களம்
குமரி மாவட்ட மாலெ கட்சி தலைவர்கள் மீது
அவதூறு பரப்பி சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) குமரி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து மீதும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மேரி ஸ்டெல்லா, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சுசீலா ஆகியோர் மீதும் அவதூறு பரப்பி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குளச்சலில் அண்ணா சிலை அருகில் 14.10.2012 மாலை 4 மணி முதல் 7 மணி வரை பெருந்திரள் தர்ணா நடைபெற்றது.
தோழர் மேரி ஸ்டெல்லா தலைமையில் நடந்த கூட்டத்தில், கந்து வட்டிக்கு எதிரான பிரச்சார இயக்க தலைவர் ரவி, ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் அந்தோணிராஜ், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர் தோழர் தேன்மொழி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எ.கரீம், மாவட்ட துணை செயலாளர் சகாபுதீன், நாகர்கோவில் நகர தலைவர் பி.எம்.மீராசா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் முகமது யூசுப், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் மார்ட்டின், பெண்கள் கழக மாவட்ட செயலாளர் சுசீலா, கட்சி முன்னணியினர் நிம்மி, குமாரசாமிபிள்ளை, ராமசாமி, ஜெயன், சோமசுந்தரம், ஜாக்குலின், மீனவர் சங்க தலைவர் ஆரோக்கிய சுனில், நாக சந்திரபிள்ளை, சார்லஸ் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அந்தோணிமுத்து, மாநில செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவதூறு போஸ்டர் ஒட்டிய குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் இருந்தால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அவதூறு சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்யக் கோரி அக்டோபர் 10 அன்று குளச்சலில் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமையில் தோழர்கள் மேரி ஸ்டெல்லா மற்றும் சுசீலா ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை குளச்சல் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அன்று மாலை விடுவிக்கப்பட்டனர். இந்த பட்டினிப் போராட்டத்தில் மாலெ கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் கலந்துகொண்டார்.
முன்னதாக கட்சியின் சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் என்.குமரேஷ், கட்சியின் மாநில தலைமையகம் சார்பாக மாநில காவல்துறை தலைவரை சந்தித்து அவதூறு சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குமரி காவல்துறையினருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் குப்பாபாய் தலைமை யில் தோழர்கள் லில்லி மற்றும் சுஜாதா ஆகியோர் கொண்ட குழு மாநில பெண்கள் ஆணையத் தலைவரை சந்தித்து, பெண் தோழர்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியது. மாநில காவல் துறை தலைவரும் மாநில பெண்கள் ஆணையத் தலைவரும் ஆவன செய்ய உறுதியளித்தனர்.