கடிதம்
ப.சிக்கு
பசித்தவனின் கடிதம்
அய்யா ப.சி அவர்களுக்கு, வணக்கங்க. நலமாத்தான் இருப்பீங்க. உங்க கட்சிக்காரங்க ப.சிதம்பரம்ங்கிற உங்க பெயரை சுருக்கி, பசியறியா உங்களப் போய் ப.சின்னு கூப்பிடுதாங்களேன்னு நினைப்பேன். அப்புறம் கருப்பா இருக்கிறவங்களுக்கு வெள்ளைத்துரைன்னு ஆசையா பெயர் வப்பாங்கள்ள, அது மாதிரி இருக்கும்னு நினைச்சுக்குவேன்.
நீங்க மீண்டும் நம்ம நாட்டோட நிதியமைச்சர் ஆகியிருக்கீங்க. நிரந்தர நிதியமைச்சர்ன்னு கூட உங்களைச் சொல்லலாம். கொஞ்ச காலம் பிரதமர் கனவில் இருந்த பிரணாப் முகர்ஜிக்காக விட்டுக் கொடுத்தீக. கடந்த தேர்தல்ல சிவகங்கையில் நீங்க நிசத்துல தோத்துப் போனதாகவும் உங்க சேவை இந்த நாட்டுக்கு ரொம்பத் தேவைங்கறதால உங்கள செயிக்க வைச்சாங்கன்னு கூட சொல்லிக்கிட்டாக. அப்படி முக்கியமான ஆளு நீங்கங்கறதால உங்க பேச்சை டிவிலயும் பேப்பர்லயும் உத்து உத்து பார்ப்பேங்க. நீங்களும் நம்ம நாடு வல்லரசாக வேண்டும். உலக நாடுகளோடு போட்டி போட வேண்டும். அதற்கு 8 சதம், 8.5 சதம் பொருளாதார வளர்ச்சியை நாம் எட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்வீங்க. நீங்க மட்டும் இல்லீங்க உங்களுக்கு முன்பு இருந்த பிரணாப் ஜியும் சரி, நம்ம பிரதமரு மன்மோ கன்ஜியும் சரி, அப்புறம் கக்குசுக்கு 35 லட்சம் செலவு செஞ்சார்ல இந்த திட்டக் கமிஷன் தலைவர் அலுவாலியா எல்லாரும் அப்படித்தான் சொல்லுதீங்க. எனக்கு ஒரு விவரமும் புரிய மாட்டேங்குது. நம்ம பள்ளிக் கூடங்கள்ளகூட படிக்கிற புள்ளைங்க பாஸôகுறதுக்கு 35 சதம் அதான் நூத்துக்கு 35 மார்க்கு வாங்கனுமுன்னு சொல்றாங்க. டாக்டர், என்ஜினியர் படிக்க 98.5 சதம் எடுத்தாக்கூட சீட் கிடைக்க மாட்டேங் குது. அப்படியிருக்க நீங்க என்னடான்னா 8 சதம் 9 சதம் பொருளாதார வளர்ச்சியை எட்டிட்டா எங்கேயோ போயிடலாம்னு சொல்றீங்க. ஆனா நானும் பல வருசமா பார்த்துக்கிட்டே இருக்கேன் நீங்க இதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கீங்க. ஆனா அந்த எட்டு சத வளர்ச்சிகூட எட்டுன பாட்டக் காணும். என்ன புடலங்கா பொருளாதார வளர்ச்சியோ? உங்க பொருளாதார அறிவு நமக்கு இல்லங்க பார்த்தீங்களா ஒண்ணும் புரிய மாட்டேங்குது.
சமீபத்துல ஒரு கூட்டத்தில் பேசியதைப் பார்த்தேன். ஒரு நாட்டின் கடன் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கனும். அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். அதிக கடனை அள்ளிக் குவித்த நாடுகள் எல்லாம் இப்போ பொருளாதார, நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. நம் நாடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பவில்லை. நம்ம நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 5.3 சதவீதமாக ஆக்கனும். அது சவாலான ஒன்று தான். ஆனா அதைச் சாதிக்க முடியும். அதுக்கு வருமானத்தைப் பெருக்கி செலவைக் குறைக்கனும் அப்படீன்னுல்லாம் சொல்லிட்டு கடைசியா Let us Live with in our means சொன்னீங்க. அதான் இருக்கறதக் கொண்டு வாழனும்முன்னு சொன்னீங்க.
ரொம்பச் சரியாச் சொல்லியிருக்கீங்க. ஆனா, உங்களோட இந்த அறிவுரையெல்லாம் நம்ம நாட்டுல இருக்கிற அம்பானி, கோயல், மிட்டல், அசிம் பிரேம்ஜி, விஜய் மல்லய்யா, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் போன்றவங்களுக்குக் கிடையாதுபோல. என்ன மாதிரி பசியாளியா, ஒரு நாளைக்கு 20 ரூவா செலவு செய்யக் கூட வக்கில்லாம இந்தியாவில இருக்காங்களே 80 கோடி பேர் அவங்களுக்குதான் போல. முகேஷ் அம்பானி 28 ஆயிரம் கோடி ரூபாயில் 27 மாடி பங்களா கட்டுவார். அவருக்குப் போட்டியா விஜய் மல்லய்யா 32 மாடி வீடு கட்டுவார். அய்பிஎல் கிரிக்கெட் டீமை பல ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுப்பார். ஆனால், கிங்பிஷர் விமானப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் நஷ்டம் என்பார். உடனே நீங்க பரிதாபப்பட்டு அவரை நஷ்டத்தில் இருந்து காப்பற்ற எங்க வரிப் பணத்தில் இருந்து பெயில் அவுட் கொடுத்து காப்பத்துவீங்க. கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைச்சிருக்கிறவங்க பட்டியல வெளியிட மாட்டீங்க.
அம்பானி பிரதர்ஸ், நரேஷ் கோயல், உங்க காங்கிரஸ் எம்.பி. அனு டாண்டன் போன்ற பெரும் பணக்காரங்க சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில 6000 கோடி ரூபாய்க்கு கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் அரவிந்த் கேஜரிவால் போட்டு உடைத்துள்ளார். குட்டு வெளிப்பட்ட உடனே, இந்தியர்கள் கறுப்புப்பணம் குறித்து பிரான்ஸ் அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் விவரங்களுக்காக விசாரணை நடைபெற்று வருகிறது என்று உங்க அமைச்சகம் அறிவிக்கிறது. அப்படியும் யார் யார்ன்னு பெயர் வெளியிடத் தயாராயில்லை. அது மட்டுமா இத்தனை நாளும் பிரான்ஸ் தகவல் கொடுத்துருக்குன்னு கூட நீங்க மூச்சு விடலையே.
நாட்டுல கடனை கட்டுக்குள்ள வைக்க ணும் இல்லாட்டி நாடு கட்டமண்ணாப் போகும்ன்னு சொல்றீங்க. ஆனால், 2ஜி அலைக்கற்றையில 1,76,000 கோடி, பல பட்டங்கள் பெற்ற உங்க பிரதமரு கையில் இருந்த சுரங்கத் துறையில 1,86,000 கோடி ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்துல 40,000 கோடி ஊழல்னு இன்னி வரைக்கும் ஏதாவது ஒரு ஊழல் டிவியில சொல்லுற மாதிரி நான் ஸ்டாப்பா நடந்துக்கிட்டே இருக்கே. இந்த ஆண்டுல மட்டும் 6500 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் நடந்திருக்கு. அந்தப் பணமெல்லாம் நம்ம அரசாங்க கஜானாவுக்கு வந்திருந்தாலே நீங்க இப்ப சொல்ற நிதிப் பற்றாக்குறை யெல்லாம் நாட்டில் இருக்காதுங்களே.
ஆனாலும்
பாருங்க
பெரிய
பெரிய
ஊழல்கள் எல்லாம்
உங்க
காங்கிரஸ்
ஆட்சி
யிலதான் நடந்துக்கிட்டிருக்கு.
அப்படியும்
கூட ஊழல்
இந்த
நாட்டில்
புரையோடிப்போய்
உள்ளது. அதை ஒழிக்காமல்
ஓயமாட்
டோம்ன்னு உங்க முன்னோடி
பல பட்டம்
பெற்றவர், என்னமோ
அய்எம்எப்,
உலக வங்கில
எல்லாம்
பதவில
இருந்தவர்ன்னு
சொல்ற
நம்ம பிரதமரு
மன்மோகன்,
அன்றும்
இன்றும்
என்றும் உங்க நிரந்தரத்
தலைவியாயிருக்கிற
சோனியாஜி (அதனாலதான்
அக்டோபர்
31 அன்னை
இந்திரா
நினைவு
நாள்
நிகழச்சி
என்பதற்கு பதிலா
அன்னை
சோனியா
நினைவு
நாள் என்று
பத்திரிகை
செய்தி
சத்தியமூர்த்தி
பவன்ல கொடுத்தாங்க)
வருங்கால
பிரதமர்ன்னு
உங்க
கட்சிக்காரங்க
வர்ணிக்கிற
ராகுல் காந்தி எல்லாரும்
ஓரே மேடையில
நின்னு கொஞ்சம் கூட கூச்சமே
இல்லாம
முழங்குறாங்கன்னு
தெரியல.
உங்க மவன் கார்த்திக்கிடம் சோனியா ஜியின் மருமவன் வதேராவைக் காட்டிலும் அதிக சொத்து உள்ளது என்று டிவிட்ர்ல புதுச்சேரி ரவி ஒரு தகவலைச் சொன்னவுடன் உங்க பதவியைப் பயன்படுத்தி அவரை உடனே கைது செய்து சிறையிலடைத்து விட்டீங்க. நாங்க ஏழை பாழைங்க ஏதாவது பிரச்சினைக்கு போலீசுக்கு போனா பல தடவை அலையவைப்பாங்க. ஆனா, உங்க மவன் இ மெயில்ல புகார் அனுப்பின உடனே அந்த ரவிய புடிச்சி உள்ள போட்டுட்டாங்க. உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதிதான். இந்த கேஜ்ரிவால் அமைப்பைச் சேர்ந்த அந்த ரவி உங்க மகனுக்கு உங்க தலைவியின் மருமவனைக் காட்டிலும் சொத்து கூடன்னு சொன்னா உங்க தலைவிக்கு அது இழுக்குள்ள. அப்ப உங்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்.
அய்ந்து மாசத்துக்கு முன்னால நீங்க ஒரு அற்புதமான விசயத்தைச் சொன்னீங்க. விலைவாசி ஏறிப்போச்சுன்னு எல்லாரும் கூப்பாடு போட்டப்ப நீங்க சொன்னீங்க பாருங்க ஒரு சூப்பர் ஸ்டேட்மென்ட், ‘எல்லாரும்உணவுப் பொருள்கள் விலை கூடிப் போச்சுன்னு சொல்றீங்க. உண்மைதான். உணவுப் பொருள்கள் கொள்முதல் விலை கூடும்போது அது உணவுப் பொருள்களின் விலையில் கூடுதலை ஏற்படுத்தத்தான் செய்யும். ஆனா, கொள்முதல் விலை உயர்வதால் பல மில்லியன் விவசாயிகள் பயனடைகிறார்களே. கரும்பு விலை கூடும் போது சீனி விலை கூடத்தான் செய்யும், நெல் கொள்முதல் விலை கூடினாஅரிசி விலை கூடத்தான் செய்யும். நாம் 15ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கத் தயாராக இருக்கோம் 20 ரூபாய் கொடுத்து ஐஸ்ஸ்கிரீம் வாங்கத் தயாராக இருக்கோம்.. ஆனா 1 கிலோ அரிசிக்கோ அல்லது 1 கிலோ கோது மைக்கோ 1 ரூபாய் கூடுனா ஏத்துக்க மாட்டேங்கிறோம்’ அப்பிடின்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க, எனக்கு அப்படியே புல்லரிச்சுப் போச்சு பாருங்க.
அய்யா சிதம்பரம் அவர்களே, உங்க கண்ணுக்கு நம் நாட்டுல இருக்கற 110 கோடி மக்களும் தினமும் தண்ணீ பாட்டிலும் ஐஸ் ஸ்கிரீ மும் வாங்குறது போல தெரியுதா? ஒரு நேரக்கஞ்சிக்கு வழியில்லாம, புழுத்துப் போன ரேசன் அரிசிக்கும் கோதுமைக்கும் அன்றாடம் அல்லல்படும் அன்றாடங்காய்ச்சிகள் இந்தியாவில் 80 கோடிக்கு மேல இருக்காங்கன்னு உங்க அரசாங்கக் கணக்குதான் சொல்லுது. அது உங்க பெரீய கண்ணுக்கு தெரியலையா? தெரியாது. ஏன்னா, நீங்க செட்டி நாட்டுச் சீமான். உங்க கண்ணுல பணக்காரங்க மட்டும்தான் படுவாங்க.
இன்னொன்னு சொன்னீங்கல்ல கொள்முதல் விலை அதிகரிக்கிறதால பல மில்லியன் விவசாயிகள் பயனடைகிறாங்கன்னு. அப்ப எதுக்கய்யா லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை பண்ணி செத்துகிட்டு இருக்கிறாங்க நம்ம நாட்டுல? இப்போ என்னடான்னா, விவசாயிகள் நலன் காக்கன்னும் மக்களுக்கு தரமான பொருள் கிடைக்கும்ன்னு சொல்லி சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கொண்டு வரப் போறீங்க. அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவுக்கு வந்தால் இந்திய விவசாயிகள், சிறு வணிகர்கள் செழிப்படைவார்கள் என்று முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிற கதை போல பேசுறீங்க நீங்களும் உங்க கட்சித் தலைவியும் பிரதமரும்.
வால்மார்ட்
வந்தா
அனுமாரு
வால்
போல அது
மட்டும்தான்
வளர்ந்து
கொண்டே
போகும். விவசாயிங்க
அது வைச்ச
விலைக்குத்
தான் விக்கனும்.
வால்மார்ட்
கொடுக்குற
பொருளைத்தான்
அது கொடுக்கிற
விலைக்குத்
தான் மக்கள்
வாங்க
வேண்டும்.
வால்மார்ட்டில்
வேலை பார்க்கும்
தொழிலாளர்கள்
அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும்
தங்களுக்கு
உரிமை
கோரி போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாத்தைக்
காட்டிலும்
எங்கள
மாதிரி கஷ்ட ஜீவன்கள்
அந்த
கடைப்
பக்கமே
போக முடியாது.
இதெல்லாம்
உங்களுக்கு
தெரியாதது இல்ல. ஆனாலும்
நீங்க
எங்கள
மாதிரி பசியாளியைக்
காட்டிலும்
பணக்காரங்களுக்கு
சேவை
செய்வதில்தான்
பெருமைன்னு
நினைக்கிறீங்க
நீங்க பதவியில இல்லாதப்போ வேதாந்தா நிறுவனத்தில் போர்டு மெம்பராக இருப்பீங்க. வோடாபோன் நிறுவனத்திற்காக வழக்காடு வீங்க. பதவிக்கு வந்துட்டா படைகளை அனுப்பி மலைவாழ் மக்களை மலைகளில் இருந்து விரட்டிட்டு வேதாந்தாவுக்கு தாதுப் பொருள்களைக் கொள்ளையடிக்க இடம் புடிச்சுத் தருவீங்க. வோடாபோன் நிறுவனம் அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கட்டாம இருக்க வக்காலத்து வாங்குவீங்க. ஆனா, எங்க வீட்டுப் பிள்ளைங்க படிக்ககல்விக் கடன் கொடுக்கப்படும்னு அறிவிச்சுட்டு பல கன்டிசன்கள் போட்டு எங்க குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வைப்பீங்க. உங்களுக்கு எங்க ஓட்டு மட்டும் வேணும்.
கஞ்சி குடிப்பதற்கிலார். அதன் காரணம் இவையெனும் அறிவும் இலார் என்கிற காலம் மலையேறிட்டு இருக்கு. ப.சி அய்யா நீங்களும் உங்க கூட்டாளிங்களும் ரொம்ப நாளைக்கு எங்கள ஏமாத்த முடியாது பார்த்துக்குங்க.
இப்படிக்கு
பாரதப் பசியாளி