06.07.2014 அன்று சென்னை கட்சிக் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மவுலிவாக்கம், உப்பரப்பாளையம் விபத்தில் பலியான
தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள்
தோழர்கள் கே.பாரதி, இரணியப்பன் கலந்து கொண்டனர். 20 கிளைகளின் செயலாளர்கள்
கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜூலை 28 அன்று கட்சிக் கிளைகளை கூட்டுவது
எனவும், மாதம் இருமுறை தீப்பொறி வாசகர் வட்டக் கூட்டங்கள் நடத்துவது
எனவும், மாதம் இருமுறை உள்ளூர் கமிட்டிகள் நடத்துவது எனவும் முடிவுகள்
எடுக்கப்பட்டன. ஜூலை 28 முதல் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் மக்கள்
சந்திப்பு இயக்கத்தில் ஈடுபடுத்திடவும், புதியதாக உறுப்பினர் சேர்க்கவும்,
கிளை அமைக்கவும் வாய்ப்புள்ள பகுதிகளில் திட்டமிட்டு வேலை செய்வது என்ற
முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜூலை 28க்குள் லெவி பாக்கி மாநில பங்கை
செலுத்திடவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.