நாட்டு நடப்பு
அனைத்து
ஆளும் வர்க்கக்
கட்சிகளும் ஊழல்
பிடித்த தொழில்-அரசியல்
கூட்டின் வலைக்குள்
பாஜக தலைவர் நிதின் கட்கரி, சந்தேகத்துக்குரிய தொழில்களின் இருண்ட வலையின் தலைவர் என அம்பலப்படுத்தப்பட்டுள்ளார். கட்கரியின் சர்க்கரை மற்றும் மின் உற்பத்தி ஆலைகளின் முதலீட்டாளர்கள் என 18 நிறுவனங்கள் போலி முகவரிகள் கொண்டுள்ளன. அல்லது முகவரிகளே இல்லாமல் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல, கட்கரியின் வாகன ஓட்டுனர், ஆருடக்காரர் ஆகியோரின் பெயர்களில் உள்ளன. முக்கிய எதிர்க்கட்சியின் தேசியத் தலைவர், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் போலி நிறுவனங்களின் ராஜ்ஜியத்தின் தலைவராகவும் உள்ளார்.
பாஜகவின் தலைவராக நிதின் கட்கரி நிர்ணயிக்கப்படுவதை மேற்பார்வையிட்ட ஆர்எஸ்எஸ்ஸ÷ம், பாஜகவும் நிதின் கட்கரியை, அவர் இரண்டாவது முறை கட்சியின் தலைவராகத் தொடர்வது சந்தேகம் என்றாலும், பாதுகாக்கின்றன. வதேராவை காங்கிரஸ் பாதுகாத்தது போலவே, எல்.கே.அத்வானி, கட்கரி மீதான குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் அல்ல என்றும், ‘தொழில் தர்மங்கள்’ சம்பந்தப்பட்ட விவாதத்துக்குரிய விசயங்கள் என்றும் சொல்லியுள்ளார். இப்போது குஜராத்தில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் காவி ‘பாபா’ ராம்தேவ், கட்கரி ஊழல் வெறும் ‘தொழில்நுட்ப தன்மை’ கொண்டது என்றும் உண்மையான ஊழல் அல்ல என்றும் சொல்லி, கருப்புப் பணத்துக்கு எதிரான தனது போர் என்று அழைக்கப்பட்டதன் உள்ளீடற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஊழலற்ற ‘வித்தியாசமான கட்சி’ என்ற பாஜகவின் பிம்பம் நீண்டகாலம் முன்பே, தேஜமு ஆட்சி காலத்தில், அன்றைய தலைவர் பங்காரு லக்ஷ்மண், ஆயுத பேரத்தில், ‘நன்கொடை’ பெற்றபோது கேமராவில் பிடிபட்டபோதே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. பங்காரு முதல் நிதின் வரையிலான பயணம், ஊழலும் - ஒரு கட்சியாக பாஜகவும் - சந்தேகத்துக்குரிய நன்கொடைகளைப் பெறுவது முதல் சிக்கலான தொழில் - அரசியல் கூட்டை நடத்துவது வரையிலான நடவடிக்கைகள் மூலம், உருவாயின என்பதன் கதையே.
உண்மையில், தொழில், பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு, நவதாராளவாத இந்தியாவில் நடக்கிற ஊழல்களின் இதயமாக உள்ளது. இந்தக் கூட்டு எவ்வளவு ஆழமானது என்பதற்கு சமீபத்தில் அய்முகூ அரசாங்கம் செய்துள்ள அமைச்சரவை மாற்றம் மற்றொரு பட்டவர்த்தனமான உதாரணம். ஜெய்பால் ரெட்டியை, ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவமற்ற அமைச்சகத்துக்கு, ‘தண்டனை பதவிக்கு’ தூக்கி அடித்தது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆணைப்படியே நடந்தது தெளிவு.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து அய்ந்தாவது ஆண்டாக இந்தியாவின் மிகப் பெரியப் பணக்காரராக இருக்கிறார். ஆளுகிற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் இயற்கை செல்வாதாரங்கள் மீது அவர் கொண்டுள்ள கட்டுப்பாடுதான் இந்த சாதனைக்குக் காரணம். ஒப்பீட்டுரீதியில் சுதந்திரமான பெட்ரோலிய அமைச்சர்களை அவர் மீண்டும் மீண்டும் மாற்ற முடிந்தது. அந்த அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு கொண்டுள்ளது. அமைச்சர்கள் இடத்தில் அம்பானி தேர்ந்தெடுக்கும் நியமனதாரர்கள் நியமிக்கப்படுவார்கள். 2006ல் பெட்ரோலிய அமைச்சராக இருந்த மணிசங்கர அய்யர் இடத்தில் முரளி தியோரா வந்தார்; இப்போது 2012ல், ஜெய்பால் ரெட்டியை மாற்றி முகேஷ் அம்பானி மீண்டும் சாதனை படைத்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் பிரிட்டிஷ் நிறுவனமான பிபிக்கும் இடையிலான ஏற்பாட்டுக்கு அனுமதிதர ரெட்டி மறுத்துவிட்டார்; மத்திய தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தியதுபோல், கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை தொடர்பான கடமைகள் மீறப்பட்டதற்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமே பொறுப்பு என்றார்; ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது மற்றுமொரு மத்திய தணிக்கையாளர் தணிக்கையை முன்தள்ளினார்; 2014க்கு முன் எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கோரிக்கைக்கு தடையாக இருந்தார்; ரிலையன்சுக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்படுகிற, தியோராவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. பிரதமர் அலுவலகம், அப்பட்டமாக, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக நடந்துகொண்டது. இப்போது மன்மோகன் சிங் ரிலையன்சின் தொழில் நலன்களைப் பாதுகாக்க ரெட்டியை அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
ஊழல் பிடித்த தொழில் – அரசியல் கூட்டை, கூடாநட்பை மேம்படுத்தும் நவதாராளவாத கொள்கை ஆட்சிக்கு எதிரான உறுதியான எதிர்ப்பில் இருந்து மட்டுமே, ஓர் உண்மையான அரசியல் மாற்று உருவாகும். இந்தக் கூட்டு, ஆளுகிற காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கட்சியான பாஜகவையும், தனது வலையில் இறுக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு பிராந்தியக் கட்சிகளும் மறைமுகமான தொழில் - அரசியல் சதுப்புக்குழிக்குள் ஆழமாகச் சிக்கிக் கொண்டுள்ளன. ஆகக்கூடுதலாக காங்கிரசுடனும் பாஜகவுடனும் உறவு கொண்டுள்ளன. அதுபோன்ற சக்திகளிடம் இருந்த எந்த மாற்று அரசியலும் உருவாகாது. பெருநிறுவனக் கொள்ளையை, கூடாநட்பை, ஊழலை உறுதியாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் இயக்கம், ஒரு தீவிரமான தேசிய அரசியல் லட்சியம் மற்றும் மாற்று திசைவழியின் மய்யமாக எழ வேண்டும்.
(எம்எல்
அப்டேட்,
2012, அக்டோபர்
30 - நவம்பர்
5)