COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

ஜூலை 23, தாமிரபரணி படுகொலை நினைவுதின ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான தலித்துகள் கூலி உயர்வு கேட்டு போராடியபோது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து படுகொலையை அரங்கேற்றியது.

இன்றளவும் அதன் தொடர்ச்சியாக தலித்துகள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது. தாமிரபரணி படுகொலை நினைவு நாளான ஜூலை 23 அன்று நெல்லையில் இகக(மாலெ) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இகக(மாலெ) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுப்பிரமணியன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.சங்கரபாண்டியன், ஜி.ரமேஷ், எஸ்.எம்.அந்தோணிமுத்து, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் சிம்சன், ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர்கள் அந்தோனிராஜ், கணேசன், சுந்தர்ராஜ், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புச் செல்வி, சுசீலா, இகக (மாலெ) நெல்லை மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ரவிடேனியல், சபாபதி, ராமையா, விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் ஆவுடையப்பன், கூடலிங்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

விழுப்புரத்தில் இகக(மாலெ) நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



Search