நாடாளுமன்ற மரபுகள், சிறந்த நாடாளுமன்றவாதி போன்ற சொற்றொடர்கள் நமக்கு
அறிமுகமானவை. அதேநேரம், தேர்தல் பாதை திருடர் பாதை, அரசியல் அதிகாரம்
துப்பாக்கிக் குழலிலிருந்துதான் பிறக்கிறது, நாடாளுமன்றம் பன்றித் தொழுவம்
என்ற சொற்றொடர்களும் கூட நமக்கு அறிமுகமானவையே. இடதுசாரி இயக்கங்களில்
தேர்தல் புறக்கணிப்பா? தேர்தல் பங்கேற்பா? என்ற விவாதமும் காலாகாலமாய்
நடந்து வருகிறது. இன்றளவும் கூட நாடாளுமன்றப் பாதையா? நாடாளுமன்றம்
தவிர்த்த பாதையா? என்பது ஒரு முக்கியமான விவாதப் பொருளாகவே உள்ளது. இவை
பற்றி தோழர் லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலம் தந்துள்ள வழிகாட்டுதல்களை
கட்டுரைத் தொடரில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
அதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் இயல்பு நாடாளுமன்றம் தொடர்பான பார்வை பற்றிய விவாதங்களுக்கு உதவ, இகக(மா) சார்பு கருத்தியலாளர் பிரபாத் பட்நாயக் கருத்துக்களையும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் புகழ்பெற்ற தொழிலளார் கட்சிப் பிரதிநிதி டோனி பென் கருத்துக்களையும் காணலாம்.
ஏப்ரல் 14, 2014 எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் ‘நவதாராளவாதமும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பு கொண்ட கட்டுரையில், ஊழல் பிரச்சனை பற்றி அன்னா அசாரே போராட்டம் நடத்திய நேரத்தில், நாடாளுமன்றம் தொடர்பாக நடந்த விவாதங்களைச் சுட்டிக்காட்டிய பிரபாத் பட்நாயக் அவற்றின் மீது பின்வருமாறு கருத்துக்களைச் சொல்கிறார்.
“ஊழல் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற நிறுவனம் அவப்பெயர் பெறுவது பற்றி வருந்த வேண்டியதில்லை என சில இடதுசாரிகள் கருதுகிறார்கள். அவர்கள், நாடாளுமன்றம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக நிறுவனம்தான் என்பதால், ‘மக்கள்’, நாடாளுமன்றம்பால் அதிருப்தி அடையும்போது, இடதுசாரிகள் மக்களோடு இருக்க வேண்டுமேயொழிய நாடாளுமன்றத்திற்கு வக்காலத்து வாங்க வேண்டியதில்லை என்கிறார்கள்”.
“‘மக்களை’, இவ்வகையில் லட்சியமயப்படுத்துவது இரு காரணங்களால் தவறாகும்:
1. நாடாளுமன்றத்திற்கு எதிராக தமது கோபத்தை உரத்த குரலில் வெளிப்படுத்தும் ‘மக்கள்’, பரந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அல்ல; அவர்கள் ஒரு சிறு துணைப் பிரிவே ஆவார்கள். உண்மையில், இந்தக் கணத்தில், தாய்லாந்தில் வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன; (அரசாங்கத்தையே மாற்றிய உக்ரைன் பற்றி சொல்லத் தேவையில்லை) இந்த வீதி ஆர்ப்பாட்டங்கள், மொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவை எனக் காண்பது கடும் தவறாகும்.
2. ஒட்டுமொத்த மக்களையும் கூட இடதுசாரிகள் கடவுளர் போல் வழிபாட்டுக்குரியவர்கள் ஆக்கிவிடாமல், மக்களின் உணர்வின் முன் மண்டியிடாமல் அந்த உணர்வை மாற்றியமைப்பதற்குக் கவனம் செலுத்திட வேண்டும்.”
“ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஒரு சம்பிரதாய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே, நாடாளுமன்றம் அமைந்துள்ளது; இது, சாதிய அமைப்பில் காலாகாலமாய் நிறுவனமயப்படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டுள்ள சமத்துவமின்மை என்ற உணர்விற்கு அந்நியமானது; அதனால் நாடாளுமன்றம் என்ற நிறுவனத்தை அவப்பெயருக்குள்ளாக்குவதை சமத்துவக் கோட்பாட்டையே அவப்பெயருக்குள்ளாக்குவதற்கு பயன்படுத்தப்பட முடியும். மட்டுமின்றி இது ஒரு சமத்துவமின்மை கலாச்சாரத்தை மறு உறுதி செய்யும், அது பாசிசத்திற்கு தீனி போடும்.”
“இதற்கு மாற்றானதை நம்புவது, அதாவது இந்த முதலாளித்துவ ஜனநாயக நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுவது பாசிச சக்திகளை அல்லாமல் புரட்சிகர சக்திகளையே வலுப்படுத்தும் எனக் கருதுவது, ஒரு மாயையே ஆகும்.”
பிரபாத் பட்நாயக், நாடாளுமன்றம் என்ற நிறுவனத்தை அவப்பெயருக்குள்ளாக்குவது, பாசிசத்தை நோக்கிய ஒரு சாய்வுக்கு எதிரான ஓர் உள்ளார்ந்த கோட்டையை அப்புறப்படுத்துவது ஆகும் என்ற அளவுக்கு தமது வாதத்தை நீட்டிக்கிறார்.
பிரபாத் பட்நாயக்கின் வாதம் பற்றிய நமது விமர்சனங்களுக்குப் பிறகு வரலாம். அதற்கு முன்பு, இங்கிலாந்தின் ஆகச்சிறந்த பிரதமர் ஆகியிருக்கக் கூடியவர் ஆனால் பிரதமர் ஆகாதவர் என்று ஏற்றிப் போற்றப்பட்ட டோனி பென், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் பற்றி சொன்ன விசயங்களைப் பார்ப்போம்.
1. சிவில் சர்வீஸ் அதாவது உயர் அதிகாரிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கொள்கை முயற்சிகளை வீணடிக்கும் ஆற்றலும் திறமையும் உண்டு.
2. தொழிலாளர் கட்சி ஜனநாயகமற்ற ஓர் கட்டமைப்பாகவே உள்ளது; நாடாளுமன்றத் தொழிலாளர் கட்சி, கட்சி உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் பதில் சொல்லக் கடமைப்பட்டதல்ல; அமைச்சரவை, எம்பிக்களால் கட்டுப்படுத்தப்பட முடியாததாகும்; அமைச்சரவை சேர்க்கையை முடிவு செய்வதில், பிரதமருக்கு சற்றும் பொருந்தாத கூடுதல் செல்வாக்கு இருக்கிறது, அவர் அளவுக்கதிகமாய் ஆதிக்கம் செலுத்துகிறார்.
3. தொழிலதிபர்களும் வங்கியதிபர்களும், தொழிலாளர் கட்சி அரசாங்கங்களை உருட்டி மிரட்டும் விதத்தில், பொருளாதார நிர்ப்பந்தங்களை செலுத்தும் சக்தியை செயல்படுத்துகின்றனர்.
4. ஊடகங்கள், பொது விவாதத்தில் மேலோங்கிய வடிவங்கள், சக்திவாய்ந்தவர்கள் வசதிபடைத்தவர்கள் மற்றும் முன்னுரிமை படைத்தவர்களுக்கு சாதகமாக மட்டுமே இருப்பதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டுள்ளன.
டோனி பென், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு படிப்பினைகளும், இங்கிலாந்து அரசாங்கம், அதனை தேர்ந்தெடுத்த வாக்காளர்களாலோ அல்லது எம்பிக்களாலோ மேலோட்டமாகத்தான் ஆளப்படுகிறது என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது என்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உண்மையில், சாராம்சத்தில் அப்படியே இருக்கிற ஓர் அமைப்பு முறை மீது, தலைமை தாங்க அவ்வப்போது நிர்வாகம் செய்யும் குழுக்களை மாற்றுவது மட்டுமே என்கிறார். பிரிட்டிஷ் மக்கள் தம்மைத் தாமே, பிரிட்டிஷ் அரசியல் அமைப்பு முறையில் தாம் அனுபவிக்கும் அதிகாரம் என்ன எனக் கேட்டுக் கொண்டால், கிட்டத்தட்ட எதுவுமே இல்லை என்ற பதில் கண்டு வியப்படைவார்கள் என்கிறார்.
டோனி பென் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில் ஆகக் கூடுதலான அனுபவம் கொண்டவர் அவர் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு என்றுமே அறைகூவல் விடுத்தவர் அல்ல. அவர் தத்துவ கருத்தியல் மட்டத்தில், நாடாளுமன்றம் தவிர்த்த பாதையே முதன்மையானது என முடிவுக்கு வந்து பிரகடனப்படுத்தியவர் அல்ல. ஆனபோதும், அவரது அரசியல் அனுபவம், பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு போலியானது எவ்வளவு மேலோட்டமானது என்பதை அவருக்கு மிகவும் தெளிவாக உணர்த்தியிருந்தது.
“நம் மீது செலுத்தப்படும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத அதிகாரத்தை, நாமே நேரடியாக எதிர்த்திடாமல் நாம் சமூகத்தை மாற்றமுடியாது. இது வன்முறைப் புரட்சிக்கான அழைப்பல்ல. பாராளுமன்றவாதிகளின் வீண் ஜம்பங்களுக்கு உதவுவதற்கு மாறாக, நாடாளுமன்ற முறையை மக்களுக்கு சேவை செய்ய வைக்க, கீழிருந்து மாற்றம் என்ற போர்த்தந்திரத்திற்கான, வெகுமக்கள் ஜனநாயகத்திற்கான அழைப்பேயாகும்.” இப்படிச் சொல்லும் டோனிபென் தத்துவ மற்றும் கருத்தியல் மட்டத்தில் நாடாளுமன்றம் தவிர்த்த பாதை என திட்டவட்டமாக சொல்லாதபோதும், அரசியல் வழி என்ற விதத்தில் நாடாளுமன்றம் தவிர்த்த பாதையை நெருங்கிவிடுகிறார். அவருக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின்பால் எந்த மோகமும் இல்லை. நடைமுறை அரசியல் பொருளில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை டோனிபென் பன்றித் தொழுவமாகவே புரிந்து வைத்துள்ளார். இதனால் அவர் எந்தவிதத்திலும் பாசிசத்திற்கு துணை போகும் கருத்துக்களுக்கு வலு சேர்த்தார் எனச் சொல்ல முடியாது.
இங்கேதான், பிரபாத் பட்நாயக் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற இந்திய நாடாளுமன்ற சம்பிரதாய ஜனநாயகத்தை ஏதோ ஒரு விதத்தில் உயர்த்திப் பிடிக்கிறார். இடதுசாரி இயக்கம் போதுமான அளவுக்கு வலுவாக இல்லை, ஒரு வலதுசாரி சாய்வு தொடர்கிறது, அந்தத் தொடர்ச்சி கார்ப்பரேட் பாசிச மோடி ஆட்சிக்கு இட்டுச் சென்றுள்ளது என்பவையெல்லாம் உண்மைதான் என்றபோதும், நாடாளுமன்றம் என்ற முதலாளித்துவ நிறுவனம்பால் எந்த மாயையும் தோன்றவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்வது மிகமிக அவசியமானது. பாஜக ஆபத்து, சங்பரிவார் ஆபத்து என்று சொல்லி காங்கிரசோடு ஒரு போர்த்தந்திர உறவை இகக, இகக(மா) சில பத்தாண்டுகள் கொண்டிருந்தன. பாசிசமா, நாடாளுமன்றமா என எதிரெதிராக இரு விசயங்களை நிறுத்தி, நாடாளுமன்றத்தை ஒரு நிறுவனம் என்ற விதத்தில் உயர்த்திப் பிடிப்பது, அறிவுத்தள மோசடியாக மட்டுமே இருக்க முடியும்.
மோடியோ வேறு எவரோ நாடாளுமன்றத்தை (அது எவ்வளவுதான் பலவீனமாக இருந்தாலும்) பொருட்படுத்தவில்லை என்றால், கம்யூனிஸ்ட்களும் அதை எதிர்க்க வேண்டும். இந்திரா காந்தி செய்தது போல் அவசர நிலை பிரகடனம் செய்தால், நிச்சயமாக அதனை எதிர்த்திட வேண்டும். நாடாளுமன்றம் தவிர்த்த பாதையை பின்பற்றுபவர்கள் கூட, நாடாளுமன்றத்திற்குள் புரட்சிகர எதிர்க்கட்சியாக செயல்பட ஆகக் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
தேர்தல்களிலும் கூட வர்க்க மோதல் இருக்கிறது என்ற புரிதலோடு தேர்தல் போராட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பாசிச சக்திகள் விடாப்பிடியாய் தொடர்ச்சியாய் அனைத்து முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களையும் சிதைத்து வருவதை எதிர்க்க வேண்டும் என்பதைத்தான் பிரபாத் பட்நாயக் வலியுறுத்துகிறார் என்றால், நாமும் உடன்படலாம். ஆனால் பாசிச ஆபத்து, கார்ப்பரேட் பாசிச கையகப்படுத்துதல் ஆபத்து நிலவி வருகிற இந்தியாவில், அதையே காரணமாகக் காட்டி, மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை வெறுப்பை சீற்றத்தை சம்பாதித்துள்ள நாடாளுமன்றத்தை, கவுரவப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை.
- தொடரும்