COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 22, 2012

1

களம்

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூடு!

அக்டோபர் 29 சட்டமன்ற முற்றுகை போர்

மாலெ கட்சி மாநிலக் கமிட்டியின் முடிவின் அடிப்படையில் திட்டமிட்ட வகையில் இக்கிளர்ச்சியில் கட்சி ஊக்கமாக பங்குபெற்றது. விழுப்புரம், நெல்லை, நாகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக கட்சியின் பங்கேற்பு பற்றி செய்தி கொண்டுவரப்பட்டது. அக்டோபர் 17 அன்று கட்சி மாநில அலுவலகத்தில் தோழர்கள் குமாரசாமி, பாலசுந்தரம், ஜானகிராமன், சேகர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கட்சியின் பங்கேற்பு தயாரிப்பு குறித்து திட்டமிடப்பட்டது. அக்டோபர் 28 அன்று தோழர்கள் குமரேஷ், .எஸ்.குமார், ராதாகிருஷ்ணன், சேகர், பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கடைசி நேர தயாரிப்பு குறித்து பேசப்பட்டது. போலீஸ் கெடுபிடியை மீறி கலந்து கொள்வது பற்றி திட்டமிடப்பட்டது.

அக்டோபர் 29 அதிகாலை கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் வேணு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட இககமாலெ தோழர்கள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டனர். வாகனங்கள் ஏற்பாடு போன்றவை ஏதுமின்றி போலீஸ் கெடுபிடிகளையும் மீறி சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இருந்து சுமார் 250 தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், .எஸ்.குமார், பாரதி, இரணியப்பன், சங்கரபாண்டியன், தேன்மொழி, அந்தோணிமுத்து, மேரிஸ்டெல்லா, ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் பழனிவேல், இளைஞர் அமைப்பு தலைவர்கள் தோழர்கள் தனவேல், ராஜசங்கர், சுஜாதா, மாணவர் அமைப்பு தலைவர்கள் தோழர்கள் மலர்விழி, ரமேஷ்வர்பிரசாத், சீதா, தலைமையக உறுப்பினர் தோழர் குமரேஷ், தோழர்கள் மோகன், முனுசாமி, லில்லி, அன்பு, உள்ளிட்டோர் முன்னணியில் நின்று செயல்பட்டனர். கொடிகள், பேனர், கூர்மையான முழக்கங்கள் திரண்டிருந்தோர் மத்தியிலும் ஊடகத்தார் மத்தியிலும் பெரும் ஈர்ப்பைக் கொண்டு வந்தன. அனைவரும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இளைஞர், மாணவர்கள் பங்கு ஈர்ப்புக்கு முக்கிய காரணம்.

மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கூர்மையாக முன்வைத்த கருத்துகள் அணிதிரண்டோரை ஈர்த்தது. வைகோ, திருமாவளவன், ஜவஹிருல்லா, நெடுமாறன் போன்றோர் கூர்மையான அதிமுக எதிர்ப்பை முன்வைக்காத நிலையில், கட்சியின் காட்டமான அதிமுக ஆட்சி எதிர்ப்பு கூடியிருந்தோர் மத்தியில் நன்கு எடுபட்டது. இந்த தலைவர்களின் பேச்சு, அணுகுமுறைகளில் நாடாளுமன்ற தேர்தலும் எதிரொலிப்பதாகவே இருந்தது.

திட்டமிட்ட தயாரிப்பும் செயலூக்கமிக்க பங்கெடுப்பும் கட்சியின் அடையாளத்தை, இருப்பை நன்கு பதிவு செய்வதாக இருந்தது. தொலைக்காட்சி ஊடகங்களில் நமது கட்சியும், தலைவர்களும் கவனிக்கத்தக்க வகையில் பதிவாகியிருந்தனர். பிற இயக்கங்களுடன் தொடர்பு கொள்வது, ஒருங்கிணைப்பது நமது கட்சியை முன்னிறுத்துவது போன்ற விசயங்களில் தலைமையக உறுப்பினர் குமரேஷ் பங்கு குறிப்பிடத்தக்கது.

Search