பேரணி
சிபிஅய்
எம்எல் பேரணி அய்க்கிய
ஜனதா தள தலைவர்களை
பேச்சு மூச்சில்லாமல்
குழம்ப வைத்துவிட்டது
நவம்பர்
9 அன்று
பாட்னாவில்
மாலெ
கட்சி
நடத்திய
மாற்றத்துக்கான
பேரணி
பற்றி
நவம்பர் 10 அன்று
பாட்னா,
பீகார்
டைம்ஸ்
இதழில்
வெளியான
செய்தி
நவம்பர் 9 அன்று இகக(மாலெ) நடத்திய மாற்றத்திற்கான பேரணியில் பேசியவர்கள், நிதிஷ்குமார் அரசாங்கம் ஊழலில் ஊறி திளைத்திருக்கிறது என்றும் அது முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்றும் விமர்சித்தனர். மத்திய அய்முகூ அரசாங்கம் முதலாளித்துவ அமெரிக்காவின் பாட்டிற்கேற்ப ஆடுவதாகச் சாடினர். இந்த உரைகள் முக்கியமானவைதான்.
ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் இருக்கிறது. பீகார் முதல்வர் நவம்பர் 4 நடத்திய அதிகார் ராலியை (பேரணி) அய்ந்து நாட்களுக்குள் மாலெ கட்சியின் மாற்றத்திற்கான பரிவர்த்தன் ராலி, முழுமையான விதத்தில் பொருளற்றதாக்கிவிட்டது. இரண்டு பேரணிகளில் எவ்வளவு பேர் கலந்து கொண்டார்கள் என்று ஒப்பிட்டு பார்க்கும் விவாதத்தில் ஈடுபட வேண்டியதில்லை. மாலெ கட்சிப் பேரணி உற்சாகமும் பேரார்வமும் நிறைந்ததாக இருந்தது. கூட்டம் கட்டுப்பாடுடன் இருந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் உரைகள் மீது ஆர்வத்துடன் கவனம் செலுத்தினர்.
பண பலம் அதிகார பலம் எதுவும் இல்லாமல் திபங்கர் பட்டாச்சார்யாவின் அமைப்பு நடத்திய பேரணி நிச்சயமாக பிரம்மாண்டமானது. இந்தப் பேரணிக்கு எந்த ரயிலையும் புக்கிங் செய்யவில்லை. நிதிஷ்குமார் பேரணிக்கு 8 ரயில்கள் புக்கிங் செய்யப்பட்டன. அதற்காக, நவம்பர் 3, 4 மகாத்மா காந்தி சேது பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநில அரசு பணித் தேர்விற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் செல்ல முடியவில்லை.
எம்எல் கட்சி பேரணியிலும் போக்கு வரத்து ஸ்தம்பித்துத்தான் போனது. ஆனால் அதற்கு நிதிஷ்குமார் பேரணிக்கு உதவுவதற்கு
வந்ததுபோல் பத்தாயிரம் போலீஸ்காரர்கள் வரவில்லை. எம் எல் கட்சி 15000 பஸ்களை அதற்கு இணையான சிறு வாகனங்களை நிதிஷ் கட்சி போல் வாடûக்கு எடுக்கவில்லை. எம்எல் கட்சி பேரணிக்கு குண்டர்களின் டிஜிட்டல் பேனர்கள் இல்லை. எம்எல் கட்சி பேரணிக்கு சிறையிலிருந்து எந்த ரவுடிகளும் மிரட்டி பணம் வசூலிக்கவில்லை. எம்எல்ஏ வீட்டில் மந்திரி பங்களாவில் இரவு தங்க வைப்பதோ, இலவச விருந்தோ ஏற்பாடு செய்யப்படவில்லை. எம்எல் கட்சிக்கு சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர் கூட இல்லை.
ஆனாலும் 70களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம் நடத்திய அல்லது 90களில் நடந்த பேரணிகளை கண்டிராத, 21ம் நூற்றாண்டில்தான் இளைஞர்களான புதிய தலை முறையினருக்கு, எம்எல் கட்சியின் நவம்பர் 9 பேரணியின் பிரம்மாண்டம் மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. நிதிஷ் குமாரின் அதிகார் ராலிதான் பேரணிகளின் தாய் என்ற வாதம் தவறு என அம்பலமாகிவிட்டது.
தாமதமாக அல்லாமல் விரைவாகவே சிபிஅய் எம்எல் நடத்திய நவம்பர் 9 பேரணி, நவம்பர் 4 பேரணி பற்றிய ஊடகப் பிரச்சாரத்தை மவுனமாக்கியது. அய்க்கிய ஜனதாதள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணியினர், பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறார்கள். நிதிஷ் குமார் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பது பற்றி வாய் திறப்பதில்லை.
தன் கோரிக்கைகளை ஆதரிப்பவருக்கு 2014 தேர்தலில்தான் ஆதரவு தருவேன் என்று அவர் பேசியது, விசயத்தை மேலும் குழப்பியது. அப்படியானால் பிஜேபியுடன் கூட்டணி என்னவானது என்ற கேள்வி எழுந்தது.
ஒவ்வொரு பேச்சாளரும் எம்எல் கட்சியின் பேரணியில் நிதிஷ் குமாரின் இரட்டை வேடத்தைத் திறம்பட அம்பலப்படுத்தினர். மாலெ கட்சியின் பொதுச்செயலாளர் திபங்கர்,வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ் அமைச்சராக இருந்தபோது பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார் என்பதை சுட்டிக் காட்டினார். இப்போது பீகாரை தங்கள் சொந்த ஜமீன் என நினைக்கும் புதிய ஜமீன்தார்கள் சிலர் வந்து விட்டனர் எனவும், மத்தியில் அய்முகூ, மாநிலத்தில் தேஜமு அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், வெற்றிடத்தை இடதுசாரிகள் மூன்றாம் அணிகொண்டு நிறைவு செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
திபங்கர் மேலும் பேசியதாவது
“நிதிஷின் பொய்கள் இனியும் எடுபடாது. மகத்தான பேரணி நடத்திய உங்களுக்கு நான் நன்றி சொல்லும் போதே, மாநில மக்களாகிய நீங்கள், மேலும் பெரிய போராட்டங்களுக்கு தயாராகுங்கள் என அழைப்பு விடுக்கிறேன். உயிரைத் தந்த தியாகிகளுக்கும், சிறையில் இருக்கும் தோழர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். வளர்ச்சி என்ற பெயரால் ஏழை மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வாரச் சாகுபடியாளர்களின் உரிமைகளை முன்வைத்த பந்தோபாத்தியாயா ஆணைய பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. சூறையாடல், கொள்ளைகள், கூட்டு வன்புணர்ச்சி, கொலை, கடத்தல் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. கடந்த 7 ஆண்டுகளில் தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இவற்றில் எதைப் பற்றியும் அக்கறை இல்லாத நிதிஷ்குமார், பீகார் மாறி விட்டதாகத் திரும்ப திரும்பப் பேசுகிறார். நிதிஷ் குமாரின் அதிகார் பேரணிக்கு, மிரட்டி பணம் வசூல் செய்தனர். சூன் 3 2011ல் பார்பெஸ்கஞ்சில் இஸ்லாமியர்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இப்போது நிதிஷ் அதிகார் ராலிக்காக பயணம் மேற்கொண்டபோது மதுபனி, அவுரங்காபாத், பாரியா, கயா மற்றும் பல இடங்களில் போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பதானி தோலா படுகொலைகளைச் செய்தவர்கள் தண்டனையை ரத்து செய்ததன் மூலம் நீதி படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திலும் நிதிஷ் குமாரின் அரசாங்கத்தின் பாத்திரம் சந்தேகத்திற்குரியது.’’
பேரணியில் எம்எல் கட்சியின் தலைவர்கள் சுவதேஷ் பட்டாச்சார்யா, கார்த்திக்பால், கவிதா கிருஷ்ணன், திரேந்திரஜா, ஜார்கண்ட் மாநில பகோதர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத்சிங் மகாராஷ்டிரா லால்நிசான் லெனினிஸ்ட் கட்சியின் பீம்ராவ் பன்சாத், மேற்கு வங்கத்தின் புட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர், பஞ்சாபின் கம்யூனிஸ்ட் தலைவர் மங்கத்ராம் பஸ்லா, ஏஅய்சிசிடியு பொதுச்செயலாளர் சுவப்பன் முகர்ஜி ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர் கழக பொதுச்செயலாளர் சக்கீல் அஞ்சும் ஆகியோரும் பேசினார்கள்.
சிபிஅய் பீகார் மாநில செயலாளர் ராஜேந்திரசிங் சிபிஅய்எம் மாநில செயலாளர் விஜய்காந்த் தாகூர் ஆகியோரும் மேடையில் இருந்தனர். சோசலிச நீரோட்டத்தை சேர்ந்த பீகார் மாநில முன்னாள் அமைச்சர்கள் ஹிந்த்கேசரியாதவ் ராம்தேவ்சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திரயாதவ் ஆகியோர் பேசினர். ஹிந்த்கேசரிக்கு 70 வயதுக்கு மேலாகிறது. அவர் முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் முன்னணியில் சாராய வியாபாரிகளால் தாக்கப்பட்டதையும், காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் எடுத்து சொல்லி தன் காயங்களை காட்டினார்.
கட்சி பேரணியில் எட்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. வறியவர் விரோத, விவசாய விரோத கொள்கைகள். உடனடியாய் நீக்கப்பட வேண்டும், அனைத்தும் தழுவிய நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள், நீர்ப்பாசனம் ஆகியவை உடனே வேண்டும் போன்றவை தீர்மானங்களில் இடம் பெற்றன. பேரணி அடுத்து வர உள்ள மாணவர் சங்க தேர்தல்களில் டெல்லியிலும் பாட்னாவிலும், அரியணையில் உள்ள மாணவர் விரோத, கல்வி விரோத சக்திகளை முறியடிக்குமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தது.