின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ளவர் ஒன்றிய கவுன்சிலின் துணைத் தலைவர் மாரி; அஇஅதிமுகவைச் சேர்ந்தவர்.
விபத்து நடந்த இடத்துக்கு அமைச்சர் முதல் ஊராட்சித் தலைவர் வரை வந்திருக்கும்போது, ஒன்றிய கவுன்சிலின் துணைத் தலைவர் மாரி மட்டும் அங்கு வரவில்லை.
அந்தக் கட்டிடத்தில் வேலை செய்ய ஸ்ரீகாகுளத்தில் இருந்து 31 பேர் அழைத்து வரப்பட்டனர். ஜ÷லை 5 அன்று வாரக்கூலி வாங்கிக் கொண்டு மற்றவர்கள் ஊர் திரும்பி விட்டனர். அவர்கள் இருந்திருந்தால் உயிர்ப்பலி இன்னும் அதிகரித்திருக்கும். ஜூலை 7 அன்று அவர்கள் மீண்டும் வேலைக்குத் வருகின்றனர்.
இடிந்து விழுந்த சுற்றுச்சுவரின் உள் உள்ள இரண்டு கிடங்குகளின் மாத வாடகை தலா ரூ.15 லட்சம். பெப்சி, ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பொருட்கள் அந்தக் கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. கிடங்கு முகப்பில் பெப்சி பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கின்ற கட்டிட விபத்துக்களில் தமிழ்நாடு அரசு எந்த முறையான நடவடிக்கையும் எடுக்காததுதான் இந்த விபத்துக்கும் அடிப்படை காரணம். வெளி மாநில தொழிலாளர்களுக்கான சட்டங்கள், விதிகள் எவற்றையும் தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. அதனாலேயே இதுபோன்ற விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்கள் மீது தமிழக அரசு முறையான நடவடிக்கை ஏதும் எடுக்காததாலேயே அந்த நிறுவனங்களும் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபடுகின்றன. இந்த குற்றமய அலட்சியத்துக்கு தொழிலாளர்கள் பலியாகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமிழக மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டுள்ள தங்குமிட வசதிகள் மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கிற தொழில் விபத்துக்கள், கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் சாவுகள் ஆகியவை பற்றி தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் இடம்பெயரும் தொழிலாளர் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டங்கள், விதிகள் அமல்படுத்தாத கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புக்கென சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை சாக வைக்கும் தமிழகமாக மாறிவிட்ட நிலை மாற்றப்பட வேண்டும்.