களம்
கூடங்குளம்
அணுஉலையை மூடு
22.11.2012 அன்று சர்வதேச மீனவர் தினம் தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்பட்டது. மாலெ கட்சி திருநெல்வேலியில் கண்டனக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் உரையாற்றினார். கட்சியினுடைய மாவட்டத் தலைவர்கள் கருப்பசாமி, கணேசன், உள்ளிட்ட தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஏஅய்சிசிடியுவில் இணைக்கப்பட்டுள்ள மீனவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கட்சியினுடைய மாவட்ட செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் மேரி ஸ்டெல்லா, ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சுசீலா, மீனவர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆன்றோ லெனின் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். களச்செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்