COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, November 3, 2012

3

இரங்கல்

தோழர் முருகையனுக்கு செவ்வஞ்சலி

 

ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், இகக (மாலெ) புதுக்கோட்டை மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் முருகையன் (வயது 57) 15.10.2012 அன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.

அக்டோபர் 13, 14 தேதிகளில் நடைபெற்ற மாலெ கட்சி மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் 14.10.2012 அன்று இரவு தஞ்சை ரயில் நிலையம் சென்று டெல்லியில் நடைபெறவுள்ள கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பு மாநாட்டுக்கு செல்ல ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து வந்தார். மறுநாள் காலை மாரடைப்பால் காலமானார்.

புதுக்கோட்டை மாவட்டம் குண்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் விடாமல் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பல மக்கள் பிரச்சனைகளில் போராட்டத்தில் முன்நின்றவர். அவரது இறுதி ஊர்வலத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி உட்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள், பிற இடதுசாரி இயக்கத்தினர், நூற்றுக்கணக்கான ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவரது அஞ்சலிக் கூட்டத்தில் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர தோழர்கள் உறுதியேற்றனர்.

Search