COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

நெல்லை மாநகராட்சிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பொதுக்கழிப்பிடம் சீர்படுத்திடக்கோரி மாநகராட்சிக் கவுன்சிலர் மாதவனிடம் தோழர்கள் ஆவுடையப்பன், சுந்தர்ராஜ், கண்ணன் ஆகியோர் மனு கொடுக்கச் சென்றபோது கவுன்சிலர் மாதவன் தோழர்களை  மரியாதைக் குறைவாக நடத்தி, துணை மேயர் ஜகன்னாதன் (எ) கணேசன் மிரட்டியுள்ளார். இதைக் கண்டித்து 23.06.2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை நகர கமிட்டிச் செயலாளர் தோழர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள்  தோழர்கள் கணேசன், கருப்பசாமி, அன்புச் செல்வி, சபாபதி, ரவிடேனியல், ராமையா, கிளைச் செயலாளர்கள் கண்ணன், ஆவுடையப்பன், சங்கர், சிவகாமிநாதன், சேக் முகமது, சுப்பிரமணியன், காட்டுராஜா, ஜானகிராமன், மாரிமுத்து, செல்வகணபதி, வெங்கட்ராமன், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும் எரிவாயு விலையை உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் தோழர்கள் முழக்கமிட்டனர்.

Search